டீ குடித்து முடிக்குற நேரத்திற்குள் 400கிமீ போவதற்கான சார்ஜ்! மார்ச் 10இல் எத்தனை பேர் புக் பண்ண போறாங்களோ!!

ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆக புதியதாக சி.எல்.ஏ எலெக்ட்ரிக் (CLA Electric) காரை வெளியீடு செய்துள்ளது. விலைகள் அறிவிக்கப்பட்டு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதிய பென்ஸ் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மெர்சிடிஸ் நிறுவனம் கொண்டுவருகிறது.

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான செடான் (Sedan) ரக காராக, பெரும்பாலான மக்களால் வாங்ககூடியதாக சிஎல்ஏ விளங்குகிறது. இதன் எலெக்ட்ரிக் வெர்சன் முதன்முறையாக இந்தியாவில் வெளியாகி இருக்கிறது. மெர்சிடிஸின் இந்த புதிய எலெக்ட்ரிக் கார், அதன் ஏ-கிளாஸ் லிமோசின் காருக்கும், இ.க்யூ.ஏ மற்றும் இக்யூபி உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களுக்கும் போட்டியாக அமைகிறது.

mercedes-benz cla electric car unveiled

சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் வெளிப்பக்க வடிவமைப்பில், கூபே போன்ற அதன் தனித்துவமான தோற்றத்தை தக்க வைத்துக்கொண்டு, புதிய வடிவமைப்புடன் களமிறங்கியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார், நிறுவனத்தின் புதிய எம்.எம்.ஏ (Mercedes-Benz Modular Architecture) கட்டமைப்பில், அதிநவீன ஏரோடைனமிக்ஸ் அம்சங்களுடன் நேர்த்தியான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முகப்புப் பகுதியில், வழக்கமான கிரில் பகுதிக்கு பதிலாக, 142 அனிமேஷன் செய்யப்பட்ட மூன்று ஸ்டார்களுடன் ஒளிரும் பேனல் பொருத்தப்பட்டுள்ளது.

நட்சத்திர வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் இணைக்கப்பட்ட பின்பக்க டெயில்லேம்ப்களிலும் இந்த ஒளிரும் தீம் தொடர்கிறது. கார் ஸ்டார்ட் செய்யப்படும் போதும், சார்ஜ் செய்யப்படும் போதும் வெளிப்படும் அனிமேஷன்கள் இந்த ஒளிரும் தீம்-க்கு மேலும் அழக்கூட்டுகின்றன. காரின் பக்கவாட்டு பகுதில், பளபளப்பான கதவு கைப்பிடிகள் காரின் உடற்பகுதி உடன் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

mercedes-benz cla electric car unveiled

அதாவது, கைப்பிடிகள் தனியாக வெளியே தெரியவில்லை; கார் திறக்கப்படும்போது தானாக வெளியே வருகின்றன. இந்தியாவிற்கான இந்த எலெக்ட்ரிக் பென்ஸ் கார், ஸ்போர்ட்டியான டிசைனிலான பம்பர்கள், அலுமினியத்திலான பெடல்கள் மற்றும் 18-இன்ச் ஏஎம்ஜி (AMG) அலாய் சக்கரங்களை கொண்ட ஏஎம்ஜி லைன் பேக்கேஜ் உடன் வருகிறது.

உட்புறத்தைப் பொறுத்தவரை, புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் ஆனது மெர்சிடிஸின் சொந்த ஒஎஸ் (Mercedes-Benz Operating System) மூலம் இயங்கும் முதல் காராக அறிமுகமாகிறது. இது சிப்-டு-கிளவுட் மூலமாக, இன்ஃபோடெயின்மென்ட், ஓட்டுநருக்கான உதவி வசதிகள், சௌகரிய அம்சங்கள் மற்றும் சார்ஜிங் ஆகிய காரின் நான்கு முக்கிய கண்ட்ரோல்களை கட்டுப்படுத்தி செயல்படுத்துகிறது. இந்த அமைப்பு நெவிடியா (NVIDIA) சிப் மூலம் இயக்கப்படுகிறது.

mercedes-benz cla electric car unveiled

இந்த புதிய எலெக்ட்ரிக் காரில் 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை, 14-இன்ச் சென்ட்ரல் டச் ஸ்கிரீன், லேட்டஸ்ட் ஜென்ரேஷன் MBUX இன்டர்ஃபேஸ் மற்றும் ஏஐ வசதி உடன் கூடிய MBUX விர்ச்சுவல் உதவி (சாட் ஜிபிடி மற்றும் கூகுள் ஜெமினி ஆதரவுடன்) ஆகியவை உள்ளன. மேலும், மேம்பட்ட 3டி கிராபிக்ஸ் கொண்ட MBUX சரவுண்ட் நேவிகேஷனும் இதில் உள்ளது.

வயர்லெஸ் சார்ஜிங், ஆறு 100 வாட்ஸ் யுஎஸ்பி-சி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 40:20:40 என்கிற விகிதத்தில் பிரிக்கக்கூடிய பின் இருக்கைகள் மற்றும் ஓவர்-தி-ஏர் சாஃப்ட்வேர் அப்டேட்கள் போன்ற வசதிகளும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. தற்போதைக்கு 250+ என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரில் 800-வோல்ட் எலெக்ட்ரிக் மோட்டருடன் 85.5kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

mercedes-benz cla electric car unveiled

இது அதிகப்பட்சமாக 272 குதிரைத்திறனை (268 பிஎச்பி) உருவாக்குகிறது. 0-100 கிமீ வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எலெக்ட்ரிக் காரின் முக்கிய அம்சம், இதன் 792 கிமீ என்கிற WLTP சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் ஆகும். 2-ஸ்பீடு கியர்பாக்ஸ் இதன் மற்றொரு குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப அம்சமாகும். சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார், 240kW வரையிலான டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

இதன் மூலம், 800-வோல்ட் மின்சாரத்தில் 20 நிமிடங்களில் 400 கிமீ தூரத்திற்கான சார்ஜைப் பெற முடியும். இந்த எலெக்ட்ரிக் காருக்கு வருகிற மார்ச் 10ஆம் தேதி முதல் முன்பதிவுகள் துவங்கப்பட உள்ளன. ஏப்ரல் மாதம் இதன் அறிமுகத்திற்குப் பிறகு டெலிவரிகள் விரைவில் தொடங்கப்படும். மெர்சிடிஸ் நிறுவனம் இதுவரை விலையை அறிவிக்கவில்லை என்றாலும், இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.55 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் மூலம், மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் விலை குறைவான சொகுசு கார்களின் பிரிவில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துகிறது. லேட்டஸ்ட் பென்ஸ் கார் என்பதால் பல அதிநவீன வசதிகளை கொண்டுள்ள இந்த காரின் சுமார் 792கிமீ ரேஞ்ச் ஆனது அதன் பிரிவிலேயே மிக நீண்ட தூரம் செல்லும் எலெக்ட்ரிக் காராக புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரை முன்னிறுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 24, 2026, 17:49 [IST]
English summary
Mercedes benz unveils new cla electric car in india check pre booking date price details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X