அடிமாட்டு விலையில் 7 சீட்டர் கார்! 1 கிமீ ஓட்ட 1 ரூபா மட்டுமே செலவு! மார்க்கெட்டை மிரள விட போகும் மாருதி!
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கு (Electric Cars) மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து முன்னணி நிறுவனங்களும் இந்திய சந்தையில் போட்டி போட்டு கொண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளன. தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) மற்றும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) போன்ற நிறுவனங்கள்தான், எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முன்னணியில் உள்ளன.
ஆனால் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) மிகவும் தாமதமாகதான் எலெக்ட்ரிக் கார் சந்தையில் நுழைந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara), வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் இனி இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் மிகவும் தீவிரமாக செயல்பட மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே கூடிய விரைவிலேயே மாருதி சுஸுகி நிறுவனத்தின் 2வது எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்கு வரவுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இ விட்டாரா, எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.
ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் 2வது எலெக்ட்ரிக் கார், எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்ததாக இருக்கும். எனவே இந்த காரில் 7 பேர் வரை சௌகரியமாக பயணம் செய்ய முடியும். ஆனால் இந்த எலெக்ட்ரிக் காருக்கு மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் பெயர் சூட்டவில்லை. இருப்பினும் தற்போதைய நிலையில் ஒய்எம்சி (YMC) என்ற குறியீட்டு பெயரில் இந்த எலெக்ட்ரிக் கார் அழைக்கப்பட்டு வருகிறது.

மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் காரானது, ஹார்டெக்ட்-இ (Heartect-e) பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்படவுள்ளது. இது சுஸுகி நிறுவனத்தின் தாய் நாடான ஜப்பானை சேர்ந்த நிறுவனங்களான டொயோட்டா (Toyota) மற்றும் டைகாட்சு (Daihatsu) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு வரும் அதே 49 kWh, 61 kWh பேட்டரி ஆப்ஷன்கள்தான் (Battery Options), மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் காரில் இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) முறையே 400 கிலோ மீட்டர்கள் மற்றும் 500 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் இது ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட காராக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் காரில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் பிரேக் ஹோல்டு போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அத்துடன் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற வசதிகளையும், மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் உடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) வெறும் 17 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலையில் வந்தால், இது இந்தியாவின் மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி ரக கார்களில் ஒன்றாக இருக்கும்.
அத்துடன் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரை போலவே, மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் காரிலும் பாஸ் (BAAS - Battery As A Service) திட்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஸ் முறை வழங்கப்படும்பட்சத்தில், மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 12 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த முறையை நீங்கள் தேர்வு செய்தால், ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 4 ரூபாய் என்ற அளவில் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இவை அனைத்தும் எதிர்பார்க்கப்படும் தகவல்கள் மட்டுமே. அதிகாரப்பூர்வமான தகவல்களை மாருதி சுஸுகி நிறுவனம் வரும் மாதங்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் கார் அனேகமாக அடுத்த ஆண்டு (2027) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது எலெக்ட்ரிக் கார் என்பதால், இயக்குவதற்கு குறைவான செலவே (Running Cost) ஆகும். அனேகமாக ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு வெறும் 1 ரூபாய் அல்லது 1.50 ரூபாய் வரை மட்டுமே செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மிகவும் குறைவான செலவில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.
மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் காரின் வருகை, இந்திய சந்தையில், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) எலெக்ட்ரிக் எம்பிவி காருக்கு, விற்பனையில் மிக கடுமையான போட்டியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது எர்டிகா (Maruti Suzuki Ertiga) என்ற 7 சீட்டர் எம்பிவி காரை விற்பனை செய்து வருகிறது. ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட இந்த காரின் விற்பனை மிகவும் அமோகமாக உள்ளது. அதை போலவே, மாருதி சுஸுகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எம்பிவி காரின் விற்பனையும் மிகவும் சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








