இப்போ 3 லட்சம் ரூபாய்க்கே மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்கலாம்

இந்தியாவில் புதிய கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களை விட, பயன்படுத்திய கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களே அதிகம். எண்ணிக்கை அளவில் புதிய கார் சந்தையை விட பயன்படுத்திய கார்கள் சந்தை பெரிது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு புதிய காருக்கும், 1.4 நான்கு பயன்படுத்திய கார்கள் விற்பனையாவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2026ம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 60 லட்சம் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

பெரிய சந்தையாக இருந்தாலும், பயன்படுத்திய கார்கள் சந்தையின் துல்லியமான தரவுகள் கிடையாது. ஏனெனில் பயன்படுத்திய கார்களை வரைமுறைப்படுத்துவதற்கான மத்திய அமைப்பு ஒன்று இல்லை. ஆனால், முன்பை விட பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை குறிப்பிட்ட சில தளங்களினால் ஒரு ஒழுங்கிற்கு வந்திருக்கிறது. அதன் மூலம் கிடைத்த தரவுகள், வாடிக்கையாளர்கள் என்ன விதமான பயன்படுத்தப்பட்ட கார்களை விரும்புகிறார்கள் என்பதை நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.

Maruti Swift Side

பயன்படுத்திய கார்கள் சந்தையின் பெரும்பான்மை வாடிக்கையாளர்கள், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சுமார் 60 சதவீதம் வாடிக்கையாளர்கள் முதல் முறை கார் வாங்குபவர்கள் தான். இருசக்கர வாகனத்தில் இருந்து நான்கு சக்கர வாகனங்களுக்கு மாறும் பொழுது அவர்களது முதல் தேர்வு பயன்படுத்திய கார்களாகத் தான் இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும், குறைவான விலை என்பது மிகவும் முக்கியமான ஒரு காரணி.

மற்றொன்று கண்ணுக்குத் தெரியாத செலவுகள் இதில் கிடையாது. எனவே நம் கைகளில் இருக்கும் பணத்தைக் கொண்டு திட்டமிட்டு நாம் விரும்பிய காரை சிரமமின்றி வாங்க முடியும். உதாரணத்திற்கு ஒரு புதிய காரைப் பார்க்கிறோம் என்றால் பெரும்பான்மையான இடங்களில் அதன் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆன்-ரோடு விலைகள் சில இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், நேரடியாக ஷோரூமுக்குச் செல்லும் போது அது நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.

Maruti Swift inside

இதனால் பட்ஜெட்டிற்கு தகுந்தவாறு வேறு கார்களைப் பார்க்கவோ அல்லது பட்ஜெட்டிற்கு மேல் செலவழிக்கவோ வாடிக்கையாளர்கள் நிர்பந்திக்கப்படுவார்கள். ஆனால் பயன்படுத்திய கார்கள் சந்தையில் அந்தப் பிரச்சினை இல்லை. 4 லட்சம் என்றால், 4 லட்சம் தான். அதற்கு மேல் எதிர்பாராத அளவிற்கு பெரிய செலவுகள் எதுவும் இருக்காது. ஆனால், பிரச்சினையில்லாத காரை வாங்க வேண்டும், அது தனிக்கதை.

சரி, விஷயத்திற்கு வருவோம். பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் அதிகம் விற்பனையாவது மாருதியின் ஸ்விஃப்ட் தானாம். புதிய ஸ்விஃப்ட் கார் 5.78 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆன்-ரோடு விலை 7 லட்சம் ரூபாயைத் தொடும். ஆனால் பயன்படுத்தப்பட்ட சந்தையில் ஓரளவிற்கு நல்ல கண்டிஷனில் இருக்கும் காரை 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

மேலும், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் ஸ்வீட் ஸ்பாட்டும் இது தான். 3 லட்சம் முதல் 5 லட்சத்திற்குள். ஸ்விஃப்டைத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம், இது ஒரு மாருதி கார் என்பது, இரண்டாவது சர்வீஸ் செய்வது எளிதாக இருக்கும், ஸ்பேர் பாகங்களில் பிரச்சினை இருக்காது. மற்றும் பல ஆண்டுகளாக நம்பகமான கார் என்ற ட்ராக் ரெக்கார்டைக் கொண்டது. இந்தக் காரணங்களினால பயன்படுத்தப்பட்ட ஸ்விஃப்டை வாங்க பல்வேறு வாடிக்கையாளர்கள் ஆர்வமாக முன்வருகிறார்களாம்.

ஒழுங்குபடுத்தப்பட்ட பயன்படுத்திய கார்கள் சந்தையின் தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, ஸ்விஃப்டின் விற்பனை ஒட்டுமொத்த ஒழுங்குபடுத்தப்பட்ட கார்கள் சந்தையில் 4.93 சதவீதமாத இருக்கிறது. அதாவது கடந்த நிதியாண்டு மொத்தம் விற்பனை செய்யப்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்களில் சுமார் 3 லட்சம் கார்கள் ஸ்விஃப்ட் மட்டுமே. மற்ற எந்தக் காரும் இதற்கு அருகில் கூட வரவில்லையாம்.

புதிய ஸ்விஃப்ட் கார் கூட ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு விற்பனையாவதில்லை. பல ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் 14,000 யூனிட்டுகள் முதல் 18,000 யூனிட்டுகள் வரை ஸ்விஃப்ட் விற்பனையாகி வருகிறது. சராசரியை எடுத்துக் கொண்டால் கூட ஆண்டுக்கு 1.80 லட்சம் கார்கள் தான். அதனை விட கிட்டத்தட்ட இருமடங்கு பயன்படுத்திய ஸ்விஃப்ட் கார்கள் கடந்தாண்டு விற்பனையாகியிருக்கிறது.

3 லட்சம் ரூபாய்க்கு நல்ல ஓடக்கூடிய கண்டிஷனில் இருக்கும் ஸ்விஃப்ட் காரையே பயன்படுத்திய சந்தையில் வாங்க முடியம் எனக் கூறுகிறார்கள் சந்தை நிபுணர்கள். குறைவான விலையில், அதே நேரம் கொஞ்சம் ப்ரீமியமான காராக ஸ்விஃப்டை மக்கள் பார்க்கிறார்கள். அதுவும் பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் இந்தக் கார் ஜொலிப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னரைப் போல இல்லாமல், இப்போது ஆன்லைன் தளங்கள் மூலமே நமக்கு பிடித்தமான காரை கண்டறிவது கொஞ்சம் எளிதாகியிருக்கும் நிலையில், நிறைய வாடிக்கையாளர்கள் புதிய கார்களை வாங்கும் முன், பழக்கப்படுத்திக் கொள்ளவாவது பயன்படுத்தப்பட்ட கார்களையே முதலில் வாங்குகிறார்கள். இதுவும் இந்த சந்தைக்கு கூடுதல் வாடிக்கையாளர்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது.

Article Published On: Saturday, June 20, 2026, 14:27 [IST]
English summary
Maruti swift hatchback is the top selling car in used car market
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out