அடுத்த ஆறு மாதங்களில் மாருதி வெளியிடும் 3 புதிய எஸ்யூவிக்கள் இவை தான்

குறிப்பிட்ட சில பிரிவுகளில் மட்டும் இல்லாமல், அனைத்து வகையான பிரிவுகளிலும் வெற்றிகரமாக கார்களை விற்பனை செய்து வரும் ஒரே நிறுவனம் மாருதி சுஸூகி தான். எனினும் எஸ்யூவிக்கள் தான் இப்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ஒன்றாக இருக்கிறது என்பதால் அதில் தான் மாருதியும் சற்று கூடுதல் கவனம் செலுத்துகிறது.

அடுத்த ஆறு மாதங்களில் மூன்று எஸ்யூவிக்களின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன்களை இந்தியாவில் வெளியிடவுள்ளது மாருதி சுஸூகி. ஃபேஸ்லிப்ட் தான் என்றாலும் டிசைன் மற்றும் வசதிகள் அப்கிரேடோடு, புதிய பவர்ட்ரெயின் ஆப்ஷன்களுடனும் இந்த எஸ்யூவிக்களை அப்டேட் செய்யவுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கு கூடுதல் ஆப்ஷன்கள் இருக்கப்போகிறது. அப்படி அப்டேட் செய்யப்படவிருக்கும் கார்கள் எவை எவை, அதில் புதிதாக நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதே இங்கே நாம் பார்க்கலாம்.

மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்ட்

பல ஆண்டுகளாகவே சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் மாருதி விற்பனை செய்து வரும் கார் பிரெஸ்ஸா. சப்-காம்பேக்ட் பிரிவு மிகவும் பிரபலமாக இருப்பதற்குக் காரணமே குறைவான வரி காரணமாக, குறைவான விலையில் அவை விற்பனை செய்யப்படுவது தான். ஆனால் பிரெஸ்ஸாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை மாருதி பயன்படுத்தி வருவதால் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கு உண்டான வரியே பிரெஸ்ஸாவிற்கும் விதிக்கப்பட்டு வருகிறது.

Maruti Brezza

ஆனால் விரைவில் அது மாறவிருக்கிறது. ஃபிராக்ஸ் மாடலில் மாருதி கொடுத்து வரும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினானது பிரெஸ்ஸாவிலும் கொடுக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் பிரெஸ்ஸாவின் மீதான வரி 40 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறையும். இதனால் தற்போது விற்பனை செய்யப்படுவதை விடக் குறைவான விலையிலேயே புதிய பிரெஸ்ஸாவை நாம் வாங்கலாம். அல்லது குறைவான விலையிலேயே அதிக பெர்ஃபாமன்ஸ் கொடுக்கக்கூடிய டர்போ பெட்ரோல் இன்ஜின் காரை நாம் பெறலாம்.

தற்போது 8.26 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்தக் கார். இதே விலையிலேயே டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட கார் கிடைத்தால் எப்படி இருக்கும். அதற்கான வாய்ப்பு புதிய பிரெஸ்ஸாவின் மூலம் கிடைக்கலாம். ஆனால் இதற்குப் போட்டியாக ஏற்கனவே ஸ்கோடாவின் கைலாக் டர்போ பெட்ரோல் இன்ஜினுடனேயே விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மாருதி ஃபிராங்க்ஸ் ஃபேஸ்லிப்ட்

மாருதியின் அதிகம் விற்பனை செய்யப்படும் கார்களில் ஒன்றாக ஃபிராங்க்ஸ் இருந்து வருகிறது. இந்த கிராஸ்ஓவர் எஸ்யூவி மாடல் மட்டும் தான் தற்போது மாருதியின் லைன்-அப்பில் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வைக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தக் காருக்கு ஹைபிரிட் பவர்ட்ரெயினையும் கொடுக்கத் திட்டமிட்டு வருகிறது மாருதி.

Maruti Fronx

வழக்கமான ஹைபிரிட் பவர்ட்ரெயின் கிடையாது, இதுவரை இந்திய மாஸ் மார்க்கெட் கார்களில் பயன்படுத்தப்பட்டிராத சீரிஸ் ஹைபிரிட் பவர்ட்ரெயினைக் கொடுக்கத் திட்டமிட்டு வருகிறது மாருதி. இந்தப் பவர்ட்ரெயின் செட்டப்பானது, ஒரு பெட்ரோல் இன்ஜின், ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி பேக் செட்டப்பைக் கொண்டிருக்கும்.

இதில் இருக்கும் இன்ஜினானது காரின் பேட்டரி பேக்கை சார்ஜ் செய்வதற்கு மட்டுமே பயன்படும். அந்த சார்ஜைக் கொண்டு காரின் எலெக்ட்ரிக் மோட்டார் இயக்கப்பட்டு, அதன் மூலமே கார் இயக்கப்படும். அந்த வகையில் இதனை ஒரு எலெக்ட்ரிக் கார் என்றும் கூட நாம் கூறலாம். ஜெனரேட்டர் போலவே இதில் கொடுக்கப்படும் இன்ஜின் பயன்படுத்தப்படும் என்பதால் அதிக மைலேஜை இந்தக் காரில் நாம் எதிர்பார்க்கலாம்.

இத்துடன் பெரிய டச்ஸ்கிரீன், லெவல் 2 ADAS பாதுகாப்பு அம்சங்கள், வென்டிலேட்டட் சீட்கள் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளையும் புதிய ஃபிராங்க்ஸ் ஃபேஸ்லிப்டில் மாருதி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசைனும் முற்றிலும் புதிதாக இருக்கும் என்பதை இங்கே நாம் தனியே சொல்ல வேண்டியதில்லை.

மாருதி கிராண்டு விட்டாரா ஃபேஸ்லிப்ட்

மாருதியின் எஸ்யூவி லைன்-அப்பில் வழக்கமான ஃபேஸ்லிப்ட் அப்டேட்டாக வெளியாகும் ஒரு காராக கிராண்டு விட்டாராவின் ஃபேஸ்லிப்டைச் சொல்லலாம். வெளிப்புறமும், உட்புறமும் டிசைன் மாற்றங்களோடு, பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெவல் 2 ADAS பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளை கிராண்டு விட்டாரா ஃபேஸ்லிப்டில் நாம் எதிர்பார்க்கலாம்.

பவர்ட்ரெயினைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இருக்காது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் 1.5 லிட்டர் NA பெட்ரோல், பெட்ரோல் ஹைபிரிட் மற்றும் பெட்ரோல் CNG ஆப்ஷன்களே புதிய ஃபேஸ்லிப்ட் மாடலிலும் இருக்கும். கூடுதல் மைலேஜைக் கொடுக்கும் வகையில் பெட்ரோல் இன்ஜினை மாருதி ட்யூன் செய்யலாம்.

கிராண்டு விட்டாராவைப் பொறுத்தவரை அதன் போட்டியாளர் வெளியில் இல்லை. உள்ளுக்குள் தான். ஆம், கிராண்டு விட்டாராவின் முதன்மையான போட்டியாளர் மாருதியின் விக்டோரிஸ் தான். கடந்தாண்டு வெளியான விக்டோரிஸ் தற்போது வாடிக்கையாளர்களிடையே எதிர்பாராத அளவிற்கு வரவேற்பைப் பெற்று வருவகோடு, ஹூண்டாய் கிரெட்டாவிற்கே சவால் விட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அப்டேட்கள் மூலம் எஸ்யூவி போட்டியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லவிருக்கிறது மாருதி. ஏற்கனவே தற்போதைய நிலையிலேயே மாருதியின் எஸ்யூவிக்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக பிரெஸ்ஸா மற்றும் ஃபிராங்க்ஸ் மாடல்களுக்கு. புதிய அப்டேட் செய்யப்பட்ட பவர்ட்ரெயின்களுடன் மற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும் மேக்னெட்டாக இந்தக் கார்கள் மாறிவிடும். போட்டியாளர்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

Article Published On: Saturday, June 13, 2026, 19:08 [IST]
English summary
Maruti to update 3 suvs from its lineup in next 6 months what are they
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out