வெளியே என்ன நடந்தாலும் உள்ளே எதுவும் தெரியாது! 4 வருஷத்துக்கு பின் வந்த சாலையில் மிதக்கும் சொகுசு 'கப்பல்'!!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் அறிவித்தப்படி, இன்று (மார்ச் 2) அதன் புதிய வி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் (V-Class Facelift) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனம் உருவாக்கும் மிகவும் பிரம்மாண்டமான சொகுசு எம்பிவி காரான வி-கிளாஸை ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்கிரேட் செய்து அறிமுகம் செய்வதால் இந்த காரின் அறிமுகம் மிகவும் கவனத்தை பெற்றுள்ளது.

இந்தியாவில் அளவில் பெரியதான கார்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உள்ளது; அது விலையுயர்ந்த காராக இருந்தாலும் சரி. ஏனெனில், அதிக பயணிகளை அழைத்து செல்லலாம் அல்லவா... அத்தகைய கஸ்டமர்களை டார்க்கெட் செய்து மெர்சிடிஸ் நிறுவனம் வி-கிளாஸ் என்கிற உலகளவில் வெற்றி பெற்ற எம்பிவி (MPV) ரக காரை கடந்த சில வருடங்களாகவே விற்பனை செய்து வருகிறது.

2026 mercedes-benz v-class facelift

இருப்பினும், புதிய வி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை உருவாக்க ஆரம்பித்ததால் 2022இல் வி-கிளாஸ் காரின் விற்பனையை இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுத்தியது. அதனை தொடர்ந்து, 2023இல் வெளிநாடுகளில் வி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை மெர்சிடிஸ் அறிமுகப்படுத்திவிட்டது. ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்ய கிட்டத்தட்ட 3 வருடங்களை எடுத்துக் கொண்டுள்ளது. ஒருவழியாக தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2026 வி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுக ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.1.40 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய வி-கிளாஸ் முழுவதுமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த சொகுசு எம்பிவி காரை இந்தியாவிலேயே அசெம்பிள் (Assemble) செய்து முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்ய மெர்சிடிஸ் திட்டமிட்டு இருப்பது அதன் விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதற்கு முக்கிய காரணம் ஆகும்.

2026 mercedes-benz v-class facelift

மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள சாகான் தொழிற்சாலையில் புதிய மெர்சிடிஸ் வி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் அசெம்பிள் செய்யப்படவுள்ளது. இந்த காருக்கான முன்பதிவுகள் தற்போது துவங்கப்பட்டுள்ள நிலையில், புக் செய்தவர்களுக்கு கார் டெலிவிரி (Delivery) கொடுக்கும் பணிகளும் இந்த மார்ச் மாதத்திலேயே துவங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பப்படுவோர் 4-சீட்டர் மற்றும் 6-சீட்டர் ஆப்ஷன்களில் இந்த சொகுசு எம்பிவி காரை வாங்கலாம்.

இந்த இரு இருக்கை ஆப்ஷன்களுள் எதில் வாங்கினாலும் காரின் பரிமாண அளவுகள் ஒன்றே. புதிய வி-கிளாஸின் நீளம் 5,370மிமீ, அகலம் 1,928மிமீ, உயரம் 1,880மிமீ மற்றும் வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) 3,430மிமீ ஆகும். மெர்சிடிஸ் உருவாக்கும் கார்களிலேயே முன் & பின் சக்கரங்களுக்கு இடையே அதிக தூரத்தை கொண்ட காராக புதிய வி-கிளாஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

2026 mercedes-benz v-class facelift

அப்சிடியன் கருப்பு, ஹை-டெக் சில்வர், அல்பைன் கிரே, சோடாலைட் நீலம் மற்றும் கிரிஸ்டல் வெள்ளை ஆகிய கலர் ஆப்ஷன்களில் புதிய வி-கிளாஸ் கிடைக்கும். ஏஎம்ஜி லைன் (AMG Line) பேக்கேஜ் உடன் கிடைக்கும் இந்த புதிய காரின் முன்பக்கத்தில் மெர்சிடிஸ் நிறுவனத்திற்கே உண்டான 3-பாயிண்ட் ஸ்டார் லோகோ பளபளப்பானதாக வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன், மல்டி-பீம் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் ஸ்போர்டியான பம்பர்களை முன் & பின்பக்கத்தில் கொண்டுள்ள புதிய வி-கிளாஸ் காரில் வேன்களில் வழங்கப்படுவதை போன்ற தள்ளக்கூடிய கதவுகள் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு இணையாக, புதிய வி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புற கேபினும் ஒட்டுமொத்தத்தில் பிரைவேட் ஜெட்டிற்கு இணையான லக்சரி தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, 2வது இருக்கை வரிசையில் 'இண்டிவிடியூவல் சீட்ஸ்' (Individual Seats) என்கிற பெயரில் முழுக்க முழுக்க நட்சத்திர பயணிகளுக்கு சொகுசான பயணத்தை வழங்கும் நோக்கத்துடன் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த காரில் அனைத்து இருக்கைகளும் ஹீட்டிங், வெண்டிலேஷன் மற்றும் மசாஜ் செயல்பாடுகளுடன் உள்ளன. இவ்வாறு, ஒரு காரில் அனைத்து இருக்கைகளும் இந்த வசதிகளை கொண்டிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும்.

புதிய வி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி300டி டீசல் என்ஜின் மற்றும் வி300 மைல்ட்-ஹைபிரிட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரு என்ஜின்களும் 9-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். தேவைக்கேற்ப டேம்பிங்கை வழங்கும் ஏர்மேட்டிக் ஏர் சஸ்பென்ஷனை இந்திய சாலைகளுக்காக மெர்சிடிஸ் வழங்கியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் லக்சரி எம்பிவி கார்கள் பிரிவில் மெர்சிடிஸ்-பென்ஸ் வி-கிளாஸ் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. ஆதலால், அதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கும் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இருக்கைகள் அனைத்திற்கும் ஹீட்டிங், வெண்டிலேஷன் மற்றும் மசாஜ் வசதியை வழங்கி பயணிகளின் சொகுசான பயணத்திற்கு மெர்சிடிஸ் கூடுதல் கவனம் செலுத்தி இருப்பதால் எதிர்பார்ப்பதை போல் புதிய வி-கிளாஸ் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் என கருதுகிறோம். விற்பனையில் இந்த பென்ஸ் காருக்கு லெக்ஸஸ் எல்.எம் (Lexus LM) மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் (Toyota Vellfire) ஆகியவை ஏற்கனவே போட்டியாக விற்பனையில் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, March 2, 2026, 15:53 [IST]
English summary
Mercedes benz launches new 2026 v class facelift in india price features engine all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X