8 பேர் இல்ல, அதுக்கு மேலயும் ஏத்திட்டு போகலாம்! புக் செய்றவங்களுக்கு வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும்!

ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), இந்தியாவில் தனது புதிய வி-கிளாஸ் (V-Class) காரை 2026 மார்ச் 3 அன்று அறிமுகப்படுத்த உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. 2022ஆம் ஆண்டில் முந்தைய தலைமுறை வி-கிளாஸ் கார் நிறுத்தப்பட்ட பிறகு, நிறுவனத்தின் சொகுசு எம்பிவி (MPV) கார்கள் வரிசையில் மீண்டும் அது இணைகிறது.

புதிய வி-கிளாஸ், இந்தியாவில் கடைசியாக விற்கப்பட்ட அதன் முந்தைய தலைமுறையின் புதுப்பிக்கப்பட்ட வெர்சனாக, ரூ.1 கோடிக்கும் மேலான ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆடம்பர எம்பிவி பென்ஸ் கார் ஆனது டொயோட்டா வெல்ஃபயர் (Toyota Vellfire), லெக்ஸஸ் எல்.எம் (Lexus LM) மற்றும் எம்ஜி எம்9 (MG M9) எலக்ட்ரிக் கார் போன்ற மாடல்களுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது.

mercedes-benz v-classindia launch date

இந்தியாவிற்கான புதிய மெர்சிடிஸ் வி-கிளாஸ், வி 220டி (V 220d) என்கிற ஒரேயொரு டீசல் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சொகுசு பென்ஸ் காரில் வழங்கப்பட உள்ள 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின், காமன்-ரயில் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 190 பிஎஸ் அதிகபட்ச ஆற்றலையும், 440Nm உச்ச டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் (9G-TRONIC) கியர்பாக்ஸ் பொருத்தப்படுகிறது. இது காரின் பின் சக்கரங்களுக்கு ஆற்றலைக் கடத்துகிறது. புதிய தலைமுறை வி-கிளாஸ் காரின் வெளிப்புற வடிவமைப்பில், மாற்றியமைக்கப்பட்ட முன்பக்க கிரில், மேம்படுத்தப்பட்ட LED ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட பம்பர்கள் ஆகியவை அடங்கும்.

mercedes-benz v-classindia launch date

இதன் தனித்துவமான பகல்நேர ரன்னிங் விளக்குகள் (DRLs) மற்றும் குரோம் ஆக்சென்ட்கள் உள்ளிட்டவை இந்த எம்பிவி காரின் வடிவமைப்பை தற்போதைய மெர்சிடிஸ் வடிவமைப்புக் கொள்கையுடன் நேர்த்தியாக இணைகின்றன. மெர்சிடிஸ் வி-கிளாஸ் காரின் உட்புறத்தில், டாஷ்போர்டில் இரண்டு டிஜிட்டல் டிஸ்ப்ளேக்களைக் கொண்டுள்ளது. இவற்றுள் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் மத்திய இன்ஃபோடெயின்மென்ட் திரை ஆகியவை அடங்கியுள்ளன.

எட்டு பேர் வரை அமரக்கூடிய பல கேப்டன்-இருக்கை ஆப்ஷன்கள் மற்றும் நெகிழ்வான மூன்று வரிசை லேஅவுட்கள் இதன் சிறப்பம்சம் ஆகும். பல ஏர்பேக்குகள், தானியங்கி அவசரகால பிரேக்கிங், பயணத்தின்போது காருக்கு குறுக்கே வீசும் காற்றை தடுப்பதற்கான உதவி மற்றும் டயர்களில் காற்றழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வி-கிளாஸ் வருகிறது. மேலும், மல்டி-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல யுஎஸ்பி-சி சார்ஜிங் (USB-C Charging) போர்ட்டுகளையும் கொண்டுள்ளது.

mercedes-benz v-classindia launch date

வெளிநாடுகளில் விற்கப்படும் வி-கிளாஸ், நீளமான வீல்பேஸ் மற்றும் கூடுதல் நீளமான வீல்பேஸ் என இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எனினும், இவை இரண்டில் எந்த மாடல் இந்தியாவிற்கு வரும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மெர்சிடிஸ் நிறுவனம் இ.க்யூ.வி (EQV) என்கிற வி-கிளாஸ் காரின் முழு-எலக்ட்ரிக் வெர்சனையும் விற்கிறது. ஆனால் இது தற்போது இந்தியாவிற்கு வரும் வாய்ப்பு குறைவு.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய மெர்சிடிஸ் வி-கிளாஸ் காரின் இந்தியாவிற்கான முழு விலை பட்டியலையும், வேரியண்ட் விவரங்களையும், தொழிற்நுட்ப அம்சங்களையும் 2026 மார்ச் 3 அன்று நடைபெறும் வெளியீட்டு விழாவில் மெர்சிடிஸ் நிறுவனம் வெளியிடும். இந்த சொகுசு எம்பிவி கார் சிபியூ (CBU) வழியில் இந்தியாவில் முழு காராக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதால், விலைகள் அதிகமாக இருப்பினும், கார் அறிமுகம் செய்யப்பட்டதும் அங்கீகரிக்கப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் டீலர்ஷிப்கள் (Dealerships) மூலம் விரைவாகவே டெலிவிரிகள் (Deliveries) தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, February 6, 2026, 15:13 [IST]
English summary
Mercedes benz has confirmed new v class luxury mpv car india launch date
மேலும்... #mercedes benz #v class #luxury car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X