இந்தியாவை பார்த்து உலகமே பொறாமைப்படுது... பென்ஸ் காரை எந்த நாட்டில் வாங்கினாலும் அது மேட்-இன்-இந்தியா தான்!!

இந்தியாவில் இ.க்யூ.எஸ் (EQS) எலெக்ட்ரிக் காரின் கொண்டாட்டப் பதிப்பு (Celebration Edition)-ஐ மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன், முதல்முறையாக மெர்சிடிஸ்-மேபேக் (Mercedes-Maybach) கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய மிக விரைவில் துவங்க போவதாகவும் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஎஸ் கொண்டாட்டப் பதிப்பு காரின் ஆரம்ப விலை ரூ.1.34 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் பளபளப்பான கருப்பு நிறத்தில், இந்த பண்டிகை காலத்தை டார்க்கெட் செய்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய கொண்டாட்டப் பதிப்பானது இக்யூஎஸ் எலெக்ட்ரிக் காரின் 450 மற்றும் 580 ஆகிய இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

mercedes-benz eqs celebration edition launched

இதில் 450 வேரியண்ட் ஆனது, ஐந்து இருக்கைகள் கொண்ட அதிநவீன சொகுசு எலெக்ட்ரிக் காராக விற்பனை செய்யப்படுகிறது. இதில் பொருத்தப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 265 kW ஆற்றலையும், 800 Nm டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. 0-100 கிமீ/மணி வேகத்தை 6.2 வினாடிகளில் எட்டும் இந்த வேரியண்ட், 775 கிமீ தூரம் வரை சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை வழங்குகிறது.

இதற்கு மாறாக, மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஎஸ் 580 வேரியண்ட், அதிக சக்திவாய்ந்த மற்றும் பல்துறை அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இது ஏழு பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதியைக் கொண்டுள்ளது. இந்த காரின் எலெக்ட்ரிக் மோட்டார் ஆனது 400 kW வரையிலான இயக்க ஆற்றலையும், 858 Nm டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது.

mercedes-benz eqs celebration edition launched

மேலும், 0-100 கிமீ/மணி வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டக்கூடிய இந்த வேரியண்ட்டை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் சற்றே அதிகமாக 809 கிமீ வரையில் பயணிக்கலாம். கூடுதல் மூன்றாவது வரிசை இருக்கைகள் மற்றும் மேம்பட்ட செயல்திறன் காரணமாக, இக்யூஎஸ் 580 குடும்பப் பயன்பாடு மற்றும் சிறந்த எலெக்ட்ரிக் மோட்டார் செயல்திறனை நாடும் வாடிக்கையாளர்களுக்கு முதன்மையான தேர்வாக விளங்குகிறது.

ஏற்கனவே கூறியதுபோல், புதிய இக்யூஎஸ் கொண்டாட்ட எடிசனின் அறிமுகத்துடன் ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ், தனது அதிநவீன எஸ்யூவி காரான 'ஜி.எல்.எஸ் மேபேக்' (GLS Maybach) காரை இந்தியாவில் தயாரிக்க உள்ளது. இதன் மூலம் அமெரிக்காவிற்கு வெளியே இந்த கார் தயாரிக்கப்படும் ஒரே நாடாக இந்தியா மாறும் என்று மெர்சிடிஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

indian production of mercedes-maybach cars

2025ஆம் ஆண்டில், மேபேக் கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையான நாடுகள் வரிசையில் முதல் ஐந்து சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாக மாறியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் CEO சந்தோஷ் ஐயர் தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டிற்கான நிறுவனத்தின் திட்டங்களைப் பகிர்ந்துகொண்ட சந்தோஷ் ஐயர், இந்த ஆண்டு இந்தியாவில் 12 புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்றார்.

ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக விலையில் அழுத்தம் இருந்தாலும், சொகுசு கார்கள் பிரிவு ஒற்றை இலக்க வளர்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த 2025ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த கார்கள் விற்பனையில் 19,007 யூனிட்களுடன் 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய வீழ்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது.

indian production of mercedes-maybach cars

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் மெர்சிடிஸ் கடந்த பல வருடங்களாகவே முதலிடம் பிடித்து வருகிறது. இதன் மூலமாக, இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் மார்க்கெட் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதற்கு மேபக் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டு இருப்பதுதான் சாட்சியாகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 14, 2026, 16:38 [IST]
English summary
Mercedes benz launches new eqs celebration edition and announces indian production of maybach
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X