மிடில்-கிளாஸ் மக்களும் வாங்கக்கூடிய புதிய பென்ஸ் கார்! இந்த விலையில் மட்டும் வந்துச்சுனா ரோடு முழுக்க இதுதான்!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் இந்தியாவில் அடுத்ததாக சி.எல்.ஏ எலெக்ட்ரிக் (CLA Electric) காரை ஏப்ரல் 24ஆம் தேதியான நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் எலெக்ட்ரிக் கார் அறிமுகங்களுள் ஒன்றான மெர்சிடிஸ் சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரை பற்றிய விபரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், விலைகள் அறிவிக்கப்பட்டு கார் நாளை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் சிஎல்ஏ 200 மற்றும் சிஎல்ஏ 250+ என இரு விதமான வேரியண்ட்களில் புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. முற்றிலும் புதிய பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் அதற்கேற்ப அதிகப்படியான ரேஞ்ச் மற்றும் கூர்மையான புதிய டிசைனை பெற்றுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பென்ஸ் காரின் முக்கிய சிறப்பம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெளிப்புற தோற்றம் & வசதிகள்: புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் ஆனது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் டிசைன் மொழியில் நேர்த்தியாக, ஏரோடைனமிக் (Aerodynamic) உடலமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முன்பக்கத்தில் கூர்மையான எல்இடி டிஆர்எல் உடன் எல்இடி ஹெட்லைட்களும், பின்பக்கத்தில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட எல்இடி லைட்பாரும் வழங்கப்பட்டுள்ளது.
முழுவதுமாக மூடப்பட்ட, முற்றிலும் கருப்பு நிறத்திலான முன்பக்க க்ரில்லில் மெர்சிடிஸின் ஸ்டார் லோகோ வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க பம்பரில் காற்று செல்வதற்கான துளைகள் இடம்பெற்றுள்ளன. இந்த காரின் பக்கவாட்டில் 18 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் மற்றும் பறித்து இழுக்கக்கூடிய வகையிலான கதவு கைப்பிடிகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரின் உட்புறத்தில் டாஷ்போர்டில் 14 இன்ச்சில் பொழுதுபோக்கிற்கான இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன், 10.25 இன்ச்சில் டிரைவருக்கு தேவையான விபரங்களை வழங்கும் திரையும் இந்த காரின் டாஷ்போர்டில் கொடுக்கப்பட்டுள்ளது. 3-ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரத்தில் சில டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இருக்கைகள் அனைத்தும் லெதரேட்டட் அப்ஹோல்ஸ்டரியில் உள்ளன. மேலும், இந்த எலெக்ட்ரிக் காரில் பனோராமிக் கண்ணாடி ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், ஹீட்டிங் & மசாஜ் செயல்பாடுகளுடன் பவர்டு முன் இருக்கைகளையும் மெர்சிடிஸ் வழங்கியுள்ளது.
| Dimension | International-Spec Mercedes-Benz CLA Electric |
| Length (mm) | 4,723 |
| Width (mm) | 1,855 |
| Height (mm) | 1,468 |
| Wheelbase (mm) | 2,790 |
| Boot Space (litres) | 405 |
| Frunk Space (litres) | 101 |
எலெக்ட்ரிக் மோட்டார் சிஸ்டம்: புதிய மெர்சிடிஸ் சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரின் சிஎல்ஏ 250+ வேரியண்ட்டில் பின்பக்கத்தில் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் அதற்கு ஆற்றலை வழங்க 85kWh பேட்டரி வழங்கப்படுகிறது. இதன் மூலமாக அதிகப்பட்சமாக 268 எச்பி மற்றும் 335 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.
சிஎல்ஏ 250+ வேரியண்ட்டின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 792கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். மற்றப்படி, சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரின் விலை குறைவான சிஎல்ஏ 200 வேரியண்ட்டில் என்ன மாதிரியான பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட உள்ளது என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், இதில் 542கிமீ வரையிலான ரேஞ்சை பெறலாம் என கூறப்படுகிறது.
விலை: விலையை பொறுத்தவரையில் புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரின் சிஎல்ஏ 200 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ரூ.55 லட்சம் என்கிற அளவிலும், லாங் ரேஞ்ச் வேரியண்ட்டான சிஎல்ஏ 250+ -இன் விலை ரூ.59 லட்சமாகவும் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனை நிறுத்தப்பட்ட மெர்சிடிஸ் இக்யூஏ (EQA) மற்றும் இக்யூபி (EQB) எலெக்ட்ரிக் கார்களுக்கு மாற்றாக கொண்டுவரப்படுவதால், கிட்டத்தட்ட அவற்றின் விலைகளில் இந்த புதிய காரை எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விலை குறைவான சொகுசு கார்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவும், அதேநேரம் தனது எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரை மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இதன் விலை மட்டும் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு நிர்ணயிக்கப்பட்டால், நிச்சயமாக இந்த புதிய கார் அதற்கான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்பது உறுதி.
அட்டவணை சேர்க்கப்பட்டது.


Click it and Unblock the Notifications