லிட்டருக்கு 29 கிமீ மைலேஜ் தரக்கூடிய பெரிய மாருதி கார்.. ஹூண்டாய் நடுங்கிப் போய் கிடக்கு!

சற்று விலை அதிகமான காராக இருந்தாலும், வெளியான உடனேயே வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்ற காராக மாறிவிட்டது மாருதியின் விக்டோரிஸ் (Maruti Victoris) எஸ்யூவி. C செக்மெண்ட் எஸ்யூவிக்களிலேயே, அதாவது 4.2 மீ முதல் 4.5 மீ வரையிலான நீளம் கொண்ட மிட்-சைஸ் எஸ்யவிக்களிலேயே இரண்டாவது அதிகம் விற்பனை செய்யப்படும் எஸ்யூவியாகவும் இருக்கிறது விக்டோரிஸ் .

தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் போட்டி நிறைந்த கார் பிரிவுகளில் ஒன்று இந்த மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவு. சுமார் பத்துக்கும் மேற்பட்ட எஸ்யூவிக்கள் இந்தப் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பிரிவில் கிரெட்டாவுக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனை செய்யப்படும் காராக, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற காராக உருவெடுத்திருக்கிறது மாருதி விக்டோரிஸ்.

Maruti Suzuki Victoris

கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டது மாருதி சுஸூகி. வெளியானதில் இருந்து கடந்த மே மாதத்துடன் ஒன்பது மாதங்களிலேயே 1 லட்சம் யூனிட்டுகள் என்ற விற்பனை மைல்கல்லை எட்டி அசத்தியிருக்கிறது விக்டோரிஸ். சராசரியாக ஒவ்வொரு மாதமும் 11,127 விக்டோரிஸ் கார்களை விற்பனை செய்துள்ளது மாருதி சுஸூகி.

விக்டோரிஸ் வெளியானதில் இருந்து கடந்த ஒன்பது மாதங்களில் 1.51 லட்சம் கிரெட்டா கார்களை விற்பனை செய்துள்ளது ஹூண்டாய். எனினும் விக்டோரிஸ் வெளியானதில் இருந்து பார்க்கும் போது, தற்போது கிரெட்டாவின் விற்பனை சில ஆயிரங்கள் வரை குறைந்திருக்கிறது. 10 ஆண்டுகளாக யாரும் அசைக்க முடியாமல் இருந்த வந்த கிரெட்டாவையே அசைத்துப் பார்த்திருக்கிறது இந்த விக்டோரிஸ். வரும் மாதங்களில் இதன் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Maruti Suzuki Victoris Inside

வாடிக்கையாளர்களால் இவ்வளவு அதிகமாக வாங்கப்படுவதற்கு, அதிகம் விற்பனையாவதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் இல்லையா. வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கக்கூடிய வசதிகளை குறைவான விலையில் கொடுப்பது இதன் அதிக விற்பனைக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த விக்டோரிஸ் எஸ்யூவியை அரீனா டீலர்ஷிப் நெட்வொர்க் மூலமாகவே விற்பனை செய்து வருகிறது மாருதி. எனினும் நெக்ஸா தயாரிப்பான கிராண்டு விட்டாராவை விட அதிக சிறப்பம்சங்களைக் கொண்ட எஸ்யூவியாக இந்த விக்டோரிஸே இருக்கிறது.

மாருதியின் லைன்-அப்பிலேயே லெவல் 2 ADAS பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டிருக்கும் ஒரே கார் விக்டோரிஸ் தான். மாருதியின் லைன்-அப்பில் 10.1 இன்ச் என பெரிய TFT டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் கார் விக்டோரிஸ் தான். பவர்டு டெயில்கேட், ப்ரீமியமான இன்ஃபினிட்டி சவுன்டு சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கும் ஒரே மாருதி கார் விக்டோரிஸ் தான். இறுதியாக அண்டர்பாடி CNG டேங்க் இந்தியாவிலேயே விக்டோரிஸ் காரில் மட்டும் தான் தற்போது கொடுக்கபபட்டு வருகிறது.

CNG வாடிக்கையாளர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். CNG-க்கான மைலேஜ் மற்றும் குறைவான பயன்பாட்டுச் செலவு ஆகிய சௌகரியங்களைப் பெற்றுக் கொள்வதுடன், பூட் ஸ்பேஸை இழக்க வேண்டிய தேவையில்லை. இந்த சின்னச் சின்ன காரணங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விக்டோரிஸை அதிகம் விற்பனை செய்யப்படும் ஒன்றாக மாற்றியிருப்பதாகத் தெரிகிறது.

இந்த எஸ்யூவியில் டீசல் இன்ஜின் தேர்வு இல்லையென்றாலும், அதற்கு ஈடுகட்டும் வகையில் NA பெட்ரோல், NA பெட்ரோல்+ ஆல் வீல் டிரைவ், NA பெட்ரோல் + CNG மற்றும் NA பெட்ரோல் + ஸ்ட்ராங் ஹைபிரிட் உள்ளிட்ட பவர்ட்ரெயின் மற்றும் வசதிகள் காம்பினேஷனைக் கொடுத்து மாருதி சரிக்கட்டிவிட்டது. இந்த மிட்-சைஸ் எஸ்யூவியை 10.50 லட்சம் ரூபாய் முதல் 19.99 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் நாம் வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அனைத்து வகையான ப்ரீமியமான வசதிகளைக் கொண்டிருப்பதுடன், ஸ்ட்ராங் ஹைபிரட் மற்றும் CNG பவர்ட்ரெயின்களுடன் நல்ல மைலேஜைக் கொடுக்கும் ஒரு காராகவும் விக்டோரிஸ் இருக்கிறது. பார்ப்பதற்கு சின்னச் சின்ன வசதிகளாகத் தெரிந்தாலும் அவை வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. குறிப்பாக அண்டர்பாடி CNG டேங்க் வரவேற்கத்தக்க ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது.

Article Published On: Wednesday, June 10, 2026, 9:23 [IST]
English summary
Maruti victoris sold 1 lakh units within 9 months of its debut just behind hyundai creta
மேலும்... #maruti suzuki #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out