ரூ.3.80 கோடியில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஆஃப்ரோடு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி கிளாஸ் மாடலுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சொகுசு, அதிக செயல்திறன் மற்றும் கரடுமுரடான சாலைகளிலும் பயணிக்கும் தொழில்நுட்ப அம்சங்களை இந்த எஸ்யூவி ஒருங்கே வழங்குவதால் பலரின் கனவு ஆஃப்ரோடு மாடலாகவும் உள்ளது. இந்த எஸ்யூவியின் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட மாடல் ஏஎம்ஜி பிராண்டிலும் உள்ளது. இந்த நிலையில், ஏஎம்ஜி பிராண்டில் உள்ள ஜி க்ளாஸ் எஸ்யூவியின் ஜி63 மாடல் தற்போது அதிக ஆஃப்ரோடு தகவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் கொண்ட மாடல் மெர்சிடிஸ் ஏஎம்ஜி G63 Offroad Pro என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த புதிய மாடலுக்கு ரூ.3.80 கோடி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஜி 63 மாடலுடன் ஒப்பிடும்போது, ஆஃப்ரோடு பயணத்தை மையமாக வைத்து சஸ்பென்ஷன், சக்கரங்கள், டிரைவிங் கட்டுப்பாடுகள் மற்றும் வெளிப்புற உபகரணங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களே விற்பனைக்கு ஒதுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mercedes Benz G63 Offroad Pro

இந்த காரின் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று AMG Active Ride Control என்ற விசேஷ சஸ்பென்ஷன் அமைப்பாக தெரிவிக்கப்படுகிறது. கரடுமுரடான பாதைகளில் வாகனம் செல்லும்போது சக்கரங்களின் இயக்கத்தை சிறப்பாக கட்டுப்படுத்துவதுடன், பாடி ரோல் குறைவாகவும், அதிகமாக சாய்வதையும் இந்த தொழில்நுட்பம் குறைக்கிறது. குறிப்பாக கற்கள், மணல் மற்றும் சீரற்ற நிலப்பரப்புகளில் வாகனத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்தும் வகையில் இந்த வசதி செயல்படும்.

ஆஃப்ரோடு பயன்பாட்டுக்காக AMG Traction PRO மற்றும் AMG Active Balance Control என இரண்டு பிரத்யேக வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. Traction PRO அமைப்பில் ஏழு நிலைகளில் சக்கரங்களுக்கான பிரேக்கிங் சிஸ்டத்தின் கட்டுப்பாட்டை மாற்றிக்கொள்ள முடியும். இதன் மூலம் மணல், சேறு அல்லது கற்கள் நிறைந்த பாதைகளில் தேவையான பிடிப்பை பெறுவதற்கு ஓட்டுனர் வாகனத்தின் செயல்பாட்டை மாற்றிக்கொள்ள முடியும்.

Also Read

அதேபோல், Active Balance Control அமைப்பு சஸ்பென்ஷனின் உடல் சாய்வு கட்டுப்பாட்டை LOW, MID, HIGH என மூன்று நிலைகளில் மாற்றுவதற்கு உதவுகிறது. குறைவான வேகத்தில் கற்கள் நிறைந்த பாதைகளைக் கடக்கும்போதும், வேகமாக திறந்த வெளிப்பகுதியில் செல்லும்போதும் வெவ்வேறு அமைப்புகளை பயன்படுத்த முடியும். இதனால் சாதாரண சாலை பயணத்தையும் தீவிரமான ஆஃப்ரோடு பயணத்தையும் எளிதாக கையாள்வதற்கு இது உதவும்.

வெளிப்புற தோற்றத்திலும் வழக்கமான ஜி 63-யை விட ஆஃப்ரோடு தன்மை அதிகமாக வெளிப்படுகிறது. இந்த மாடலில் 20 அங்குல AMG 5-twin-spoke மேட் பிளாக் அலாய் சக்கரங்கள் மற்றும் ஆல்-டெரெயின் டயர்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், கூரை மீது பொருட்களை எடுத்துச் செல்வதற்கான Professional roof rack வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பின்புறத்தில் தனி ஏணியும் கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read

இந்த எஸ்யூவியில் சக்திவாய்ந்த 4.0-லிட்டர் ட்வின் டர்போ V8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதனுடன் 48V மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த இன்ஜின் அதிகபட்சமாக 585 எச்பி பவரையும் மற்றும் 850 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. கூடுதலாக மைல்டு ஹைபிரிட் அமைப்பு குறைந்த வேகத்தில் கூடுதல் திறனையும் வழங்குகிறது.

இந்த ஆஃப்ரோடு எஸ்யூவியில் நான்கு சக்கரங்களுக்கும் எஞ்சின் சக்தியை வழங்கும் AMG Performance 4MATIC தொழில்நுட்ப வசதி உள்ளது. நிறுவனத்தின் தகவல்படி, 0 முதல் 100 கி.மீ வேகத்தை வெறும் 4.4 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது. அதிகபட்ச வேகம் மின்னணு முறையில் 240 கி.மீ வேகம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஃப்ரோடு பயணத்திற்கு தேவையான தகவல்களை எளிதாக பார்க்கும் வகையில் விசேஷ அம்சங்கள் உள்ளன. பிரத்யேக ஆஃப்ரோடு காக்பிட் திரையில் ஸ்டீயரிங் கோணம், உயரம், டயரில் காற்றழுத்தம், திசைகாட்டி தகவல் மற்றும் டிஃபரென்ஷியல் லாக் நிலை போன்ற விவரங்களை கண்காணிக்க முடியும். இதனுடன், வாகனத்தின் முன்பகுதியை கேமரா மூலம் தெளிவாக பார்க்க உதவும் Transparent Bonnet வசதியும் உள்ளது.

வழக்கம்போல் ஏஎம்ஜி பிராண்டு என்பதை பறைசாற்றும் விதத்தில், உயர்தர உட்புற அமைப்பு, ஏஎம்ஜி பெர்ஃபார்மன்ஸ் ஸ்டீயரிங் சிஸ்டம், MBUX தொழில்நுட்பம், சிறப்பு தொழில்நுட்ப நேவிகேஷன் மற்றும் பர்மெஸ்டர் ஆடியோ போன்ற வசதிகள் இதில் இடம்பெறுகின்றன. அதாவது, கடினமான ஆஃப்ரோடு பாதைகளில் பயணிக்கும் திறனுடன் நகர்ப்புற பயன்பாட்டுக்குத் தேவையான பிரீமியம் அனுபவத்தையும் இந்த மாடல் வழங்கும்.

Article Published On: Wednesday, September 23, 2026, 16:30 [IST]
English summary
Mercedes amg g 63 offroad pro launched india price features
மேலும்... #new launches #mercedes benz
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out