விக்கவே விக்காதுனு சொன்ன கார்! இப்ப வாங்கணும்னா தலைகீழா நின்னு தண்ணி குடிக்கணும்! ஷோரூம்ல கூட்டம் அலைமோதுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris). இது இந்திய சந்தைக்கு புது வரவு ஆகும். கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.50 லட்ச ரூபாயாக உள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனா (Arena) டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்படும் கார்களிலேயே இதுதான் மிகவும் விலை உயர்ந்தது ஆகும்.

Maruti Suzuki Victoris SUV

மாருதி சுஸுகி நிறுவனம் தனது நெக்ஸா (Nexa) பிரீமியம் டீலர்ஷிப்கள் மூலமாகதான் விக்டோரிஸ் காரை விற்பனை செய்யும் என முதலில் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அரேனா ஷோரூம்கள் மூலமாக விக்டோரிஸ் விற்பனை செய்யப்படும் என மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்தபோது, பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.

ஏனெனில் விலை உயர்ந்த இந்த காரை அரேனா ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்தால் நிறைய பேர் வாங்க மாட்டார்கள் என்ற கருத்து நிலவியது. ஆனால் இது போன்ற கருத்துக்களை எல்லாம் ஒதுக்கி தள்ளி விட்டு, மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், விற்பனையில் வீர நடை போட்டு கொண்டுள்ளது.

Maruti Suzuki Victoris

மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ஆட்டோ பண்டிட்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் 13,701 மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் அதற்கு முந்தைய மாதம், அதாவது நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் வெறும் 11,062 மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 2,639 மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 24 சதவீத வளர்ச்சி ஆகும்.

மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும் (Crash Tests), முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது.

அத்துடன் இதன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஒரு கிலோவிற்கு 28.65 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக உள்ளது. மேலும் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்ற பல்வேறு அதிநவீன வசதிகளையும், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கொண்டுள்ளது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்துதான், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரை, மிகவும் வெற்றிகரமான தயாரிப்பாக மாற்றியுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா சியரா (Tata Sierra), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி விக்டோரிஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

Article Published On: Saturday, May 23, 2026, 14:59 [IST]
English summary
Maruti suzuki victoris suv sales report april 2026 24 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+