கிரேட் காளியே உக்காந்தாலும் தலை இடிக்காது! 34 கிமீ மைலேஜ் தரும் இந்த காரின் விலை முழுசா 5 லட்சம் கூட இல்ல!
இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் 'டால் பாய் ஹேட்ச்பேக்' (Tall Boy Hatchback) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). இதன் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 17,025 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 17,175 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 150 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 0.87 சதவீத வீழ்ச்சி ஆகும்.

இது மிகவும் சிறிய அளவிலான வீழ்ச்சிதான் என்பதால், மாருதி சுஸுகி வேகன் ஆர் கூடிய விரைவிலேயே மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என உறுதியாக நம்பலாம். மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் சிறிய அளவிலான வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் மிகவும் அதிகமாக விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars March 2026), 6வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் முறையே மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire), டாடா பன்ச் (Tata Punch), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) ஆகிய கார்கள் உள்ளன. இந்த வரிசையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் 6வது இடத்தை பிடித்துள்ளது.

மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் உயரம் 1,675 மிமீ ஆகும். இது டாடா நெக்ஸான் போன்ற எஸ்யூவி ரக கார்களை விட உயரமானது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது டாடா நெக்ஸான் காரின் உயரம் வெறும் 1,620 மிமீ ஆக மட்டுமே உள்ளது. எனவே அதிக உயரம் கொண்டவர்கள் கூட, மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் மிகவும் சௌகரியமாக பயணம் செய்ய முடியும்.
அத்துடன் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் 'டர்னிங் ரேடியஸ்' (Turning Radius) 4.7 மீட்டராக மட்டுமே உள்ளது. எனவே யூடர்ன் எடுப்பது மற்றும் நெருக்கடியான இடத்தில் பார்க்கிங் செய்வது போன்ற வேலைகளை எல்லாம் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் மிகவும் சுலபமாக செய்யலாம்.
அத்துடன் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், 17.78 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ என ஏராளமான வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் (Variants) ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக இருக்கின்றன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.95 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி வேகன் ஆர் ஏற்றதாக இருக்கும். இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற கார்களுக்கு எல்லாம் இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








