இந்த காரெல்லாம் அவ்ளோதான் இனி முடிஞ்சுதுனு எல்லாரும் நெனச்சாங்க! ஆனா நடந்ததே வேற! கதையில செம டிவிஸ்ட்!
இந்தியாவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் ஒரு சில கார்கள் ஒவ்வொரு மாதமும் 15,000 - 20,000 என்ற விற்பனை எண்ணிக்கையை அனாயசமாக பதிவு செய்து வருகின்றன. அப்படிப்பட்ட மாருதி சுஸுகி நிறுவனத்திற்கே வேறு ஒரு சில கார்கள் சமீப காலமாக தலைவலியாக இருந்து வந்தன.
அவை மிகவும் விலை குறைவான ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார்கள் (Most Affordable Entry Level Hatchback Cars) ஆகும். குறிப்பிட்டு சொல்வதென்றால், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso), மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) மற்றும் மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) ஆகிய கார்கள்.

இதில், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை மட்டும் இடையில் ஓரளவிற்கு உயர்ந்து விட்டது. இந்த சூழலில் தற்போது மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் மாருதி சுஸுகி செலிரியோ ஆகிய கார்களின் விற்பனையும் உயர்ந்துள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் வெறும் 1,806 எஸ்-பிரெஸ்ஸோ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கையானது நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 6,388 ஆக உயர்ந்துள்ளது. அதாவது இம்முறை 4,582 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 253.71 சதவீத வளர்ச்சி ஆகும்.

இதேபோல் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் வெறும் 4,970 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 9,887 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது இம்முறை 4,917 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 98.93 சதவீத வளர்ச்சியாகும்.
இதேபோல் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் வெறும் 1,861 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கையானது நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 3,018 ஆக உயர்ந்துள்ளது. அதாவது இம்முறை 1,157 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 62.17 சதவீத வளர்ச்சி ஆகும்.
நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் ரக கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 4வது இடத்தையும், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ 5வது இடத்தையும், மாருதி சுஸுகி செலிரியோ 9வது இடத்தையும் பிடித்துள்ளன. ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் இது தெரிய வந்துள்ளது.
இதில், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப விலை வெறும் 3.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் ஆரம்ப விலை 3.70 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இந்த வரிசையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப விலையும் கூட வெறும் 4.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
இவை விலை குறைவானவை என்பதுடன், சிறப்பான மைலேஜையும் வழங்க கூடியவை ஆகும். இதில், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் சிஎன்ஜி வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 33.40 கிலோ மீட்டராக இருக்கிறது.
இந்த வரிசையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மற்றும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில், அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மற்றும் மாருதி சுஸுகி செலிரியோ போன்ற ஹேட்ச்பேக் கார்கள் எல்லாம் நல்ல ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications