926 கிமீ ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் கார்.. 10 நிமிஷம் சார்ஜ் பண்ணா 320 கிமீ பயணம் செய்யலாம்.. அட்டகாசமா இருக்கு

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனமானது EQS எலெக்ட்ரிக் செடான் மாடலை சர்வதேச அளவில் மேம்படுத்தியிருக்கிறது. பவர்ட்ரெயின், ரேஞ்சு மற்றும் தொழில்நுட்பம் என அனைத்து வகைகளிலும் முந்தைய மாடலில் இருந்து மேம்பட்டிருக்கிறது புதிய ஃபேஸ்லிப்ட் மாடல். புதிய 800V எலெக்ட்ரிக் கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டிருப்பதால், பேட்டரியின் திறன் மேம்பட்டிருப்பதோடு, ரேஞ்சும் கூடியிருக்கிறது.

சர்வதேச அளவில் இந்த எலெக்ட்ரிக் செடான் மாடலை, EQS 400, EQS 450+, EQS 500 4MATIC மற்றும் EQS 580 4MATIC எனப் பல்வேறு வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது மெர்சிடீஸ் பென்ஸ். இதில் டாப் எண்டான EQS 580 4MATIC வேரியன்டே இந்தியாவில் விற்பனையில் இருக்கிறது. சர்வதேச அளவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், விரைவில் இந்தியாவிலும் இந்த மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிப்ட் மாடலை மெர்சிடீஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mercedes Benz EQS Backside

எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி மற்றும் ரேஞ்சு:

புதிய EQS செடானில் புதிதாக என்னென்னவெல்லாம் மாறியிருக்கிறது மற்றும் மேம்பட்டிருக்கிறது என்பதை இங்கே நாம் பார்க்கலாம். EQS 450+ வேரியன்டானது தற்போது 926 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொடுக்கும் திறனைக் கொண்டிருக்கிறது. இது முன்பை விட 13% அதிகமாகும். மேலும், இது EQS-ஐ அதிக ரேஞ்சு கொண்ட செடான் மாடல்களில் ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது.

அடிப்படையான EQS 400 வேரியன்டானது 817 கிமீ வரையிலான ரேஞ்சையும், 500 4MATIC மற்றும் 580 4MATIC வேரியன்ட்கள் 876 கிமீ வரையிலான ரேஞ்சையும் கொண்டிருக்கின்றன. இந்த மாடல்களில் தற்போது 122 kWh பேட்டரி பேக்கைக் கொடுத்துள்ளது மெர்சிடீஸ். 112 kWh பேட்டரி பேக் தேர்வும் EQS 400 வேரியன்டுடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Mercedes Benz EQS Inside

நான்கு வேரியன்ட்களிலும் 367 hp முதல் 585 hp வரையிலான பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 4MATIC என்பது 4 வீல் டிரைவ் வசதியைக் குறிக்கிறது. எனவே அந்த வேரியன்ட்களில் 4 வீல் டிரைவ் வசதி இருக்கும் என்பதைத் தனியாக சொல்ல வேண்டியதில்லை.

350 kW வரையிலான அதிவேக சார்ஜிங் திறனைக் கொண்டுள்ளது புதிய EQS. இதன் மூலம் 320 கிமீ வரை பயணம் செய்வதற்கு தேவையான ஆற்றலை வெறும் 10 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் எனத் தெரிவித்துள்ளது மெர்சிடீஸ் பென்ஸ். ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தற்போது 385 kW ஆக, 33% வரை உயர்ந்திருக்கிறது.

டிசைன்:

முன்பக்கமும் பின்பக்கமும் குறிப்பிட்டத்தக்க சில டிசைன் மாற்றங்களை மேற்கொண்டிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். ஒட்டுமொத்தமாக EQS செடானின் கூபே போன்ற வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. முன்பக்கம், முன்பு விற்பனையில் இருந்த காரில் இருந்து தனித்துத் தெரியும் வகையிலான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக முகப்பு விளக்குகள், கிரில் மற்றும் பம்பர் ஆகியவற்றில் அந்த மாற்றங்களை நாம் பார்த்தவுடன் தெரிந்து கொள்ள முடிகிறது.

புதிய காரின் கிரில் மற்றும் முகப்பு விளக்கு டிசைன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. புதிய டிஜிட்டல் லைட் முகப்பு விளக்குகள் ஹை பீமில் 600 மீட்டர்கள் வரை ஒளியை உமிழும் திறனைக் கொண்டுள்ளன. DRL-ல் ஸ்டார் வடிவ எலமெண்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிதாக மறுவடிவமைக்கப்படும் S-கிளாஸ், CLA, GLC EV ஆகியவற்றில் கொடுக்கப்பட்டிருப்பதைப் போலவே இருக்கிறது இந்தப் புதிய டிசைன்.

பெரிய ஏர்டேம் மற்றும் குரோம் எலமெண்ட்களுடன் முன்பக்க பம்பக் மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. காரின் பின்பக்கம் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. முன்பக்கத்தை ஒத்திருக்கும் வகையில் பின்பக்கமும் பம்பர் மறுவடிவமைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பின்பக்க லைட் பாரில் உட்புற டிசைன் சற்று மாறியிருக்கிறது, அவ்வளவு தான்.

வசதிகள்:

காரின் உட்புறம் முந்தைய EQS மாடலில் உள்ளது போலவே MBUX ஹைப்பர் ஸ்கிரீன் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. காரின் மொத்த அகலத்திற்கும் நீளும் ஒரே கிளாஸ் பேனலில் மூன்று திரைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதில் புதிய MB.OS சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பதோடு, தற்போது ஓவர்-தி-ஏரில் (Over-the-air) அப்டேட்களைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

புதிய ஃபேஸ்லிப்ட் மாடலின் உட்புறம் நாம் பார்த்தும் நம் கவனத்தைப் பெறுவது ஸ்டீயரிங் வீல் தான். வழக்கமான வட்ட வடிவ ஸ்டீயரிங் வீலைக் கொடுக்காமல் யோக் ஸ்டைல் (Yoke Style) ஸ்டீயரிங் வீலைக் கொடுத்திருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். பார்ப்பதற்கு பட்டாம்பூச்சி போன்ற வடிவமைப்பில் கொஞ்சம் ஸ்டைலாகவே இருக்கிறது. ஆனால் இது ஆப்ஷனல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவமைப்பு மட்டுமில்லாது ஸ்டீயரிங் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ். புதிய காரில் ஸ்டீயர்-பை-வயர் (Steer-by-wire) தொழில்நுட்பம் கொடுக்கப்படவுள்ளது. கார் வெளியான சில மாதங்களில் இந்த வசதியைக் மெர்சிடீஸ் அறிமுகப்படுத்தவுள்ளது. பின்இருக்கைப் பயணிகளுக்கு 13.1 இன்ச் எண்டர்டெயின்மென்ட் ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட காரின் சில அம்சங்களையும் கட்டுப்படுத்த முடியுமாம்.

வெளியீடு மற்றும் விலை:

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இந்த மேம்படுத்தப்பட்ட EQS எலெக்ட்ரிக் செடான் மாடலானது இந்த 2026ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதன் இந்திய வெளியீடு குறித்த தகவல்கள் ஏதும் இப்போது இல்லை. எனினும் மேலே கூறியது போல ஏற்கனவே EQS 590 4MATIC மாடல் இந்தியாவில் விற்பனையில் இருப்பதனால், இந்த மேம்பட்ட ஃபேஸ்லிப்ட் வெர்ஷனும் இந்தியாவில் வெளியிடப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு மற்ற நாடுகளில் வெளியாகும் நிலையில், 2027ல் மேம்படுத்தப்பட்ட மாடலை இந்தியாவில் நாம் எதிர்பார்க்கலாம். இந்த டாப் EQS எலெக்ட்ரிக் செடான் மாடலானது தற்போது ரூ.1.30 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேம்படுத்தப்படும் புதிய ஃபேஸ்லிப்ட் மாடலானது இதனை விட கூடுதல் விலையிலேயே வெளியாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் EQS செடானுடன் ஒப்பிடும் போது பல்வேறு வகையிலும் மிகவும் மேம்பட்ட காராகவே இருக்கிறது புதிய மெர்சிடீஸ் பென்ஸ் EQS. ஃபேஸ்லிப்ட் தானே என்று சில அப்டேட்களை மட்டும் கொடுக்காமல், கிட்டத்தட்ட புதிய காரின் அனுபவத்தைக் கொடுக்கும் அளவிற்கு இந்த எலெக்ட்ரிக் கார் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அனைத்து வசதிகளையும் கொண்ட டாப் எண்டு மாடலே விற்பனையில் இருப்பதால் இந்திய வாடிக்கையாளர்களும் அப்டேட் செய்யப்பட்டிருக்கும் அனைத்து வசதிகளையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 15, 2026, 12:01 [IST]
English summary
Mercedes benz eqs electric sedan updated facelift model revealed globally
மேலும்... #mercedes benz #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+