டொயோட்டா இன்னோவாவுக்குப் போட்டியாக புதிய 7 சீட்டர் எம்பிவியை இந்தியாவில் வெளியிடும் மாருதி?

மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவில் இரண்டு எம்பிவி கார்களை விற்பனை செய்து வருகிறது. ஒன்று எர்டிகா, மற்றொன்று XL6. இதில் எர்டிகா 7 சீட்டராக, சற்று விலை குறைவான காராக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், XL6 எம்பிவியானது 6 சீட்டராக சற்று கூடுதல் இடவசதி கொண்ட ஒன்றாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெயரில் இருக்கும் 6 என்பது 6 சீட்டரைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

XL6 எம்பிவி காரே 7 சீட்டருடன் இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா. அப்படி ஒரு காரும் விற்பனையில் இருக்கிறது, ஆனால் இந்தியாவில் தான் இல்லை. இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட சில நாடுகளில் XL6 எம்பிவியின் 7 சீட்டர் வெர்ஷனை XL7 என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது சுஸூகி. அந்தக் காரானது இப்போது அப்டேட் செய்யப்படவுள்ளது.

Maruti XL6

இப்போது எதற்கு அந்தக் காரைப் பற்றிப் பேச வேண்டும் எனக் கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது. தற்போது இந்தோனேஷியா மற்றும் வியட்நாமில் விற்பனையில் இருக்கும் XL7 காரில் சீட்டிங் லேஅவுட்டைத் தவிர மற்ற அனைத்து அம்சங்களும், டிசைனும் கிட்டத்தட்ட ஒன்று தான். அங்கே புதிய வடிவில் இந்தக் கார் அப்டேட் செய்யப்படுகிறது என்றால், அதேபோல் இந்தியாவிலும XL6 காரை புதிய வடிவில் மாருதி அப்டேட் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

தற்போது விற்பனையில் இருக்கும் XL6/ XL7 காரில், முன்பக்கம் சிறிய கிரில் மற்றும் சிறிய பம்பர் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டு, இரண்டையும் பிரிக்கும் வகையில் பாடியின் நிறத்திலேயே சிறிய பேனல் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். புதிதாக அப்டேட் செய்யப்படவிருக்கும் XL7 ஃபேஸ்லிப்ட் மாடலில் கிரில் மற்றும் பம்பர் புதிய வடிவில் கொடுக்கப்பட்டிருப்பதோடு, பாடியின் நிறத்தில் இருக்கும் பட்டையை கருப்பு நிறத்தில் கொடுத்து, அந்த மூன்று பிரிவுகளையும் ஒரே யூனிட்டாக இருப்பது போல வடிவமைத்திருக்கிறது சுஸூகி.

Maruti XL7 Facelift

இது புதிய XL7 ஃபேஸ்லிப்டுக்கு முற்றிலும் புது விதமான லுக்கைக் கொடுப்பதோடு, ஒரு ஆங்கிளில் டொயோட்டா இன்னோவா போன்ற தோற்றத்தை நினைவுபடுத்துகிறது. அதேபோல் முன்பக்கம் ஃபாக் விளக்குகளும் தற்போது இருப்பதை விட ஸ்லீக்காகவும் புதிய வடிவிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பக்கவாட்டில் புதிய வடிவில் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதனைத் தவிர வேறெந்த மாற்றமும் இல்லை.

புதிய XL7 ஃபேஸ்லிப்ட் மாடலின் பின்பக்கமும் பாடி பேனல்கள், பம்பர் அல்லது பின்பக்க விளக்குகளின் டிசைனில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பின்பக்க விளக்குகளுக்கு ஸ்போர்ட்டியான லுக்கிற்காக ஸ்மோக்டு எஃபெக்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பார்ப்பதற்கும் நன்றாகவே இருக்கிறது. இவையனைத்தும் புதிய காரை சாலைகளில் சுஸூகி சோதனை செய்த போது எடுக்கப்பட்ட ஸ்பைஷாட் புகைப்படங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இன்னும் இந்தக் காரை அதிகாரப்பூர்வமாக சுஸூகி வெளியிடவோ அல்லது அறிமுகப்படுத்தவோ இல்லை என்பத குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்லிப்ட் அப்டேட் என்பதால் மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் அப்படியே புதிய காரிலும் இருக்கும். மேலும், பவர்ட்ரெயினை மாற்ற வேண்டிய தேவையும் இப்போது இல்லை என்றே கூறலாம். காரின் உட்புற டிசைன் மற்றும் வசதிகளும் மேம்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அதுகுறித்த தகவல்கள் இப்போது இல்லை. வெளியாகும் போதே தெரிந்து கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து:

உண்மையில் இந்தப் புதிய டிசைன் இந்திய XL6 எம்பிவி காருக்கும் ஃப்ரஷ்ஷான லுக்கைக் கொடுக்கும். ஆனால் மாருதி அதனைப் பரிசீலனை செய்திருக்கிறதா என்று தெரியவில்லை. XL6 உடன் 7 சீட்டர் வெர்ஷனான XL7 மாடலையும் கூட இந்தியாவிற்காக மாருதி பரிசீலனை செய்யலாம். ஆனால் அதற்கு வாய்ப்புகள் குறைவு என்றே தெரிகிறது. இந்தப் புதிய டிசைனை இந்திய XL6-க்குக் கொடுப்பது நடக்கக்கூடியது தான்.

கடந்த ஆண்டு தான் எர்டிகா மற்றும் XL6 ஆகிய இரண்டு எம்பிவி கார்களுக்கும் வேண்டிய மாற்றங்களைச் செய்தது மாருதி சுஸூகி. முதலில் XL7 எம்பிவி ஃபேஸ்லிப்ட் மாடலானது வியட்நாமில் வெளியிடப்படும். அங்கு வாடிக்கையாளர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே இந்தியாவிலும் அதனை மாருதி அமல்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது. மாருதி என்ன செய்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Article Published On: Wednesday, June 3, 2026, 19:36 [IST]
English summary
Maruti updating xl7 mpv abroad will the changes carry forwarded to xl6 mpv in india
மேலும்... #maruti suzuki #mpv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out