33 கிமீ மைலேஜ்! விலை வெறும் 5.79 லட்சம் மட்டுமே! இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார் இதுதான்!

இந்திய சந்தையில் கடந்த சில வருடங்களாகவே எஸ்யூவி ரக கார்கள்தான் (SUV Cars), முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதன் காரணமாக செடான் ரக கார்களுக்கு (Sedan Cars) வரவேற்பு குறைந்து விட்டது. ஆனால் ஹேட்ச்பேக் ரக கார்களின் (Hatchback Cars) விற்பனை தொடர்ந்து சிறப்பாகவே இருந்து வருகிறது.

குறிப்பாக ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. கடந்த 2025-26ம் நிதியாண்டில் (2025 ஏப்ரல் 1 - 2026 மார்ச் 31) இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் ரக கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் பெற்றுள்ளது.

Maruti Suzuki Swift Side Design

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2025-26ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 1,85,320 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது கடந்த 2024-2025ம் நிதியாண்டுடன் (2024 ஏப்ரல் 1 - 2025 மார்ச் 31) ஒப்பிடும்போது, 3 சதவீத வளர்ச்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் நமக்கு இது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் முதல் தலைமுறை மாடல் கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது விற்பனையில் இருப்பது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 4வது தலைமுறை மாடல் ஆகும். கடந்த 2024ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் விற்பனையில் இருந்து வருகிறது.

Maruti Suzuki Swift

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.79 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 8.65 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் சுஸுகி கனெக்ட் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.

அத்துடன் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படுகின்றன.

அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வசதிகள், சிறப்பான மைலேஜ் மற்றும் சரியான விலை நிர்ணயம் போன்ற காரணங்களால்தான், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை இந்திய சந்தையில் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

Article Published On: Sunday, April 26, 2026, 13:35 [IST]
English summary
Maruti suzuki swift sales report financial year 2025 26 3 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+