ஹூண்டாய் பேயான் வருகை... ஹெவி மேக்கப்புடன் விக்டோரிஸை அறிமுகப்படுத்திய மாருதி!

இந்தியாவில் எஸ்யூவி (SUV) கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், மாருதி சுஸுகி நிறுவனம் தனது விக்டோரிஸ் (Victor​is) எஸ்யூவியின் முதல் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் புதிய ஆரம் எடிஷனை (AURUM Edition) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்புப் பதிப்பு, விக்டோரிஸ் காரின் விற்பனைச் சாதனையைக் கொண்டாடும் வகையில் கூடுதல் அலங்காரங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

கடந்த ஓராண்டில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்த விக்டோரிஸ் எஸ்யூவி, புதிய மாடல் அறிமுகமான முதல் ஆண்டில் அதிக கார்களை விற்பனை செய்த சாதனையைப் படைத்துள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. மேலும், அறிமுகத்திற்குப் பிறகு 1 லட்சம் மற்றும் 1.5 லட்சம் விற்பனை மைல்கற்களை வேகமாக எட்டிய பயணிகள் வாகனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

Maruti Victoris Aurum Edition

புதிய அலங்காரத் தொகுப்பு

இந்த ஆரம் எடிஷன் மாடலானது விக்டோரிஸ் காரின் ஸ்ட்ராங் ஹைபிரிட் (Strong Hybrid) தொழில்நுட்பம் கொண்ட மாடலை அடிப்படையாகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆரம் எடிஷனுக்கான அலங்காரத் தொகுப்பிற்காக கூடுதலாக ரூ.22,990 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆரம் என்ற பெயர் தங்கத்தைக் குறிக்கும் லத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. விக்டோரிஸ் எஸ்யூவி தனது முதல் ஆண்டில் பெற்ற விற்பனைச் சாதனையைக் கொண்டாடும் வகையில் இந்தப் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. வழக்கமான மாடலிலிருந்து வித்தியாசமாகத் தோற்றமளிக்க விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்தப் புதிய பதிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Also Read

வெளிப்புற மாற்றங்கள்

புதிய ஆரம் எடிஷனில் முன்புறம், பக்கவாட்டுப் பகுதிகள் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகளில் காப்பர் நிற அலங்காரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சக்கரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காப்பர் நிற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் காரின் வெளிப்புறத் தோற்றம் வழக்கமான விக்டோரிஸ் மாடலிலிருந்து வேறுபட்டதாக இருக்கும்.

இதனுடன் முன்பக்க கிரில், ஃபெண்டர்கள், பம்பர்கள், கதவுகளின் பக்கவாட்டு அலங்காரப் பகுதிகள் மற்றும் கதவுகளின் மேற்புற விசர்களில் குரோம் அணிகலன்கள் வழங்கப்படுகின்றன. காரின் உட்புறத்திலும் பயன்பாட்டுக்கு ஏற்ற சில கூடுதல் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்து வானிலைகளுக்கும் ஏற்ற முப்பரிமாண கேபின் மேட்கள், 3D பூட் மேட் மற்றும் பின்புற டிரங்க் சில் கார்டு ஆகியவை இந்தத் தொகுப்பில் அடங்கும்.

Also Read

விளம்பரத் தூதராக ஷாகித் கபூர்

புதிய விக்டோரிஸ் ஆரம் எடிஷனை விளம்பரம் செய்வதற்காக பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருடன் மாருதி சுஸுகி நிறுவனம் இணைந்துள்ளது. இளம் தலைமுறையினர், தொழில்நுட்பத்தை விரும்பும் வாடிக்கையாளர்கள் மற்றும் நவீன வாழ்க்கை முறைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களைக் கவரும் நோக்கில் இந்த விளம்பர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விக்டோரிஸ் எஸ்யூவி அறிமுகமான முதல் ஆண்டிலேயே பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது. புதிய ஆரம் எடிஷனில் எஞ்சின் செயல்திறன் அல்லது முக்கிய தொழில்நுட்ப அம்சங்களில் மாற்றம் இல்லை. காரின் தோற்றத்தை மேம்படுத்தும் அலங்காரங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விக்டோரிஸ் ஹைபிரிட் காரை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கும், தங்களது காருக்கு கூடுதல் பிரீமியம் தோற்றம் வேண்டும் என விரும்புபவர்களுக்கும் இந்தப் புதிய பதிப்பு கவனம் ஈர்க்கக்கூடும். நாளை மறுதினம் புதிய ஹூண்டாய் பேயான் காரும் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்கு இந்த புதிய சிறப்பு பதிப்பு மாடல் வந்துள்ளது.

Article Published On: Saturday, October 24, 2026, 11:31 [IST]
English summary
Maruti victoris aurum edition launched india price features
மேலும்... #maruti suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out