ஒரே மாசத்துல இத்தனை இவி கார் வருதா? கொஞ்ச நாள் மட்டும் வெயிட் பண்ணுங்க!

முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களான மாருதி டாடா, டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் புதிய எலெக்ட்ரிக் காரை வரும்மார்ச் மாதம் களம் இறக்குகிறார்கள். இந்த கார்கள் மார்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா பஞ்ச் இவி ஃபேஸ்லிஃப்ட்

டாடா நிறுவனம் தனது பஞ்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை 2 ஆண்டுகளுக்க முன்னர் வெளியிட்டது. இந்நிலையில் இதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை தற்போது வெளியிட தயாராகி வருகிறது. இந் த காரின் விற்பனை பிப்ரவரி 20ம் தேதி முதல் துவங்குகிறது. இந்த கார் லுக் அடிப்படையில் ஸ்லீக்காகவும், ஸ்மார்ட்டாகவும் வழங்கப்பட்டுள்ளது.இதில் புதிய வடிவமைப்பு, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட லைட், புதிய கிரில், மார்டனான லுக், ஆகிய உள்ளது மோட்டார் மற்றும் பேட்டரியில் எந்த மாற்றங்களும் இல்லை.

Upcoming Evs in March 2026

டாடா சியாரா இவி

டாடா சியாரா கார் இந்தியர்களக்கு பழைய நினைவுகளை மீண்டும் நியாபகப்படுத்துகிறது. இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விரைவில் வரவுள்ளது. இந்த கார் மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த காரின் லுக் அதன் பெட்ரோல் வெர்ஷன் காரிலிருந்து லேசாக தான் மாறுபடும். முக்கியமாக முற்றிலும் மூடப்பட்ட முன்பக்க வடிவமைப்பு இடம்பெறும். இந்த காரில் ரியர் வீல் டிரைவ், ஆல் வீல் டிரைவ் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன.

மாருதி இ-விட்டாரா

மாருதி நிறுவனம் தனது முதல் இவி காரைவரும் மார்ச் மாதம் வெளியிட வாய்ப்புள்ளது. இந்த கார் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் இரண்டு விதமான வெர்ஷன்களில் வருகிறது. அதன்படி இந்த கார் 440 -543 கி.மீ தூரத்தை சிங்கிள் சார்ஜில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் வென்டிலேட்டட் சீட்டுகள், பெரிய டச் ஸ்கிரீன், டிஜிட்டல் மீட்டர், பின்பக்க சீட்டை சாய்வாக வைத்திருக்கும் வசதி, இந்த காரின் விலை விபரங்கள் இந்த மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா

டொயோட்டா நிறுவனம் தனது அர்பன் க்ரூஸர் இ-பெல்லா என்ற காரை அடுத்த மாதம் களம் இறக்கும் என எதிர்பார்க்கலாம். இது இ-விட்டாரா காரின் டொயோட்டா பேட்ஜ் வெர்ஷன் கார் தான். இந்த கார் லுக் சற்று வித்தியாசமாக இருக்கலாம். இவிட்டாரா காரை விட சற்று பிரிமியமாகவும் ஸ்டைலாகவும் இருக்கும். பேட்டரி, மோட்டார், ரேஞ்ச் எல்லாம் இவிட்டாரா கார் போலவே இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த காரை பிப்ரவரி மாத இறுதியில் களம் இறக்க டொயோட்டா திட்டமிட்டு வருகிறது.

டாடா சியாரா இவி

டாடா சியாரா கார் இந்தியர்களக்கு பழைய நினைவுகளை மீண்டும் நியாபகப்படுத்துகிறது. இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விரைவில் வரவுள்ளது. இந்த கார் மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த காரின் லுக் அதன் பெட்ரோல் வெர்ஷன் காரிலிருந்து லேசாக தான் மாறுபடும். முக்கியமாக முற்றிலும் மூடப்பட்ட முன்பக்க வடிவமைப்பு இடம்பெறும். இந்த காரில் ரியர் வீல் டிரைவ், ஆல் வீல் டிரைவ் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார்கள் மார்கெட்டில் மிகப்பெரிய அளவில் வளரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, February 15, 2026, 16:15 [IST]
English summary
Maruti tata toyota 4 new evs launch by march 2026
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+