மத்திய அரசு போட்ட ஒரே கையெழுத்து... பாதி விலைக்கு கார் தரும் பிரபல கார் கம்பெனி!
மெக்லாரன் நிறுவனத்தின் கார்களின் விலைகள் சுமார் ரூ.3.3 கோடி வரையில் இந்தியாவில் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதனால் இந்த குறைப்பு என்பதையும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
இந்திய அரசாங்கத்திற்கும், யுனினெட் கிங்டம் அரசாங்கத்திற்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இதன் விளைவாக பிரிட்டிஷ் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான இறக்குமதி வரி இந்தியாவில் குறைய உள்ளது. இதனால், அந்த பொருட்களின் விலைகள் இந்தியாவில் குறைய உள்ளன.

அந்த வகையில், பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த லேண்ட் ரோவர், ரோல்ஸ்-ராய்ஸ் போன்ற கார் நிறுவனங்களின் கார்களின் விலைகளும் குறையும் சூழல் உருவாகியுள்ளது. இதன்படி, மற்றொரு பிரிட்டிஷ் கார் நிறுவனமான மெக்லாரனின் கார்களின் விலைகளும் சுமார் ரூ.3.3 கோடி அளவிற்கு வெகுவாக குறையவுள்ளன. இதனை பற்றி தான் ஆரம்பத்தில் பார்த்திருந்தோம்.
இந்தியா-யுகே இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின்படி, யுகே-இல் தயாரிக்கப்படும் 3 லிட்டருக்கும் அதிகமான பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.5 லிட்டருக்கும் அதிகமான டீசல் என்ஜினை கொண்ட வாகனங்களுக்கான இறக்குமதி வரி பெரிய அளவில் குறைக்கப்பட உள்ளது. தற்போதைக்கு 110% ஆக இருக்கும் இந்த இறக்குமதி வரி முதல் வருடத்தில் 30% ஆக குறைக்கப்பட உள்ளது.

அதனை தொடர்ந்து, அடுத்த 5 வருடங்களில் வெறும் 10% ஆக குறைக்கப்பட உள்ளது. இவ்வாறு குறைவான இறக்குமதி வரியை பெற வேண்டுமெனில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களை ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் இறக்குமதி செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரபலமான 750எஸ், 750எஸ் ஸ்பைடர் மற்றும் ஜிடிஎஸ் உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் கார்களை மெக்லாரன் நிறுவனம் விற்பனை செய்கிறது.
இந்த மெக்லாரன் கார்கள் அனைத்திலும் 4 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. ஆனால், ஜிடிஎஸ் காரில் மட்டும் இந்த என்ஜின் வெளிப்படுத்தும் அதிகப்பட்ச இயக்க ஆற்றல் சற்று குறைவாக உள்ளது. மூன்று மெக்லாரன் கார்களிலும் இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு சீம்லெஸ் ஷிஃப்ட் கியர்பாக்ஸ் (SSG) இணைக்கப்படுகிறது.
தற்சமயம் ரூ.7.94 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் மெக்லாரன் 750எஸ் காரில் 0-இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை வெறும் 2.7 வினாடிகளில் எட்டிவிடலாம். மெக்லாரன் 750எஸ் ஸ்பைடர் தற்சமயம் ரூ.8.78 கோடியிலும், மெக்லாரன் ஜிடிஎஸ் ரூ.6.15 கோடி விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதிலேயே விலை குறைவான மெக்லாரன் காராக விளங்கும் ஜிடிஎஸ்-இல் 0-இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை 3.2 வினாடிகளில் அடைந்துவிடலாம். இந்த காரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 326கிமீ ஆகும். அதுவே, மெக்லாரன் 750 காரில் இன்னும் அதிகமாக மணிக்கு 332கிமீ வேகம் வரையில் செல்லலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மெக்லாரன் கார்களின் தற்போதைய விலையை வைத்து பார்த்தால், இவற்றின் விலை கிட்டத்தட்ட பாதியாக குறையவுள்ளது. குறிப்பாக, மெக்லாரன் ஜிடிஎஸ் காரின் விலை ரூ.3.83 கோடி என்கிற அளவிற்கு குறையவுள்ளது. இதனால், எப்படியாவது ஒரு மெக்லாரன் காரை வாங்கிவிட வேண்டும் என விரும்புபவர்களுக்கு இதன்பின் காலம் அமைய உள்ளது.


Click it and Unblock the Notifications