11வது ஆண்டாக நம்பர் 1 இடத்தில் இருக்கும் நிறுவனம்! போட்டிக்கு ஆளே இல்லையா?
இந்தியாவில் கடந்த 2025 ஆம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சொகுசு கார் செக்மெண்டில் அதிக அளவிலான வாகனங்களை விற்பனை செய்து சிறப்பான சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக தொடர்ந்து 11வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
2025 ஆம் ஆண்டு முடிவடைந்துள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது தங்கள் வாகன விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகின்றன. அதன்படி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் இந்தியாவில் கலந்து 2025 ஆம் ஆண்டு எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்று விபரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி நிறுவனம் ஒரே ஆண்டு 19007 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இதன் மூலம் இந்நிறுவனம் திறந்து 11வது ஆண்டாக இந்தியாவில் சிறப்பாக சொத்துக்களை விற்பனை செய்யும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்த பட்டியலில் பிஎம்டபிள்யூ நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 181 வாகனங்களை பிஎம்டபிள்யூ மற்றும் மினி பிராண்டுகளில் விற்பனை செய்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை விற்பனையில் மட்டுமல்ல வருவாயிலும் சிறப்பான ஆண்டாகவே கடந்த ஆண்டு இருந்துள்ளது. இந்த பிராண்டில் எஸ்யூவி மற்றும் செடான் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
கடந்த 2025 ஆம் ஆண்டு முழுவதும் நிறுவனத்தின் சிறப்பாக விற்பனையாகி வரும் சொகுசு காராக இருந்துள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரும் சிறப்பாக விற்பனையாகியுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும் டாப் மாடல் கார்கள் ஒட்டுமொத்த விற்பனையில் 20 சதவீத பங்கை பிடித்துள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் வாகனங்களின் டாப் எண்டு வாகனங்களான எஸ் கிளாஸ் வெஸ்ட் இண்டீஸ் மே பேக் எம் ஜி ஆகிய மாடல்கள் சிறப்பான விற்பனை பெற்று வருகிறது. 11 சதவீதம் அளவுக்கு இந்த செக்மெண்டில் விற்பனை அதிகரித்து தற்போது ஒட்டுமொத்த விற்பனையில் 25 சதவீதமான வாகனங்கள் இந்த கிரக வாகனங்களாக உள்ளன. இதில் குறிப்பாக எம் ஜி பெர்பார்மென்ஸ் ரகங்கள் 34 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஏ எம் ஜி 63, ஏஎன்ஜிசிஎல்இ 53, ஏ எம் ஜி எல் சி 43 ஆகிய வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தொடர்ந்து 11வது ஆண்டாக இந்தியாவில் அதிக அளவிலான சொகுசு வாகனங்களை விற்பனை செய்யும் நம்பர் 1 நிறுவனமாக இருக்கிறது. இது ஒரு சாதாரண காரியம் அல்ல 11 ஆண்டுகள் ஒரே நிறுவனம் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது நிச்சயம் அந்நிறுவனத்தின் ஈடுபாட்டை காட்டுகிறது. குறிப்பாக சிறப்பான விற்பனை நல்ல வருமானம் மற்றும் அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு வருவதன் காரணமாக நிறுவனம் நல்ல விற்பனை பெற்று வருகிறது. தொடர்ந்து போட்டி நிறுவனங்களும் நிறுவனத்துக்கு இணையாக வளர்ந்து வருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு தனி பெயர் இருக்கிறது. இந்த பெயர் காரணமாகவே விற்பனை சிறப்பாக ஒரு பக்கம் நடந்தால் இன்னொரு பக்கம் தரமான கார்கள் நிறுவனத்தால் வழங்கப்படுவது மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. தொடர்ந்து இந்த 2026 ஆம் ஆண்டும் முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


Click it and Unblock the Notifications









