33 கிமீ மைலேஜ் தரும் காரை இந்த விலையில் விக்க மாருதியால் மட்டும்தான் முடியும்! குடுக்கற காசுக்கு ஒர்த்!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14,833 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16,269 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 1,436 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Maruti Suzuki Swift Side Design

இது 8.83 சதவீத வீழ்ச்சி ஆகும். இதன் காரணமாக நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars February 2026) மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருக்கு 8வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 7 இடங்களில் முறையே டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire), டாடா பன்ச் (Tata Punch), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) ஆகிய கார்கள் உள்ளன.

Maruti Suzuki Swift

இந்த வரிசையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் 8வது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது. இருப்பினும் இந்த சரிவில் இருந்து மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கூடிய விரைவில் மீண்டு வரும் என நாம் உறுதியாக நம்பலாம். இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பது என்பதுதான் இதற்கு காரணம்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், சுஸுகி கனெக்ட் கனெக்டட் கார் தொழில்நுட்பம், ரியர் ஏசி வெண்ட்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.

அத்துடன் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features) மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் கொண்டுள்ளது.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் 32.85 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.79 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 8.65 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு ஆகும். எனவே கூடிய விரைவில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வந்து, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 19, 2026, 23:15 [IST]
English summary
Maruti suzuki swift sales report february 2026 9 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+