35,000 பேர் காசை குடுத்துட்டு இந்த காருக்காக வெயிட் பண்ணுறாங்க! எவ்வளவு வித்திருக்குது தெரியுமா?
மாருதி நிறுவனத்தின் விக்டோரியஸ் காருக்கு 70,000 புக்கிங் குவிந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார் அறிமுகமானது முதல் நல்ல வரவேபற்ப்பை பெற்று வரும் நிலையில் புத்தாண்டு துவக்கத்திலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் விக்டோரிஸ் என்ற காம்பேக்ட் எஸ்யூவி காரை விற்பனை செய்து வருகிறது. இந்த கார் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கார் என்பதால் இ்நத காருக்கு செம டிமாண்ட் ஏற்பட்டுள்ளுது.பலர் இந்த காரைவிரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்நிறுவனத்தின் டிசம்பர் மாத விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது.

இதன்பநடி கடந்த டிசம்பர் மாதம் மாருதி நிறுவனம் மொத்தம் 38,000 காம்பேக்ட் எஸ்யூவி கார்களை விற்பனை செய்து வருகிறது. அதில் 24,000 கார்கள் மாருதி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா கார்கள் தான். தான் பாக்கியுள்ள 14,000 கார்கள் மாருதி விக்டோரிஸ் கார்கள். இதுவரை மாருதி விக்டோரிஸ் கார் மொத்தம் 35,000 கார்கள் விற்பனையாகியுள்ளது.
இந்த காருக்க தற்போது 70,000த்திற்கும் அதிகமான புக்கிங் குவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல இந்த காரை புக் செய்த 35,000 பேர் இன்னும் இந்த காருக்காக காத்திருகு்கின்றனர். இந்த செக்மெண்டில் போட்டி அதிகமாக இருந்தாலும் புதிய கார்கள் வரும்போது நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.
மாருதி விக்டோரிஸ் காரை பொரத்தவரை கிராண்ட் விட்டாரா காரை அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும் தனித்துவமான அடையாளமாக வடிவமைத்துள்ளது. இந்த காரில் அதிக அம்சங்கள் உள்ளது. இந்த கார் பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றள்ளது. இது பாரத் என்கேப் மற்றும் குளோபல் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த காரில் சிஎன்ஜி வெர்ஷனும் உள்ளது. இது காருக்கு கீழே டேங்க் பொருத்தப்பட்ட வடிவமைப்பில் உள்ளது.
இந்த காரில் லெவல் 2 அடாஸ் சிஸ்டம், 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.
இதே இன்ஜின் செட்டப்தான் கிராண்ட் விட்டாரா காரிலும் உள்ளது. இந்த காரில் ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இந்த கார் மார்கெட்டில் ரூ10.50 லட்சம் முதல் ரூ19.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் கியா செல்டோஸ் காரை விட ரூ49,000 குறைவான விலையில் விற்பனையாகி வருகிறது.இந்த காரில் லெவல் 2 அடாஸ் சிஸ்டம், 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.
இதே இன்ஜின் செட்டப்தான் கிராண்ட் விட்டாரா காரிலும் உள்ளது. இந்த காரில் ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இந்த கார் மார்கெட்டில் ரூ10.50 லட்சம் முதல் ரூ19.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் கியா செல்டோஸ் காரை விட ரூ49,000 குறைவான விலையில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு செம டிமாண்ட் உள்ளது. இதை மாருதி நிறுவனம் நன்கு பயன்படுத்தி வருகிறது. இந்த விக்டோரிஸ் கார் வந்தது முதல் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








