ரூ.5.72 கோடியில் புதிய மசராட்டி சூப்பர் கார் இந்தியாவில் அறிமுகம்... 2.8 வினாடியில் 100 கி.மீ வேகம்!

இந்திய சொகுசு கார் சந்தையில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் வகையில், இத்தாலியைச் சேர்ந்த மசராட்டி (Maserati) நிறுவனம் புதிய GT2 ஸ்ட்ராடேல் (GT2 Stradale) சூப்பர் காரை அறிமுகம் செய்துள்ளது. பந்தயக் கார்களின் செயல்திறனையும், சாலையில் ஓட்டுவதற்கான வசதிகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த கார், இந்திய இளம் கோடீஸ்வரர்களின் கனவுகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும்.

மசராட்டி MC20 சூப்பர் காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த GT2 ஸ்ட்ராடேல், அந்நிறுவனத்தின் GT2 பந்தயக் காரில் இருந்து பல அம்சங்களை கலந்து கட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த காருக்கு ரூ.5.72 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வெறும் 914 யூனிட்டுகள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளன.

Maserati GT2 Stradale

பெர்ஃபார்மென்ஸ்

இந்த புதிய மசராட்டி GT2 ஸ்ட்ராடேல் காரில் 3.0 லிட்டர் ட்வின் டர்போ V6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 631 எச்பி பவரையும், 729 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (DCT) இணைக்கப்பட்டுள்ளது. ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த கார் வெறும் 2.8 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. மேலும், அதிகபட்சமாக மணிக்கு 324 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

Also Read

ரேஸ் கார் போன்ற வடிவமைப்பு

இந்த காரின் வடிவமைப்பில் மசராட்டி நிறுவனம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. முன்பக்கத்தில் புதிய பம்பர், பெரிய ஏர் இன்டேக்குகள் மற்றும் பக்கவாட்டில் வழங்கப்பட்ட ஏர் வென்ட்டுகள் ஆகியவை காரின் தோற்றத்தை மேலும் ஆக்ரோஷமாக மாற்றுகின்றன. அதே நேரத்தில் எஞ்சினை குளிர்விக்கும் திறனையும் சிறப்பாக கையாள உதவுகின்றன.

கார்பன் ஃபைபர் பாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், MC20 காரைவிட GT2 ஸ்ட்ராடேல் 60 கிலோ எடை குறைவாக உள்ளது. மேலும், பின்புறத்தில் பிரம்மாண்டமான ரியர் விங், ரேசிங் டிஃப்யூசர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவை மணிக்கு 280 கிமீ வேகத்தில் செல்லும்போது 500 கிலோ டவுன்ஃபோர்ஸை உருவாக்க உதவுகின்றன. இதனால், கார் அதிக நிலைத்தன்மையுடன் செல்லும்.

Also Read

உட்புற வசதிகள்

இந்த காரின் உட்புறம் MC20 காரின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், செவ்வக வடிவ இன்ஃபோடெயின்மென்ட் திரை ஆகியவை இடம்பெற்றுள்ளன. கேபினில் அல்கான்டரா (Alcantara) மெட்டீரியல் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கார்பன் ஃபைபர் ரேசிங் இருக்கைகள், 4 பாயிண்ட் சீட் பெல்ட்டுகள், ஸ்போர்ட்ஸ் ஸ்டீயரிங் வீல் மற்றும் கார்பன் ஃபைபர் பேடில் ஷிஃப்டர்கள் ஆகியவை இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன. Corsa, Sport, GT மற்றும் Wet என நான்கு டிரைவிங் மோடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

மசராட்டி GT2 ஸ்ட்ராடேல் கார் வெறும் சொகுசு காராக மட்டுமல்லாமல், சாலையில் பந்தயக் காரின் வேகத்தையும் செயல்திறனையும் அனுபவிக்க விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதால், இந்தியாவில் இந்த கார் அறிமுகமாகியிருப்பது சூப்பர் கார் பிரியர்களுக்கு நிச்சயம் சிறப்பான விஷயமாகவே இருக்கும்.

Article Published On: Saturday, October 31, 2026, 10:08 [IST]
English summary
Maserati gt2 stradale launched india price engine performance
மேலும்... #maserati
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out