ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால் சென்னை-பெங்களூரு போய்ட்டு ரிட்டர்ன் வந்துடலாம்! புதிய எலெக்ட்ரிக் பென்ஸ் கார்...

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் அதன் புதிய சி-கிளாஸ் இவி (C-Class EV) எலெக்ட்ரிக் காரை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்துள்ளது. உலகளவில் பிரபலமான பென்ஸ் கார்களுள் ஒன்றான சி-கிளாஸ் முற்றிலுமாக எலெக்ட்ரிக் வெர்சனில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. அதற்கு முன்னதாக இந்த எலெக்ட்ரிக் காரை பற்றிய விபரங்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன.

புதிய சி-கிளாஸ் இவி காரில் முக்கியமான மாற்றமாக, இந்த கார் பிரத்யேகமான இவி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், முன்பை விட அதிக தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் காரில் 94kWh திறன் கொண்ட பேட்டரியை 800 வோல்ட் எலெக்ட்ரிக்கல் சிஸ்டத்தில் மெர்சிடிஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

mercedes-benz c-class ev unveiled

புதிய சி-கிளாஸ் இவி காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 762கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். 330 கிலோவாட்ஸ் டிசி ஃபாஸ்ட் சார்ஜரில் சார்ஜ் செய்தால், 325கிமீ தொலைவிற்கான சார்ஜை வெறும் 10 நிமிடங்களில் பெற்றுவிடலாம். புதிய சி-கிளாஸ் இவி காரின் செயல்திறன்மிக்க சி400 4மேட்டிக் வேரியண்ட் ஆனது சுமார் 360 கிலோவாட்ஸ் வரையிலான இயக்க ஆற்றலை பெறக் கூடியதாக உள்ளது.

இந்த சி400 4மேட்டிக் வேரியண்ட்டில் 0-இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை வெறும் 4 வினாடிகளில் எட்டிவிடலாம். இந்த எலெக்ட்ரிக் காரின் பின்பக்கத்தில் 2-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. பொருட்களை வைக்க இந்த காரின் பின்பக்கத்தில் 470 லிட்டர்கள் கொள்ளளவில் பூட் ஸ்பேஸ் இடவசதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் இடவசதிக்காக காரின் முன்பக்கத்திலும் பொனெட்டிற்கு அடியில் 101 லிட்டர் கொள்ளவிற்கு இடவசதி வழங்கப்பட்டுள்ளது.

mercedes-benz c-class ev unveiled

புதிய சி-கிளாஸ் எலெக்ட்ரிக் கார் ஆனது அதிகப்பட்சமாக 1.8 டன்கள் வரையில் எடை கொண்ட வாகனங்களை இழுத்து செல்லும் திறன் கொண்டுள்ளது. விரும்புவோர் கூடுதல் கட்டணத்தை செலுத்தி அடாப்டிவ் டேம்பிங் உடன் ஏர் சஸ்பென்ஷனையும் இந்த காரில் பெறலாம். தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய சி-கிளாஸ் ஆனது மெர்சிடிஸின் இன்றைய கால எலெக்ட்ரிக் கார்களை பெரிதும் ஒத்துள்ளது.

இந்த காரின் மேற்கூரை ஆனது கூபே-போன்றதான டிசைனில் உள்ள நிலையில், காரின் பின்பக்கம் ஆனது ஃபாஸ்ட்பேக் போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது. முன்பக்க க்ரில் ஒளிரக்கூடியதாகவும், எல்இடி டிஆர்எல்-கள் ஸ்டார் வடிவிலும் உள்ளன. இதனால், இந்த காரின் முன்பகுதியை பார்க்கும்போது நமது எஸ்-கிளாஸ், சிஎல்ஏ, இக்யூஎஸ் மற்றும் ஜிஎல்சி இவி உள்ளிட்ட லேட்டஸ்ட் பென்ஸ் கார்கள் நினைவிற்கு வருகின்றன.

புதிய சி-கிளாஸ் இவி-இன் உட்புறத்தில் டாஷ்போர்டில் 39.1 இன்ச்சில் எம்பக்ஸ் ஹைப்பர்ஸ்க்ரீன் ஆனது டாஷ்போர்டு முழுவதற்குமாக வழங்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் ஓ.எஸ் மூலம் ஓவர்-தி-ஏர் அப்டேட்களை பெறக்கூடிய இந்த ஹைப்பர்ஸ்க்ரீன் ஆனது ஏஐ உதவியுடன் குரல் மூலம் கண்ட்ரோல் செய்யக் கூடியதாக உள்ளது.

மேலும், சார்ஜிங் நிலையங்கள் அருகில் எங்கு உள்ளன என்பதையும் இந்த திரையின் வாயிலாக அறியலாம். இவற்றுடன், பனோராமிக் சன்ரூஃப், கேபினை சுற்றிலும் வண்ண விளக்குகள், மல்டி-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் மசாஜ் & வெண்டிலேஷன் செயல்பாடுகளுடன் எலெக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய இருக்கைகள் உள்ளிட்ட வழக்கமான வசதிகளும் புதிய சி-கிளாஸ் இவி-இல் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ் நிறுவனம் இதுவரையில் உருவாக்கியதிலேயே மிகவும் பவர்ஃபுல்லான மற்றும் ஸ்போர்டியரான சி-கிளாஸ் கார் இதுவாகும். இத்தகைய சிறப்புமிக்க புதிய சி-கிளாஸ் இவி முதலாவதாக அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்படும். அதனை தொடர்ந்து இந்திய சந்தைக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் கொண்டுவரும் என கூறப்பட்டாலும், அதனை இன்னும் மெர்சிடிஸ் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 22, 2026, 11:47 [IST]
English summary
Mercedes benz c class ev unveiled range features battery all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+