தளபதி மாதிரி ஆண்ட பரம்பரைகளுக்கு எல்லாம் ஆட்டம் காட்டும் புதுமுகம்! எதிர்காலமே இதுதானா!

மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து சமீபத்தில் வெளிவந்த மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்று விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris). கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், இந்திய சந்தையில் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும்.

இந்த சூழலில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Saes Report) ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 15,240 மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Maruti Suzuki Victoris Side Design

இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars January 2026), மாருதி சுஸுகி விக்டோரிஸ் 10வது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 9 இடங்களில் முறையே டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி டிசையர், டாடா பன்ச், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, மாருதி சுஸுகி பலேனோ மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகிய கார்கள் உள்ளன.

Maruti Suzuki Victoris

மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அப்போது இந்த கார் விற்பனையிலேயே இல்லை. ஆனால் வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டை மேற்கொள்ள முடியாது என்றாலும் கூட, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டை மேற்கொள்ள முடியும்.

இதன்படி பார்த்தால் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6,210 மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த ஜனவரி மாதத்தில் அதை விட கூடுதலாக 9,030 மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 15,240 என்ற மிக பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை இந்த கார் பதிவு செய்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் ஆரம்ப விலை 10.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் வருகை, இந்திய சந்தையில், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் என நீண்ட காலமாக மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள கார்களுக்கு எல்லாம் மிகவும் சவாலாக மாறியுள்ளது.

மைலேஜ் (Mileage), வசதிகள் (Features) மற்றும் பாதுகாப்பு (Safety) என இந்திய வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களிலும் தலைசிறந்து விளங்குவதால், வரும் காலங்களிலும், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, February 2, 2026, 22:34 [IST]
English summary
Maruti suzuki victoris sales report january 2026 15240 units sold
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+