2, 3 குடும்பம் ஒன்னா போகலாம்! மாருதி களமிறக்க போகும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! கியா காலி!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara). இதுதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன.
அவை 49 kWh மற்றும் 61.1 kWh ஆகியவை ஆகும். இதில், 61.1 kWh பேட்டரி ஆப்ஷனின் அராய் அமைப்பு சான்று வழங்கிய டிரைவிங் ரேஞ்ச் (ARAI Driving Range) 543 கிலோ மீட்டர்களாக உள்ளது. சுஸுகி, டொயோட்டா (Toyota) மற்றும் டைஹாட்சு (Daihatsu) ஆகிய நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள ஹார்டெக்ட் இ பிளாட்பார்ம் அடிப்படையில்தான், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

இது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். இன்னும் ஒரு சில வாரங்களில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவே, மாருதி சுஸுகி நிறுவனம் தனது 2வது எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் 2வது எலெக்ட்ரிக் கார், எலெக்ட்ரிக் எம்பிவி (Electric MPV) ரகத்தை சேர்ந்ததாக இருக்கும். எனவே இந்த கார் 7 பேர் பயணம் செய்ய கூடியதாக இருக்கும். தற்போதைய நிலையில் ஒய்எம்சி (YMC) என்ற குறியீட்டு பெயரில் இந்த கார் அழைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ள அதே ஹார்டெக்ட் இ பிளாட்பார்ம் அடிப்படையில்தான், மாருதி சுஸுகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எம்பிவி காரும் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள அதே பேட்டரி ஆப்ஷன்கள்தான், இந்த எலெக்ட்ரிக் எம்பிவி காரிலும் வழங்கப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) ஆகிய எம்பிவி கார்களுக்கு எல்லாம் மேலாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் எம்பிவி கார் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 17-18 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இந்த விலையில் வந்தால், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) போன்ற எலெக்ட்ரிக் எம்பிவி ரக கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எம்பிவி கார் மிக கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலமாக இந்த எலெக்ட்ரிக் எம்பிவி கார் விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே இது பிரீமியமான எலெக்ட்ரிக் காராக இருக்கும். இந்த எலெக்ட்ரிக் கார் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வரும் மாதங்களில் வெளியாகும் என நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








