மாருதி விக்டோரிஸ் CNG தான் வேணும்.. அடம்பிடிக்கும் வாடிக்கையாளர்கள்.. காரணம் இது தான்!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகிக்கு சமீபத்தில் பெரிய வெற்றியைக் கொடுத்த ஒரு கார் என்றால் அது விக்டோரிஸ் (Victoris) தான். இந்தியாவில் பல ஆண்டுகளாக மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் அதிக விற்பனையைப் பதிவு செய்து வரும் ஹூண்டாய் கிரெட்டாவுக்குப் போட்டியாக இந்த விக்டோரிஸை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் களமிறக்கியது மாருதி.

தற்போது மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் கிரெட்டாவுக்கு அடுத்து அதிகம் விற்பனை செய்யப்படும் காராக இந்த விக்டோரிஸ் எஸ்யூவி இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தக் காரின் CNG வெர்ஷனையே வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவதாகத் தரவுகள் கூறுகின்றன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 10,000 விக்டோரிஸ் கார்களை மாருதி விற்பனை செய்து வருகிறது. அதில் 5,000 யூனிட்டுகள் வரை CNG தானாம்.

Maruti Victoris Underbody CNG

இதற்கு முக்கியக் காரணமும் இருக்கிறது. இந்தியாவிலேயே அண்டர்பாடி CNG டேங்கைக் கொண்டிருக்கும் ஒரே கார் இந்த விக்டோரிஸ் தான். CNG கார்கள் நிறைய மைலேஜ் கொடுக்கும், குறைவான பயன்பாட்டுச் செலவைக் கொண்டிருக்கும் என்றாலும், அந்த குறைவான செலவிற்கு பூட் ஸ்பேஸை நாம் காவு கொடுக்க வேண்டியிருக்கும். காரணம், பெட்ரோல் டேங்குக்கு மேலாக கூடுதலாகவே CNG கொடுக்கப்படுகிறது என்பதால், அது பூட் ஸ்பேஸிலேயே வைக்கப்பட்டிருக்கும்.

இதனால் பெட்ரோல் டேங்க் அளவிற்கு CNG காரில் பூட் ஸ்பேஸ் கிடைக்காது. இந்தப் பிரச்சினையை ஓரளவு சரி செய்யத் தான் ட்வின் சிலிண்டர் CNG தொழில்நுட்பத்தை தங்களுடைய கார்களில் டாடா மோட்டார்ஸ் பயன்படுத்தத் தொடங்கியது. இதன் மூலம் பூட் ஸ்பேஸை ஓரளவிற்கு வாடிக்கையாளர்களுக்குத் திருப்பிக் கொடுக்க முடிந்தது.

Maruti Victoris

மாருதி ஒரேபடி மேலே சென்று விக்டோரிலிஸ் அண்டர்பாடியில், பெட்ரோல் டேங்க் போலவே CNG டேங்கை கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் விக்டோரிஸின் CNG வெர்ஷனை வாங்குவதில் வாடிக்கையாளர்களுக்கு மனத்தடை ஏதும் இருப்பதில்லை. பெட்ரோல், ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் CNG என மூன்று விதமான பவர்ட்ரெயின் தேர்வுகளுடன் விக்டோரிஸ் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையிலும், CNG வேரியன்ட்களே 50 சதவீதம் விற்பனையைப் பதிவு செய்து வருகிறது.

இதன் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தாங்கள் அப்டேட் செய்யவிருக்கும் பிரெஸ்ஸா சப்-காம்பேக்ட் எஸ்யூவியிலும் அண்டர்பாடி CNG டேங்கையே கொடுக்க மாருதி திட்டமிட்டு வருகிறது. வரிசையாக ஒவ்வொரு காராக இந்த மாற்றதை மாருதி தொடர்ந்து அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த சில ஆண்டுகளில் பெட்ரோலை விட CNG கார்களை மாருதி அதிகம் விற்பனை செய்யவும் வாய்ப்புகள் இருக்கிறது.

LXI, VXI மற்றும் ZXI என மூன்று வேரியன்ட்களாக விக்டோரிஸ் CNG வெர்ஷனை விற்பனை செய்து வருகிறது மாருதி சுஸூகி. 11.50 லட்சம் ரூபாய் முதல் 14.72 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த CNG வேரியன்ட்களை நாம் வாங்கலாம். ஆனால் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆட்டோமேட்டிக் இல்லை.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேண்டும் என்றால் விக்டோரிஸின் பெட்ரோல் அல்லது ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்ட்ரெயின் வேரியன்ட்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். CNG எரிபொருளில் இயங்கும் போது விக்டோரிஸின் 1.5 லிட்டர் இன்ஜினானது 86 hp பவர் மற்றும் 121 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விக்டோரிஸ் அண்டர்பாடி CNG டேங்கை மாருதி கொடுத்தது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. ஏனெனில் குறைவான பயன்பாட்டுச் செலவைக் கொண்ட காரை எந்தவித சமரசமும் இன்றி வாடிக்கையாளர்கள் வாங்க வழிவகை செய்கிறது. இதனை சப்-காம்பேக்ட் மற்றும் சிறிய ரக கார்களுக்கு மாருதி கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், மாருதியின் CNG கார் விற்பனை புதிய உயரங்களை எட்டும்.

Article Published On: Monday, July 6, 2026, 9:01 [IST]
English summary
Maruti victoris cng accounts for 50 percent sale in july 2026 in india
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out