ஒரே மாதத்தில் 2 லட்சம் பேர் வாங்கிய மாருதி கார்கள்! மலிவு விலையில் கிடைத்தால் இதுதான் நடக்கும்!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை ஆனது கடந்த ஒரே மாதத்தில் 2 லட்சம் யூனிட்கள் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. இதற்கு வழக்கம்போல், மாருதி சுஸுகியின் அளவில் சிறியதான காம்பாக்ட் கார்களே பெரிதும் பங்களித்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை அசால்ட்டாக விற்பனை செய்து வருகிறது. இது கடந்த மே மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை இந்தியாவில் மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.

maruti suzuki car sales

சரியாக சொல்ல வேண்டுமென்றால், 2 லட்சத்து 774 வாகனங்களை கடந்த மாதத்தில் மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2025ஆம் ஆண்டில் இதே மே மாதத்தில் வெறும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 858 யூனிட்களாக மட்டுமே பதிவாகி இருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது மாருதி சுஸுகியின் வாகனங்கள் விற்பனை ஆனது 34.9% அதிகரித்துள்ளது.

இந்த விற்பனை எண்ணிக்கைகளில் மாருதி சுஸுகியின் கார்கள், வேன்கள் மற்றும் கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கைகள் அடங்குகின்றன. மேலும், மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி வாகனங்களின் எண்ணிக்கையும் அடங்குகிறது. மற்ற கார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை கழித்தால், 1,93,535 மாருதி சுஸுகி வாகனங்கள் கடந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Category May 2026 May 2025 Growth
Domestic Sales (PV + LCV) 1,93,535 1,38,690 39.5%
Domestic Sales (Including OEM) 2,00,774 1,48,858 34.9%
Exports 41,914 31,219 34.3%
Total Sales 2,42,688 1,80,077 34.8%
maruti suzuki car sales

அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டின் இதே மே மாதத்தில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 690 மாருதி சுஸுகி வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன் மூலம் பார்க்கையில், இந்தியாவில் மாருதி சுஸுகி வாகனங்களின் விற்பனை ஆனது 39.5% அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 1,93,535 மாருதி சுஸுகி வாகனங்களில் கார்கள் மற்றும் வேன்கள் மட்டும் 1,90,337 ஆகும்.

அதாவது, மீதி 3 ஆயிரத்து 198 யூனிட்கள் மட்டுமே மாருதி சுஸுகியின் கமர்ஷியல் வாகனங்கள் ஆகும். 2025ஆம் ஆண்டின் மே மாதத்தில் வெறும் 1 லட்சத்து 35 ஆயிரத்து 962 கார் மற்றும் வேன்கள் மட்டுமே மாருதி சுஸுகியில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், மாருதி சுஸுகியின் கார் & வேன்கள் விற்பனை ஆனது 40% அதிகரித்துள்ளது.

Category May 2026 May 2025 Growth
Passenger Cars 97,830 68,736 42.3%
Utility Vehicles 79,267 54,899 44.4%
Vans (Eeco) 13,240 12,327 7.4%
Total PV Sales 1,90,337 1,35,962 40.0%

மாருதி சுஸுகியில் இருந்து வேன் மாடலாக ஈக்கோ மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த மாதத்தில் 13 ஆயிரத்து 240 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தவிர்த்து, 1,90,337 கார் & பைக்குகளில் மீதி எல்லாமே கார்கள் ஆகும். 2025 மே மாதத்தில் 12 ஆயிரத்து 327 ஈக்கோ வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இவ்வளவு நேரம் நாம் பார்த்த விற்பனை எண்ணிக்கைகள் இல்லாமல், கடந்த மாதத்தில் 41 ஆயிரத்து 914 மாருதி சுஸுகி வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2025 மே மாதத்தில் 31 ஆயிரத்து 219 வாகனங்களை மட்டுமே மாருதி சுஸுகி ஏற்றுமதி செய்திருந்தது. உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டையும் சேர்த்து கடந்த மாதத்தில் மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 688 மாருதி சுஸுகி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பதற்கு இந்த விற்பனை எண்ணிக்கைகளே சாட்சியாகும். குறிப்பாக, மாருதி சுஸுகி கார்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. மாருதியில் இருந்து வரும் மாதங்களில் பல புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதால், விற்பனை எண்ணிக்கை இதனை காட்டிலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

Article Published On: Thursday, June 4, 2026, 20:34 [IST]
English summary
Maruti suzuki sold nearly 2 lakh cars in may 2026 in india check all details here
மேலும்... #maruti suzuki #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out