6 ஆயிரமாவது சர்வீஸ் சென்டரை திறந்த மாருதி சுஸுகி! எங்கேன்னு தெரியுமா?

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் எது என்று கேட்டால், நேற்று பிறந்த குழந்தை கூட சரியாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) என கூறி விடும். மாருதி சுஸுகி நிறுவனம் குறைவான விலையில் கார்களை விற்பனை செய்வதும், அதன் கார்கள் அதிக மைலேஜ் தருவதும்தான் இதற்கு மிகவும் முக்கியமான காரணங்கள் என நீங்கள் நினைக்கலாம்.

சரிதான். மாருதி சுஸுகி நிறுவனத்தின் நம்பர்-1 இடத்திற்கு இவை எல்லாம் மிகவும் முக்கியமான காரணங்கள்தான். ஆனால் இவை எல்லாவற்றையும் விட மற்றொரு முக்கியமான காரணமும் உள்ளது. அது விற்பனைக்கு பிந்தைய சேவை ஆகும். ஒரு சில நிறுவனங்களின் கார்களை வாங்கினால் விற்பனைக்கு பிந்தைய சேவை மிகவும் மோசமாக இருக்கும்.

Maruti Suzuki s Service Centre

அதாவது சர்வீஸ் போன்ற விஷயங்களில் மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடுவார்கள். ஆனால் சர்வீஸ் விஷயத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் தலைசிறந்து விளங்குகிறது. இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு சர்வீஸ் சென்டர்கள் உள்ளன. அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை சர்வீஸ் செய்ய மிகவும் குறைவாகதான் செலவாகும்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் நம்பர்-1 இடத்திற்கு இதுவே மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. ஒரு காரை வாங்குவது மிகவும் எளிது. ஆனால் அதை பராமரிப்பது மிகவும் கடினம். அதற்கு அதிக செலவு ஆகும். ஆனால் மாருதி சுஸுகி நிறுவன கார்களுக்கான 'ஓனர்ஷிப் காஸ்ட்' மிகவும் குறைவு.

Maruti Suzuki Dzire

மாருதி சுஸுகி நிறுவன கார்களை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவதற்கு இது முக்கியமான காரணமாக உள்ளது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை தக்க வைப்பதற்காக மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ந்து ஏராளமான சர்வீஸ் சென்டர்களை திறந்து வருகிறது. இந்த வரிசையில் சர்வீஸ் சென்டர் விஷயத்தில் மிகவும் முக்கியமான மைல்கல் ஒன்றை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது கடந்துள்ளது.

ஆம், மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் தனது 6 ஆயிரமாவது சர்வீஸ் சென்டரை தற்போது திறந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கோயா சாலையில் இந்த சர்வீஸ் சென்டர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2025-26ம் நிதியாண்டில் (2025 ஏப்ரல் 1 - 2026 மார்ச் 31), மாருதி சுஸுகி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 502 சர்வீஸ் சென்டர்களை திறந்தது.

அந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 2.84 கோடி வாகனங்களை மாருதி சுஸுகி நிறுவனம் சர்வீஸ் செய்தது. ஒரு நிதியாண்டில் மாருதி சுஸுகி நிறுவனத்தால் சர்வீஸ் செய்யப்பட்ட அதிகபட்ச வாகனங்களின் எண்ணிக்கை இதுதான். இதற்கு முன்பாக வேறு எந்தவொரு நிதியாண்டிலும் இவ்வளவு அதிகமான வாகனங்களை மாருதி சுஸுகி நிறுவனம் சர்வீஸ் செய்தது இல்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2026-27ம் நிதியாண்டில் (2026 ஏப்ரல் 1 - 2027 மார்ச் 31) சுமார் 500 சர்வீஸ் சென்டர்களை புதிதாக திறக்க முடிவு செய்துள்ளது. எனவே வரும் காலங்களிலும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் சர்வீஸ் தொடர்ந்து சிறப்பாக இருக்கும் என உறுதியாக நம்பலாம். மாருதி சுஸுகி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்து வருகிறது. எனவே கூடுதல் சர்வீஸ் சென்டர்களை திறப்பது மிகவும் அவசியமான ஒரு நடவடிக்கைதான்.

Article Published On: Friday, July 10, 2026, 13:42 [IST]
English summary
Maruti suzukis 6000th service centre inaugurated in kerala
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out