டாடாவை அடிச்சு நொறுக்கீட்டு மாருதி மேல வரான்! இந்தியால இந்த மாதிரி ஒரு காரை இதுவரைக்கும் யாரும் பாத்தது இல்ல!
உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day) வரும் ஜூன் 5ம் தேதி (June 5) கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் இந்தியாவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் முதல் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனம் (Flex Fuel Vehicle) அறிமுகம் செய்யப்படவுள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) தெரிவித்துள்ளார்.
மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த காலங்களில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 2 ஃப்ளக்ஸ் ஃப்யூயல் கார்களை காட்சிப்படுத்தியுள்ளது. அவை மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) ஃப்ளக்ஸ் ஃப்யூயல் மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) ஃப்ளக்ஸ் ஃப்யூயல் ஆகியவை ஆகும்.

இதில், மாருதி சுஸுகி வேகன் ஆர் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் கார், கடந்த 2024ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ (Bharat Mobility Expo) வாகன திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மாருதி சுஸுகி வேகன் ஆர் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.
இது E20 முதல் E85 வரையிலான எரிபொருளில் இயங்கும் தன்மை வாய்ந்தது. இங்கே E20 என்பது 20 சதவீதம் எத்தனால் மற்றும் 80 சதவீதம் பெட்ரோல் கலந்த கலவை ஆகும். அதே நேரத்தில் E85 என்பது 85 சதவீதம் எத்தனால் மற்றும் 15 சதவீதம் பெட்ரோல் கலந்த கலவை ஆகும்.

இதற்கு இடைப்பட்ட எந்தவொரு எத்தனால்-பெட்ரோல் கலவையிலும் மாருதி சுஸுகி வேகன் ஆர் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் இயங்கும். இது 79 சதவீதம் சுற்றுச்சூழலுக்கு நட்பானது. மறுபக்கம் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் காரானது, கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி ஷோ (Japan Mobility Show) வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனிலும் 1.2 லிட்டர் இன்ஜின்தான் பொருத்தப்பட்டிருந்தது. இதுவும் E20 முதல் E85 வரையிலான எந்தவொரு எத்தனால்-பெட்ரோல் கலவையிலும் இயங்க கூடிய தன்மை வாய்ந்தது. இந்த 2 கார்களில் ஏதேனும் ஒன்றைதான் மாருதி சுஸுகி நிறுவனம் வரும் ஜூன் 5ம் தேதி அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.
மாருதி சுஸுகி வேகன் ஆர் மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஆகிய கார்களின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன்கள், அவற்றின் வழக்கமான வெர்ஷன்களை விட, சுமார் 40 ஆயிரம் ரூபாய் அதிகமான விலையில் (Price) அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்களின் பவர்ட்ரெயின்களில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. எனவே 40 ஆயிரம் ரூபாய் அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கரும்பு, சோளம் மற்றும் அரிசி ஆகியவற்றில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. கரும்பில் இருந்து ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 3,630 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அதே நேரத்தில் சோளம் மற்றும் அரிசி ஆகியவற்றில் இருந்து ஒரு லிட்டர் எத்தனால் தயாரிப்பதற்கு முறையே 4,670 லிட்டர் மற்றும் 10,790 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
மத்திய உணவு துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா இந்த தகவலை தெரிவித்துள்ளார். தண்ணீர் அதிகம் செலவானாலும் கூட, எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும் என்று கருதப்படுகிறது. அதாவது எத்தனாலை அதிக அளவில் எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம், இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் (Crude Oil) அளவு குறையும்.
இதன் மூலம் இந்தியாவின் அந்நிய செலாவணி (Forex) பாதுகாக்கப்படும். அத்துடன் விவசாய பொருட்களில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுவதால், இந்தியாவின் விவசாயிகளுக்கும் இதன் மூலம் நன்மைகள் ஏற்படும். மேலும் பெட்ரோல், டீசல் உடன் ஒப்பிடும்போது, எத்தனால் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. இது போன்ற காரணங்களால்தான், எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
இந்தியாவில் தற்போதைய நிலையில் ஒரு ஃப்ளக்ஸ் ஃப்யூயல் கார் கூட விற்பனையில் இல்லை. எனவே இந்தியாவில் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுஸுகி பெறவுள்ளதாக தெரிகிறது. முன்னதாக இந்த பெருமை டாடா (Tata) நிறுவனத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டாடா நிறுவனத்தின் முதல் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் காரின் அறிமுகம் தள்ளி போய் கொண்டே வருகிறது. அனேகமாக நடப்பு 2026ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோதான் டாடா நிறுவனத்தின் முதல் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் கார் விற்பனைக்கு வரும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications