சின்ன, சின்ன கார்களை வெச்சிக்கிட்டு மாருதி ஆட்டம் காட்டுது! ஜூனில் விற்பனை 2 லட்சத்தை கடந்தது!
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, தனது 2026 ஜூன் மாத விற்பனை விவரங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் சந்தையையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஜூன் மாதத்தில் மாருதி சுஸுகியின் உள்நாட்டு விற்பனை 23.78 சதவீதம் அதிகரித்து புதிய சாதனை படைத்துள்ளது.
ஏற்றுமதி மற்றும் பிற நிறுவனங்களுக்கான சப்ளை (OEM) என அனைத்தையும் சேர்த்து, மாருதியின் ஒட்டுமொத்த விற்பனை 2,00,390 யூனிட்களைத் தொட்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் விற்பனையான 1,67,993 யூனிட்களுடன் ஒப்பிடும்போது, இது 19.28 சதவீத அசுர வளர்ச்சியாகும்.

ஆனால், வியக்க வைக்கும் வகையில் கடந்த 2026 மே மாதத்தில் பதிவான 1,90,337 யூனிட்கள் என்ற மாபெரும் உச்சத்தை விட மாருதி சுஸுகியின் இந்த ஜூன் மாத உள்நாட்டு விற்பனை சற்றே குறைந்துள்ளது. இருப்பினும், மாருதியின் அனைத்து கார் மாடல்களுக்கும் சந்தையில் இருக்கும் அதீத மவுசு இன்னும் குறையவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
மாருதியின் பட்ஜெட் விலை காரான 'மினி' பிரிவில் (ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ) விற்பனை அப்படியே இரட்டிப்பாகி, 11,416 யூனிட்களை எட்டியுள்ளது. இது கடந்தாண்டின் 6,414 யூனிட்களை விட 77.99 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஸ்விஃப்ட், பலேனோ, வேகன்ஆர் போன்ற கார்கள் அடங்கிய 'காம்பாக்ட் மற்றும் மிட்-சைஸ்' பிரிவின் விற்பனை எண்ணிக்கை 15.6 சதவீதம் உயர்ந்து 63,815 யூனிட்களாக அதிகரித்துள்ளது.

மாருதி சுஸுகி ஈக்கோ வேன் விற்பனையும் 9.53 சதவீதம் அதிகரித்து கடந்த மாதத்தில் 10,230 யூனிட்கள் ஆக பதிவாகியுள்ளது. இவற்றை போன்று, மாருதியின் MPV மற்றும் SUV கார்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. பிரெஸ்ஸா, எர்டிகா, இ-விட்டாரா, ஃபிரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, விக்டோரிஸ் மற்றும் XL6 ஆகிய வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 28.74 சதவீதம் அதிகரித்து 61,726 யூனிட்களைத் தொட்டுள்ளது.
இதன் மூலம் மாருதி சுஸுகியின் உள்நாட்டு பயணிகள் கார்களின் ஒட்டுமொத்த விற்பனை 23.78 சதவீதம் அதிகரித்து 1,47,187 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் மாருதியின் ஆதிக்கம் தொடர்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் மாருதி சுஸுகி வாகனங்களின் ஏற்றுமதி 13.02 சதவீதம் அதிகரித்து 42,768 யூனிட்களாக உயர்ந்துள்ளது.
அதேநேரம், பிற கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கான சப்ளை (OEM) 15.21 சதவீதம் குறைந்து 7,472 யூனிட்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. சூப்பர் கேரி என்கிற மாருதி சுஸுகியின் இலகுரக வணிக வாகனத்தின் விற்பனை 21.78 சதவீதம் அதிகரித்து 2,963 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு விற்பனை (சூப்பர் கேரி உட்பட) 23.74 சதவீதம் அதிகரித்து 1,50,150 யூனிட்களாக உள்ளது.
| பிரிவு (Category) | ஜூன் 2026 | ஜூன் 2025 | வித்தியாசம் (Diff) | ஆண்டுவாரி வளர்ச்சி (YoY %) |
| மினி (ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ) | 11,416 | 6,414 | 5,002 | +77.99 |
| காம்பாக்ட் + மிட்-சைஸ் | 63,815 | 55,205 | 8,610 | +15.60 |
| யுட்டிலிட்டி வாகனங்கள் (UV) | 61,726 | 47,947 | 13,779 | +28.74 |
| வேன் (ஈகோ) | 10,230 | 9,340 | 890 | +9.53 |
| வணிக வாகனங்கள் (சூப்பர் கேரி) | 2,963 | 2,433 | 530 | +21.78 |
| பிற OEM-களுக்கான விற்பனை | 7,472 | 8,812 | -1,340 | -15.21 |
| ஒட்டுமொத்த ஏற்றுமதி (Exports) | 42,768 | 37,842 | 4,926 | +13.02 |
| ஒட்டுமொத்த விற்பனை (Grand Total) | 2,00,390 | 1,67,993 | 32,397 | +19.28 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதேபோல், கடந்த ஏப்ரல்-ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மாருதி சுஸுகி நிகழ்த்தியிருக்கும் சாதனை அசாத்தியமானது. உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 33.45 சதவீதம் அதிகரித்து 5,25,228 யூனிட்களாக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி, சூப்பர் கேரி விற்பனை மற்றும் பிற கார் நிறுவனங்களுக்கான சப்ளை என அனைத்தையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த காலாண்டு விற்பனை 29.34 சதவீதம் அதிகரித்து 6,82,724 யூனிட்களை எட்டி அசத்தியுள்ளது.
மாருதி சுஸுகி இத்துடன் நிறுத்தப் போவதில்லை. இந்த ஜூலை மாத இறுதியில், புத்தம் புதிய அம்சங்கள், அட்டகாசமான ஸ்டைல் மற்றும் புதிய டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் கூடிய மேம்படுத்தப்பட்ட 'பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்' காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதுமட்டுமின்றி, மேம்படுத்தப்பட்ட புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மற்றும் அதிநவீன எலெக்ட்ரிக் 7-சீட்டர் MPV காரையும் மாருதி தீவிரமாக சோதனை செய்து வருகிறது. இவை இரண்டும் அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கார் பிரியர்களிடையே ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.
விற்பனை எண்ணிக்கைகள் குறித்த அட்டவணை புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications