மிடில்-கிளாஸ் மக்களும் முயற்சித்தால் வாங்கக்கூடிய விலையில் புதிய பென்ஸ் கார்! மெர்சிடிஸின் நீண்ட நாள் கனவு!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் ஒரு எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய கடந்த சில மாதங்களாகவே திட்டமிட்டு வருகிறது. ஆனால், அது தள்ளிப் போய் கொண்டே வந்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் 10ஆம் தேதி அந்த பென்ஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கப்பட்டன. இருப்பினும், காரின் அறிமுக தேதி எப்போது என்பது எதிர்பார்ப்புக்கு உள்ளான ஒன்றாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த விலை குறைவான எலெக்ட்ரிக் பென்ஸ் காரின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம். இந்தியாவில் பிரபலமான பென்ஸ் கார்களுள் ஒன்று, சிஎல்ஏ (CLA) ஆகும். ஏனெனில், குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டதினால், அப்பர்-மிடில்-கிளாஸ் மக்களால் கூட சிஎல்ஏ காரை வாங்க முடிந்தது.

mercedes-benz cla electric car india launch date

இருப்பினும், 2020ஆம் ஆண்டில் சிஎல்ஏ காரின் விற்பனையை இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுத்தியது. பிஎஸ்6 (BS6) மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப காரை அப்கிரேட் செய்ய வேண்டியிருந்ததாலும், அந்த சமயத்தில் கொரோனா வைரஸ் (Corona Virus) பரவலினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளாலும் சிஎல்ஏ இந்திய மார்க்கெட்டை விட்டு சென்றது.

ரூ.40- 50 லட்ச ரூபாயில் பிராண்ட்-நியூ சொகுசு காரை வாங்க விரும்பியவர்களின் முதன்மையான சாய்ஸாக சிஎல்ஏ இருந்ததால், அதன் மறு அறிமுகம் எப்போது இருக்கும் என்பது அப்போதில் இருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் சிஎல்ஏ மீண்டும் பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் வெளிவராது, மாறாக எலெக்ட்ரிக் (Electric) வெர்சனில் வரும் என தகவல்கள் வெளியாகின.

mercedes-benz cla electric car india launch date

அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 10இல் சிஎல்ஏ எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளை மெர்சிடிஸ்-பென்ஸ் துவங்கியது. இந்த நிலையில், இந்த புதிய எலெக்ட்ரிக் காரை வருகிற ஏப்ரல் 24ஆம் தேதி மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் மூலமாக இந்திய எலெக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்த மெர்சிடிஸ் தயாராகி வருகிறது. மெர்சிடிஸின் செடான் (Sedan) ரக எண்ட்ரி-லெவல் எலெக்ட்ரிக் காராக வரும் சிஎல்ஏ எலெக்ட்ரிக், இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஏ-கிளாஸ் லிமௌசைன் (A-Class Limousine) காருக்கும், இ.க்யூ.ஏ (EQA), இக்யூபி (EQB) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கும் மாற்றாக கொண்டுவரப்படுகிறது.

கூபே போன்றதான தோற்றத்தில் பின்பக்கத்தில் மேற்கூரையை கொண்டிருக்கும் புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரின் ஏரோடைனமிக் தோற்றம் தான் அதன் பலம் ஆகும். முன்பக்கத்தில் பளபளப்பான கருப்பு நிறத்தில் மூடப்பட்ட கிரில் மற்றும் அதில் ஒளிரக்கூடிய மெர்சிடிஸின் 3-பாயிண்ட் ஸ்டார் லோகோவும், மெல்லிய லைட் பார் மூலம் இணைக்கப்பட்ட ட்வின்-பேட் எல்இடி ஹெட்லேம்ப்களும் இந்த எலெக்ட்ரிக் காரில் இடம்பெற்றுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் லக்சரி எலெக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் ஆதிக்கத்தை செலுத்த மெர்சிடிஸ் கடந்த சில வருடங்களாகவே முயற்சித்து வருகிறது. இதற்கு புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் உதவுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏப்ரல் 24ஆம் தேதியில் இந்த விலை குறைவான எலெக்ட்ரிக் பென்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டால், அடுத்த சில மாதங்களில் புக் செய்தவர்களுக்கு டெலிவிரி (Delivery) கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுவிடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 31, 2026, 21:58 [IST]
English summary
Mercedes benz cla electric car india launch date check all details here
மேலும்... #mercedes benz #cla #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+