ஹைட்ரஜன் இன்ஜின் உடன் விற்பனைக்கு வர போகும் மாருதி ஸ்விஃப்ட்! இவ்ளோ அதிகமான மைலேஜை குடுக்குமா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ஆட்டோ கார் இந்தியா தளத்தில் வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17,829 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 22.18 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars April 2026), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் 8வது இடத்தை பிடித்துள்ளது.

Maruti Suzuki Swift Front View

இந்த பட்டியலில் முதல் 7 இடங்களில் முறையே மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire), டாடா பன்ச் (Tata Punch), மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx), மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) ஆகியவை உள்ளன.

இந்த வரிசையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், 8வது இடம் பிடித்துள்ளது. அதே நேரத்தில் 9வது மற்றும் 10வது இடங்களில் முறையே ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) ஆகிய கார்கள் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Maruti Suzuki Swift Side Design

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என 2 இன்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. முன்பு மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் இருந்தது. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் எந்தவொரு காரிலும் தற்போது டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதில்லை.

அனைத்து டீசல் இன்ஜின் கார்களின் விற்பனையையும் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நிறுத்தி விட்டது. ஆனால் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் எதிர்காலத்தில் ஹைட்ரஜன் இன்ஜின் (Hydrogen) வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் சுஸுகி ஸ்விஃப்ட் கார் சமீபத்தில் நடைபெற்ற 2026 வியன்னா மோட்டார் சிம்போஸியம் (2026 Vienna Motor Symposium) நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

எனவே எதிர்காலத்தில் இந்திய சந்தையில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வரலாம். ஆனால் இதற்கு அதிக காலம் ஆகும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்கள், வழக்கமான ஐசி இன்ஜின் கார்களை விட 3 மடங்கு அதிக மைலேஜ் வழங்கும் என்பதும், சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்தான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் மத்திய அரசு, வழக்கமான பெட்ரோல், டீசலை விட, மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குதான் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்களும் படிப்படியாக மாற்று எரிபொருட்கள் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு மாற தொடங்கியுள்ளனர். எனவே எதிர்காலத்தில் ஹைட்ரஜனில் இயங்கும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் வந்தால், வாடிக்கையாளர்களை கவர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

Article Published On: Tuesday, May 12, 2026, 23:54 [IST]
English summary
Maruti suzuki swift sales report april 2026 22 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+