இந்தியாவிலேயே விலை குறைவான பென்ஸ் கார்... அதுவும் எலெக்ட்ரிக் மோட்டார் உடன்! ஃபுல்-சார்ஜ் செய்தால் 792km பயணம்

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் அறிவித்தப்படி அதன் சி.எல்.ஏ எலெக்ட்ரிக் (CLA Electric) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.55 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய கார் ஆனது, இந்தியாவில் விலை குறைவான பென்ஸ் கார் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் காராக கொண்டுவரப்பட்டுள்ள இதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் அதன் ஏ-கிளாஸ் லிமௌசைன் (A-Class Limousine) காரையும், இ.க்யூ.ஏ (EQA) மற்றும் இ.க்யூ.பி (EQB) எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனையில் இருந்து நிறுத்தியது. இந்த நிலையில், தற்போது அவற்றின் இடங்களை நிரப்பும் விதமாக புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

mercedes-benz cla electric launched

விற்பனை நிறுத்தப்பட்ட கார்களை போன்று குறைவான விலையில்தான் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் இருக்கும் என ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறோம். அதன்படி, ரூ.55 லட்சத்தில் இருந்து புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மூன்று விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யபட்டுள்ள இந்த புதிய காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்னென்ன என்பதை கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் 58kWh மற்றும் 85kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 58kWh பேட்டரி ஆனது இந்த காரின் 'சிஎல்ஏ 200 ஸ்டாண்டர்ட் ரேஞ்ச்' வேரியண்ட்டிலும், 85kWh பேட்டரி 'சிஎல்ஏ 250+ லாங் ரேஞ்ச்' வேரியண்ட்டிலும் கிடைக்கும்.

mercedes-benz cla electric launched

வேரியண்ட்களின் பெயர்களை பார்த்தவுடனே தெரிந்திருக்கும், அவற்றின் ரேஞ்ச் (Range) வேறுப்பட்டதாக இருக்கும் என்பது. 58kWh பேட்டரி ஆனது முழுவதுமாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 542கிமீ வரையிலான ரேஞ்சையும், 85kWh பேட்டரி சுமார் 792கிமீ வரையிலான ரேஞ்சையும் வழங்கக்கூடியது என்று மெர்சிடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 58kWh பேட்டரி உடன் அதிகப்பட்சமாக 224 எச்பி மற்றும் 335 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காரில் பெறலாம்.

அதுவே, 85kWh பேட்டரியில் அதிகப்பட்சமாக 272 எச்பி மற்றும் அதே 335 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இதனால், பேட்டரியை பொறுத்து காரின் செயல்படுதிறனும் வேறுப்படுகிறது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை 58kWh பேட்டரியில் 7.5 வினாடிகளிலும், 85kWh பேட்டரியில் 6.7 வினாடிகளிலும் எட்டிவிடலாம்.

சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் ஆனது முன்பு விற்பனையில் இருந்த சிஎல்ஏ காரின் அடுத்த பரிணாம வளர்ச்சி ஆகும். புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் எதிர்காற்றில் எளிதாக நுழைந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாலும், முந்தைய சிஎல்ஏ காரை விட அளவில் பெரியதாகும். எந்த அளவிற்கு என்றால், நீளத்தில் 30மிமீ-உம், அகலத்தில் 25மிமீ-உம், உயரத்தில் 25மிமீ-உம் புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் பெரியதாக உள்ளது.

காரின் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் அதிக இடங்களில் மெர்சிடிஸின் 3-ஸ்டார் லோகோ டிசைனிலான பாகங்களை பார்க்க முடிகிறது. இதன்படி, காரின் முன்பக்க ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்களில் மெர்சிடிஸின் 3-பாயிண்ட் ஸ்டார் டிசைனில் பல்ப்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், காரின் முன்பக்க க்ரில் பகுதியில் சுமார் 142 பேக்லிட் 3-பாயிண்ட் ஸ்டார்கள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைந்த விலையில் விலையுயர்ந்த காரை வாங்க விரும்புபவர்களை மட்டுமின்றி, எலெக்ட்ரிக் லக்சரி கார் வாங்க விரும்புவோரையும் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் ஈர்க்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த தொகுப்பில் இந்த புதிய எலெக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்பம்சங்களை மட்டுமே சிறு தொகுப்பாக பார்த்துள்ளோம். இந்த காரின் வேரியண்ட்கள் ஒவ்வொன்றிலும் என்னென்ன மாதிரியான அம்சங்களை பெறலாம் என்பதை பற்றி பின்னர் இன்னொரு தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Article Published On: Saturday, April 25, 2026, 9:21 [IST]
English summary
Mercedes cla electric launched in india check price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+