உலகையே மிரள விடும் மாருதி சுஸுகி கார்! விலை இவ்ளோதானா! இந்தியாவில் இருந்து ஏற்றுமதி தொடங்கியது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris). கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் அறிமுகமே செய்யப்பட்டது. ஆனால் மிக குறுகிய காலத்திலேயே இந்திய வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி விக்டோரிஸ் மாறி விட்டது.

தற்போது இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் கார்களில் மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரும் ஒன்று. இந்தியாவை அடுத்து சர்வதேச சந்தைகளிலும் கலக்க மாருதி சுஸுகி விக்டோரிஸ் தற்போது தயாராகி விட்டது. ஆம், மாருதி சுஸுகி நிறுவனம் விக்டோரிஸ் காரின் ஏற்றுமதி பணிகளை தொடங்கியுள்ளது.

Maruti Suzuki Victoris

முதற்கட்டமாக இந்தியாவில் இருந்து 450 விக்டோரிஸ் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் இருந்து கப்பல் மூலமாக அவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி நிறுவனம் விக்டோரிஸ் காரை இந்தியாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விக்டோரிஸ் கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

இதன்படி லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா போன்ற பிராந்தியங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. மாருதி சுஸுகி நிறுவனம் சர்வதேச சந்தைகளில் இந்த காரை விக்டோரிஸ் என்ற பெயருக்கு பதிலாக, அக்ராஸ் (Across) என்ற பெயரில் விற்பனை செய்யவுள்ளது.

Maruti Suzuki Victoris SUV

மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.50 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 19.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், இந்திய சந்தையில் மிகவும் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக மாருதி சுஸுகி விக்டோரிஸ் மாறியுள்ளது.

மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகளையும் (Safety features), மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், இந்திய சந்தையில், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், ஹோண்டா எலவேட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, January 16, 2026, 23:52 [IST]
English summary
Maruti suzuki victoris suv exports begin check all details here
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+