ராயல் என்பீல்டு பைக்கை விட குறைவான விலையில் மாருதி கார்! 33 கிலோ மீட்டர் மைலேஜை வேற வாரி வழங்குது!

இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso). ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 1,954 எஸ்-பிரெஸ்ஸோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 2,895 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Maruti Suzuki S-presso Interior

அதாவது 941 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார், விற்பனையில் 33 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில்தான் இவ்வளவு பெரிய வீழ்ச்சி என்றால், மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் நிலைமை இன்னும் மோசம்.

ஆம், வி3 கார்ஸ் தள தரவுகளின்படி, கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3,396 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி வெறும் 1,954 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Maruti Suzuki S-presso

இந்த வகையில் பார்த்தால், 1,442 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 42.46 சதவீத வீழ்ச்சி ஆகும். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இது இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாகும். தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 3.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

இது ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) பைக்கின் பார்சிலோனா ப்ளூ மற்றும் பிளாக் ரே ஆகிய கலர் ஆப்ஷன்களின் விலையை விட குறைவு ஆகும். ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கின் பார்சிலோனா ப்ளூ மற்றும் பிளாக் ரே கலர் ஆப்ஷன்களின் விலை 3.55 லட்ச ரூபாயாக இருக்கிறது.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.25 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரானது மிகவும் விலை குறைவானதுதான். இந்திய சந்தையில் முன்பெல்லாம்தான் விலை குறைவான கார்களுக்கு 'டிமாண்ட்' இருந்தது. ஆனால் தற்போது விலை குறைவான கார்களின் விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மட்டுமல்லாது, பெரும்பாலான விலை குறைவான கார்களின் விற்பனையும் தற்போது மந்தமாகதான் இருக்கிறது.

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை எண்ணிக்கை சிறப்பாக இல்லாவிட்டாலும் கூட, மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, இது நல்ல ஆப்ஷன்தான். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன.

அத்துடன் ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features), மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் கொண்டுள்ளது. 17.78 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரில் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் (Renault Kwid), மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) மற்றும் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Sunday, February 22, 2026, 16:57 [IST]
English summary
Maruti suzuki s presso sales report january 2026 42 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+