ஒரு சொட்டு பெட்ரோல் கூட இல்லாமல் 100கிமீ ஓடக்கூடிய புதிய பென்ஸ் கார்! இந்தியாவிலேயே முதல்முறையாக!!

சொகுசு கார்களின் சக்கரவர்த்தியான மெர்சிடிஸ் பென்ஸ், தனது அதிநவீன '2026 எஸ்-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட்' (S-Class Facelift) காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி மீண்டும் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மிக பிரம்மாண்டமான தோற்றத்துடனும், அதிநவீன தொழில்நுட்பங்களுடனும் களமிறங்கியுள்ள இந்த சொகுசு காரின் ஆரம்ப அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.20 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக மெர்சிடிஸ் நிறுவனத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'பிளக்-இன் ஹைப்ரிட்' (Plug-in Hybrid) காரான இந்த புதிய எஸ்-கிளாஸில், சொகுசு மற்றும் செயல்திறனை மேலும் அதிகரிக்கும் வகையில் என்னென்ன புதிய ஆச்சரியங்கள் ஒளிந்துள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

mercedes-benz launches s-class plug-in hybrid

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் காரின் வெளிப்புற வடிவமைப்பில் மிகவும் நேர்த்தியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் முன்பக்க பம்பர் பெரிய ஏர்-இன்டேக்குகளுடன் மிகவும் கம்பீரமாக ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் தனித்துவமான ரசனைக்கேற்ப புதிய அலாய் வீல் டிசைன்கள் மற்றும் கண்கவர் கலர் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, 'MANUFAKTUR' புரோகிராம் மூலம் இன்னும் கூடுதலான பிரத்யேக எக்ஸ்டீரியர் ஃபினிஷ்களை தேர்வு செய்து கொள்ளலாம். காரின் உட்புறத்திற்குள் நுழைந்தால், எதிர்கால தொழில்நுட்ப உலகிற்குள் பயணிப்பது போன்ற உணர்வைத் தரும் மெர்சிடிஸ் பென்ஸின் அதிநவீன 'MBUX சூப்பர் ஸ்கிரீன்' (MBUX Superscreen) உங்களை வரவேற்கிறது.

mercedes-benz launches s-class plug-in hybrid

இதில் 14.4-இன்ச் OLED சென்ட்ரல் டச் ஸ்கிரீன், 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை மற்றும் பயணிகளுக்காக பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 12.3-இன்ச் டிஸ்பிளே ஆகியவை அடங்குகின்றன. மெர்சிடிஸ் பிராண்டின் புதிய MB.OS மென்பொருள் மூலம் இயங்கும் இந்த அமைப்பில், மேம்படுத்தப்பட்ட AI வசதிகள் மற்றும் MBUX விர்ச்சுவல் அசிஸ்டெண்ட் போன்றவை பயணத்தை மேலும் சுவாரசியமாக்குகின்றன.

டேஷ்போர்டு முதல் கதவுகள், பின் இருக்கைகள் வரை பரவியிருக்கும் புதிய ஆம்பியண்ட் லைட்டிங் காரின் சொகுசுத் தன்மையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. மிகச் சிறந்த சத்தம் தடுப்பு கட்டமைப்பு (Cabin Insulation) காரணமாக, வெளிப்புற சத்தமே கேட்காத ஒரு அமைதியான உலகத்தை இந்த காரின் உட்புறம் வழங்குகிறது.

எக்ஸிகியூட்டிவ் ரியர் சீட்ஸ் கொண்ட இந்த லாங்-வீல்பேஸ் காரின் பின் இருக்கைகள் 43.5 டிகிரி வரை சாய்ந்து படுக்கும் வசதி கொண்டவை என்பதோடு, ஹீட்டிங், வென்டிலேஷன் மற்றும் மசாஜ் போன்ற மிகச் சிறந்த சொகுசு அம்சங்களையும் கொண்டுள்ளன. புதிய எஸ்-கிளாஸ் S 450e காரில் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்லைன்-6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 22kWh பேட்டரி பேக் இணைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் இணைந்து ஒட்டுமொத்தமாக 435hp ஆற்றலையும், வியக்க வைக்கும் 680Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றன. இந்த அபாரமான இயக்க ஆற்றல், 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் காரின் பின் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.

வெறும் 5.7 வினாடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிப்பிடிக்கும் இந்த கார், செயல்திறனில் ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரானது ஆகும். இந்த காரில் உள்ள மற்றொரு மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இதன் 22kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதன் மூலம், ஒரு சொட்டு பெட்ரோல் கூட இல்லாமல் வெறும் மின்சாரத்தில் மட்டுமே உங்களால் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உங்களது தினசரி பயணங்களை முழுக்க முழுக்க அமைதியான, மாசு இல்லாத எலெக்ட்ரிக் மோடிலேயே இந்த புதிய பென்ஸ் காரில் கடந்துவிடலாம் என்பது எவ்வளவு வியப்பானது! இதன் மூலமாக, பெட்ரோல் செலவை குறைப்பது மட்டுமின்றி, பசுமையான சுற்றுச்சூழலுக்கும் வழிவகுக்கலாம். அதேநேரம் பென்ஸ் கார்களுக்கே உண்டான சொகுசு அம்சங்களையும் இந்த பிளக்-இன் ஹைப்ரீட் காரில் பெறலாம்.

Article Published On: Tuesday, June 16, 2026, 11:23 [IST]
English summary
Mercedes benz launches new s class plug in hybrid car in india price features top speed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out