கார் வேஸ்ட்னு மக்கள் தங்கத்துல காசை போட ஆரம்பிச்சுட்டாங்களா! 34 கிமீ மைலேஜ் குடுக்கும் வண்டிய வாங்கவே ஆள் இல்ல
'யானைக்கும் அடி சறுக்கும்' என்ற பொன்மொழி, மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) காருக்கு தற்போது பொருந்தி போயுள்ளது. ஆம், மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை, கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சரிவடைந்துள்ளது.
இது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும். மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 26 வருடங்கள் கடந்து விட்டன. கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுஸுகி வேகன் ஆர் கார், ஒவ்வொரு மாதமும் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம், மாருதி சுஸுகி வேகன் ஆர் காருக்கு நேரம் சரியில்லை போல. மாதாந்திர ரீதியில், வருடாந்திர ரீதியில் என எப்படி ஒப்பிட்டாலும், விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 14,575 வேகன் ஆர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய நவம்பர் மாதம், அதாவது 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் 14,619 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இந்த வகையில் பார்த்தால், 44 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 0.30 சதவீத வீழ்ச்சி ஆகும். இது மிகவும் சிறிய அளவிலான வீழ்ச்சிதான். ஆனால் வருடாந்திர ரீதியில் பார்த்தால், மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் பெரிய அளவிலான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அதாவது நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14,575 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17,303 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
இந்த வகையில் பார்த்தால் 2,728 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 15.77 சதவீத வீழ்ச்சி ஆகும். ஆனால் இது அதிக மைலேஜ் வழங்க கூடிய அதே நேரத்தில் குறைவான விலையில் கிடைக்க கூடிய கார்களில் ஒன்று என்பதால், கூடிய விரைவிலேயே இந்த சரிவில் இருந்து மீண்டு வந்து விடும் என நாம் உறுதியாக நம்பலாம்.
மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினின் மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.35 கிலோ மீட்டர் மைலேஜையும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 25.19 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்குகின்றன. மறுபக்கம் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினின் மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 23.56 கிலோ மீட்டர் மைலேஜையும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.43 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்குகின்றன.
அதே நேரத்தில் 1.0 லிட்டர் சிஎன்ஜி இன்ஜினின் மேனுவல் வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கின்றன. சிஎன்ஜி இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் இல்லை என்பதும், இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி பார்த்தால், வேகன் ஆர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.95 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி வேகன் ஆர் விலை குறைவான காராக இருந்தாலும் கூட, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள்உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் வழங்கப்படுகின்றன. டாடா டியாகோ (Tata Tiago) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி வேகன் ஆர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








