வயசு ஏற ஏற பக்குவமாகும் தோற்றம்... அடுத்த லெவலுக்கு மாறுகிறது மாருதி வேகன் ஆர்!

மார்க்கெட்டில் மிக நீண்ட காலமாக இருந்து வரும் மாருதி வேகன் ஆர் காரின் டிசைன் மிகவும் பக்குவப்பட்டதாக மாற்றம் காண இருக்கிறது. ஆம், விரைவில் டிசைன் மற்றும் வசதிகளில் அடுத்த லெவலுக்கு மாற இருக்கிறது மாருதி வேகன் ஆர். நகர்ப்புற பயன்பாட்டுக்கான முதன்மையான தேர்வாக இருந்து வரும் வேகன் ஆர் கார் இந்த பண்டிகை காலத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019ல் அறிமுகமான தற்போதைய தலைமுறை வேகன் ஆர் கார் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் தொடர்ந்து விற்பனையில் இருக்கிறது. இடையில் 2022ம் ஆண்டு சில மாற்றங்களை பெற்றது. அதேபோன்று, தற்போது சந்தைப் போட்டியை சமாளிக்கவும், புதிய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை தற்காலத்திற்கு தக்கவாறு பூர்த்தி செய்யும் வகையில் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வர இருக்கிறது.

New Maruti Wagon R Spy Image
Photo Credit:

சமீபத்திய ஸ்பை படங்களில் முன்புறத்தில் செவ்வக வடிவிலான புதிய ஹெட்லைட்டுகள் இடம்பெறுவது தெளிவாக தெரிகின்றன. கிரில் மற்றும் முன்பக்க பம்பரிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தற்போதைய வேகன் ஆரின் அடையாளமான உயரமான தோற்றத்தை முழுமையாக மாற்றாமல், முகப்பை மட்டும் நவீனமாக்கும் முயற்சியாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

காரின் பக்கவாட்டில் பெரிய அளவிலான டிசைன் மாற்றங்கள் இருக்காது. பின்புறத்திலும் சிறிய அளவிலான மாற்றங்கள் இடம்பெறுகிறது. டெயில் லைட் க்ளஸ்ட்டர் மற்றும் பம்பர் மற்றும் சில அலங்காரப் பகுதிகளிலும் மாற்றம் இருக்கும். இதனால், புதிய பொலிவுடன் வேகன் ஆர் கார் வர இருப்பது உறுதியாகி இருக்கிறது.

Also Read

இந்த காரில் முக்கிய மாற்றமாக தற்போதைய 4 சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக 3 சிலிண்டர் கொண்ட புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வுக்கு மாற இருக்கிறது. இதனால், மாசு உமிழ்வு குறைவாகவும், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையிலும் இருக்கும். மாருதி ஏற்கனவே ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் சமீபத்திய பலேனோ போன்ற கார்களில் புதிய Z12E பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.

நகர்ப்புற பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டு வாடிக்கையாளர்களை குறிவைத்து சிஎன்ஜி எரிபொருள் தேர்விலும் புதிய வேகன் ஆர் கார் வர இருக்கிறது. சோதனை ஓட்டங்களில் உள்ள புதிய வேகன் ஆர் காரின் அடிப்பகுதியில் சிஎன்ஜி டேங்க் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உற்பத்தி மாடலிலும் தொடர்ந்தால், வழக்கமான சிஎன்ஜி சிலிண்டர் ஆக்கிரமிக்கும் இடம் குறைந்து, அதிக பூட்ரூம் இடவசதி கிடைக்கும்.

Also Read

புதிய வேகன் ஆர் காரில் தற்போதைய மாடலைவிட பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, புதிய இருக்கை அமைப்பு மற்றும் சிறிய அளவிலான டேஷ்போர்டு மாற்றங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலில் குறிப்பிட்ட உயர்நிலை வேரியண்ட்களில் 7 அங்குல தொடுதிரை வழங்கப்படுகிறது. புதிய மாடலில் இதை மேலும் மேம்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

மாருதி வேகன் ஆர் ஃபேஸ்லிஃப்ட் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய வேகன் ஆர் ரூ.4.99 லட்சம் முதல் ரூ.7.24 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலையில் உள்ளது. புதிய எஞ்சின், டிசைனில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகள் இடம்பெறும் என்பதால் விலை ரூ.5.25 லட்சத்திலிருந்து ரூ.7.50 லட்சம் வரையிலான விலையில் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Image Source: Safaraurstyle

Article Published On: Tuesday, September 22, 2026, 14:39 [IST]
English summary
Maruti wagonr facelift new design z12e engine cng features
மேலும்... #maruti suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out