மிகவும் பிரபலமான மாருதி சுஸுகி காரின் விற்பனை நிறுத்தம்? அதிர்ச்சியில் உறைந்த இந்திய வாடிக்கையாளர்கள்!
மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் ஒரு சில கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அவ்வளவு சிறப்பான வரவேற்பு இல்லை. மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis) மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) ஆகிய கார்களை இதற்கு ஒரு உதாரணமாக கூற முடியும்.
இந்த 2 கார்களும் தற்போது விற்பனையிலேயே இல்லை. வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாத காரணத்தால் இக்னிஸ் மற்றும் சியாஸ் ஆகிய கார்களின் விற்பனையை மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தி விட்டது. இந்த வரிசையில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) காருக்கும் நல்ல வரவேற்பு இல்லை.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா டீலர்ஷிப் மூலமாக விற்பனை செய்யப்படும் எம்பிவி ரக காரான இது, வி3 கார்ஸ் தளத்தின் தரவுகளின்படி தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 3,400 யூனிட்கள் என்ற அளவில் மட்டுமே விற்பனையாகி வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 குறைவான விற்பனை எண்ணிக்கையையே பதிவு செய்துள்ளது.
ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், 3,527 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4,140 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 613 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 14.81 சதவீத வீழ்ச்சி ஆகும்.

நிலைமை இப்படியே போனால், இக்னிஸ் மற்றும் சியாஸ் கார்களின் வரிசையில் அடுத்து எக்ஸ்எல்6 காரின் விற்பனையை மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தி விடும் என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் விற்பனையை மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்துவதற்கான அறிகுறிகள் எதுவும் தற்போதைக்கு தென்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 11.52 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 14.48 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரில் 6 பேர் பயணம் செய்ய முடியும். இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.23 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன. இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் ஆகும். எனவே அதிக மைலேஜ் உடன், அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
கடைசியில் 3 பத்திகள் இணைக்கப்பட்டு, கூடுதல் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications