பார்க்க சிறியதாக இருந்தாலும் ஏப்ரலில் 18 ஆயிரம் பேர் வாங்கிய கார்! உட்புற இடவசதிக்காகவே வாங்குறாங்க!
மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்றாக வேகன் ஆர் உள்ளது. இது கடந்த 2026 ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், வழக்கத்தை காட்டிலும் வேகன் ஆரின் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளது. அப்படி எத்தனை வேகன் ஆர் கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் உயரமான ஹேட்ச்பேக் வகை காராக வேகன் ஆர் விளங்குகிறது. அளவில் சிறியதாக இருப்பினும் காரின் உயரம் அதிகமாக உள்ளதால் 5 பேர் அமர்வதற்கு போதுமான இடவசதியை வழங்குகிறது. குறைவான விலையுடன் இத்தகைய தோற்றத்தையும், மற்ற மாருதி கார்களை போல அதிக மைலேஜையும் வழங்குவதால் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கிலான மக்கள் வேகன் ஆர் கார்களை வாங்குகின்றனர்.

இது கடந்த ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 18 ஆயிரத்து 648 வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெறும் 13 ஆயிரத்து 413 வேகன் ஆர் கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது.
இந்த வகையில் பார்த்தால், வேகன் ஆர் கார்களின் விற்பனை கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும் நடப்பாண்டு ஏப்ரலில் 39%, அதாவது 5 ஆயிரத்து 235 யூனிட்கள் அதிகரித்துள்ளது. கடந்த 2026 மார்ச் மாதத்திலும் ஏப்ரலை காட்டிலும் ஆயிரத்து 623 யூனிட்கள் குறைவாக 17 ஆயிரத்து 25 வேகன் ஆர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இவ்வாறு வழக்கத்தை விட அதிகமாக விற்பனையாகி இருப்பதன் மூலமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகம் விற்பனையான கார்கள் லிஸ்ட்டில் 5வது இடத்தை மாருதி சுஸுகி வேகன் ஆர் பிடித்துள்ளது. 2026ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் மக்கள் அதிகம் பேர் வேகன் ஆர் கார்களை வாங்கியுள்ளனர்.
LXi, VXi மற்றும் ZXi என்கிற மூன்று ட்ரிம் நிலைகளில், 11 விதமான வேரியண்ட்களில் வேகன் ஆர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.4.99 லட்சத்தில் இருந்து ரூ.6.95 லட்சம் வரையில் உள்ளன. இவ்வளவு குறைவான விலையில் கிடைப்பதினாலேயே பலரும் வேகன் ஆர் காரை வாங்குகின்றனர்.
1 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் வேகன் ஆர் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது CNG ஆப்ஷனிலும் கிடைக்கிறது. CNG ஆப்ஷனில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே இந்த கார் கிடைக்கும்.
அதுவே, வேகன் ஆர் பெட்ரோல் வெர்சனில் கூடுதலாக AGS கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. சிஎன்ஜி ஆப்ஷனில் வேகன் ஆரில் 30கிமீ-க்கும் அதிகமான மைலேஜை பெறலாம். பெட்ரோல் வெர்சனில் லிட்டருக்கு சராசரியாக 20கிமீ மைலேஜ் தருகிறது. வேகன் ஆரின் டாப் வேரியண்ட்களில் 7-இன்ச் டச் ஸ்க்ரீனை ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே சப்போர்ட் உடன் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் கார்களுள் மாருதி சுஸுகி வேகன் ஆரும் ஒன்றாகும். எத்தனை வருடங்கள் ஆனாலும் வேகன் ஆர் கார்கள் தொடர்ந்து விற்பனையாகும் என்பதை வெளிக்காட்டும் விதமாக கடந்த மாதத்தில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் இன்னும் பலர் புதியதாக வேகன் ஆர் கார்களை வாங்குவர் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications