500 கிமீ ரேஞ்சு கொண்ட மாருதியின் 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார்.. ரகசியமாக உருவாக்கி வரும் நிறுவனம்!

பல மாத தாமதத்திற்குப் பின்பு இந்தாண்டு தொடக்கத்தில் தான் இந்தியாவில் தங்களுடைய முதல் எலெக்ட்ரிக் காராக e விட்டாராவை (e Vitara) வெளியிட்டது மாருதி சுஸூகி. தொடர்ந்து தற்போது அடுத்த எலெக்ட்ரிக் காருக்கான வேலைகளில் அந்நிறுவனம் மும்மரமாக ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

YMC என்ற குறியீட்டுப் பெயரில் இந்தப் புதிய எலெக்ட்ரிக் காரை அழைக்கிறது மாருதி. e விட்டாராவை 5 சீட்டர் காராக மாருதி வெளியிட்ட நிலையில், புதிய YMC-யானது ஒரு 7 சீட்டர் எம்பிவியாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தக் காரின் உருவாக்கம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது போலத் தான் இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே இந்த எலெக்ட்ரிக் எம்பிவி மாடலை இந்திய சாலைகளில் மாருதி சோதனை செய்யத் தொடங்கிவிட்டது.

Maruti e Vitara

இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் BYD eMAX 7 மற்றும் கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV ஆகிய எலெக்ட்ரிக் எம்பிவி மாடல்களுக்குப் போட்டியாக மாருதியின் புதிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி களத்தில் இறக்கப்படும். ஆனால் BYD eMAX 7 மாடலானது 25 லட்சம் ரூபாய்க்கு மேலான தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டதால் அதனை மாருதியின் புதிய எலெக்ட்ரிக் எம்பிவிக்கான நேரடிப் போட்டியாகக் கூற முடியாது.

மாருதியின் இந்தப் புதிய எம்பிவியானது 15 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய்க்குள்ளான தொடக்க விலையையே கொண்டிருக்கும். எனவே கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV தான் மாருதி YMC எலெக்ட்ரிக் எம்பிவிக்கான நேரடிப் போட்டியாளராக இருக்கும். போட்டி மிகவும் குறைவாக இருப்பதால் மாருதிக்கு ஒரு சிறிய அட்வான்டேஜ் இருக்கிறது. 2027ன் இடைப்பகுதியில் இந்த எலெக்ட்ரிக் எம்பிவி காரின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது.

Maruti e Vitara

எம்பிவிக்கள் என்றாலே 'அமைதி'யான லுக்கையே பெரும்பாலும் கொண்டிருக்கும். அதிலிருந்து மாறுபட்டு எஸ்யூவி போல சற்று முரட்டுத்தனமான தோற்றத்துடன் இந்த எலெக்ட்ரிக் காரை மாருதி வடிவமைத்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே எம்பிவியாக இருந்தாலும் எஸ்யூவி ரசிகர்களுக்கும் டிசைன் வகையில் பிடிக்கும் காராக மாருதி YMC இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த எலெக்ட்ரிக் கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பைஷாட் புகைப்படங்களை வைத்துப் பார்க்கும் போது, சற்று உயரமான முகப்புப் பக்கம், கூடுதல் கிரௌண்டு கிளியரன்ஸுடன், போல்டான ரோடு பிரசன்ஸைக் கொண்ட ஒரு எலெக்ட்ரிக் எம்பிவியாக மாருதியின் புதிய கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

e விட்டாராவின் பேட்டரி பேக் மற்றும் பவர்ட்ரெயின் தேர்வுகளே புதிய மாருதி YMC எலெக்ட்ரிக் எம்பிவி காரிலும் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த 7 சீட்டர் எம்பிவி காரானது 49 kWh மற்றும் 61 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளுடன், அதிகபட்சமாக 500 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கக்கூடிய திறனையும் கொண்டிருக்கும்.

e விட்டாராவைப் போலவே லெவல் 2 ADAS பாதுகாப்பு அம்சங்கள் உட்பட, அனைத்து விதமான மேம்பட்ட வசதிகளையும் கொண்ட ஒரு எலெக்ட்ரிக் காராகவே இந்தப் புதிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி காரும் இருக்கும். டேஷ்போர்டில் பெரிய ஸ்கிரீன்கள், வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், 10 வகைகளில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான டிரைவர் சீட்கள் ஆகிய வசதிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிகளவிற்கு இல்லையென்றாலும் மாருதியின் முதல் எலெக்ட்ரிக் காரான e விட்டாரா கணிசமான அளவில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. பெரும்பான்மை கார்களை வெளிநாடுகளுக்கு அந்நிறுவனம் ஏற்றுமதி செய்வதும் இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டாவது எலெக்ட்ரிக் காரும் கணிசமான வாடிக்கையாளர்களையே பெறுமா அல்லது வெற்றிகரமான காராக மாறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Article Published On: Thursday, June 18, 2026, 12:45 [IST]
English summary
Maruti to launch new 7 seater electric mpv car in india soon
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out