மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிரடி முடிவு! மிரண்டு போன போட்டி நிறுவனங்கள்! இதுனாலதான் அவங்க நம்பர்-1!

ஒரு கார் நிறுவனம் வெற்றி பெற வேண்டும் என்றால், விற்பனைக்கு பிந்தைய சேவைகள் சிறப்பாக இருக்க வேண்டும். அதாவது சர்வீஸ் சிறப்பாக இருப்பது மிகவும் அவசியம். ஒரு புதிய காரை வாங்கும்போது, சர்வீஸ் சிறப்பாக செய்யப்படுகிறதா? என்பதையும் வாடிக்கையாளர்கள் பார்க்கின்றனர். ஒருவேளை சர்வீஸ் சிறப்பாக இல்லை என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் காரை வாடிக்கையாளர்கள் வாங்குவதில்லை.

இந்தியாவை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம்தான், நம்பர்-1 கார் நிறுவனமாக இருந்து வருகிறது. இதற்கு அந்த நிறுவனத்தின் சர்வீஸ் சிறப்பாக இருப்பதும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு நாடு முழுக்க சர்வீஸ் சென்டர்கள் உள்ளன.

IOCL Petrol Bunk

இந்தியாவின் 2,882 நகரங்களில், 5,780 சர்வீஸ் சென்டர்களை மாருதி சுஸுகி நிறுவனம் கொண்டுள்ளது. எனவே எங்கு பிரச்சனை ஏற்பட்டாலும், காரை உடனடியாக சர்வீஸ் செய்து கொள்ள முடியும். ஆனால் கூடிய விரைவில், மாருதி சுஸுகி நிறுவனம் தனது சர்வீஸ் சென்டர்களின் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தவுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL - Indian Oil Corporation Limited) ஆகிய நிறுவனங்களுக்கு இடையே தற்போது புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில், மாருதி சுஸுகி நிறுவனம் சர்வீஸ் சென்டர்களை அமைக்கவுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியின் மூலமாக இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Maruti Suzuki Alto K10

சிறிய அளவிலான பிரச்சனைகளை சரி செய்யும் வசதிகளை இந்த சர்வீஸ் சென்டர்கள் கொண்டிருக்கும். அத்துடன் வழக்கமான கார் பராமரிப்பு பணிகளையும் இங்கு மேற்கொள்ள முடியும். சில சமயங்களில், பெரிய அளவிலான பிரச்சனைகளையும் கூட, இந்த சர்வீஸ் சென்டர்களில் மேற்கொள்ள முடியும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா முழுக்க தற்போது 41 ஆயிரத்திற்கும் அதிகமான பெட்ரோல் பங்க்குகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் கொண்டுள்ளது. இதில், தேர்ந்து எடுக்கப்படும் சில பெட்ரோல் பங்க்குகளில் மட்டும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர்கள் அமைக்கப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பெட்ரோல் பங்க்குகளில் சர்வீஸ் சென்டர்களை அமைப்பதன் மூலம், இனிமேல் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை சர்வீஸ் செய்வது, முன்பை காட்டிலும் மிகவும் எளிமையான ஒரு விஷயமாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இதன் காரணமாக மாருதி சுஸுகி நிறுவன கார்களின் மீது, வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பெருகும். இதன் விளைவாக மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விற்பனை மேலும் உயரலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. இது போன்ற நடவடிக்கைகள் மூலமாகவே இந்தியாவின் நம்பர்-1 கார் நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுஸுகி மிக நீண்ட காலமாக தக்க வைத்து கொண்டிருக்கிறது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 13, 2026, 17:37 [IST]
English summary
Maruti suzuki to set up service centers at iocl petrol bunks check all details here
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+