மிகவும் குறைவான விலையில் அடுத்து வெளியாகும் புதிய எலெக்ட்ரிக் கார் இது தான்

இந்தியாவில் வெற்றிகரமான எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக எம்ஜி மோட்டாரை (MG Motor) கூறலாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை டாடா மோட்டார்ஸுக்கு அடுத்தபடியாக அதிகளவிலான எலெக்ட்ரிக் கார்களை எம்ஜி மோட்டாரை விற்பனை செய்து வந்தது. தற்போது அந்த இடத்தை மஹிந்திரா எடுத்துக் கொண்டது. எனினும் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எம்ஜி மோட்டாரின் எலெக்ட்ரிக் கார் போர்ட்ஃபோலியோவே மிகவும் சுவாரஸ்யமானது. மற்ற நிறுவனங்களில் இருந்து விலகி போல்டாக, யாரும் எதிர்பாராத வகையில் எல்லாம் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்தியாவில் வெளியிட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறது. குறிப்பாக காமெட் EV மற்றும் விண்ட்ஸர் EV ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களை சொல்லலாம்.

MG Binguo EV

காமெட் EV-யை நகர வாடிக்கையாளர்களுக்கான எலெக்ட்ரிக் காராக வெளியிட்டது எம்ஜி மோட்டார். இது போன்ற வழக்கமில்லாத டிசைனைக் கொண்ட காரை வெளியிடுவதற்தே ஒரு தைரியம் வேண்டும். அதன் விற்பனை மோசமில்லை என்று சொல்லலாம். மேலும் கடந்த மாதம் வரை காமெட் EV தான் இந்தியாவில் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக விண்ட்ஸர் EV. ஹேட்ச்பேக் போலவும் இல்லாமல், எஸ்யூவி போலவும் இல்லாமல், இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு கிராஸ்ஓவர் போல இந்த எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிட்டது அந்நிறுவனம். இதனை கிராஸ்ஓவர் யுட்டிலிட்டி வெஹிக்கிள் (CUV) எனவும் அழைத்தது எம்ஜி. இந்தக் கார் பெரிய ஹிட். இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக இந்த விண்ட்ஸர் EV-யே இருந்து வருகிறது.

MG Binguo EV

இந்த நிலையில் இவை இரண்டுக்கும் இடைப்பட்டு ஒரு புதிய எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்க எம்ஜி மோட்டார் திட்டமிட்டு வருகிறது. மேற்கூறிய இரண்டு கார்களும் வெளிநாடுகளில் வுல்லிங் (Wuling) என்ற ஆட்டோமொபைல் நிறுவனம் விற்பனை செய்யும் கார் மாடல்களின் இந்திய வடிவங்கள் தான். அந்த வகையில் வுல்லிங் நிறுவனம் விற்பனை செய்து வரும் பிங்குவோ (Binguo) என்ற எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிட எம்ஜி மோட்டார் முடிவு செய்திருக்கிறது.

ஏற்கனவே இந்தக் காரினை இந்தியாவில் அந்நிறுவனம் சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட ஸ்பைஷாட் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகின. எனவே இந்தக் காரினை இந்தியாவில் எம்ஜி மோட்டார் வெளியிடுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆனால் பிங்குவோ என்ற பெயரில் இல்லாமல், வேறு ஒரு புதிய பெயரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்ப்பதற்கு க்யூட்டான ஒரு எலெக்ட்ரிக் காராகவே இந்த பிங்குவோ இருக்கிறது. போதுமான வளைவு நெளிவுகளுடன் கிளாஸியாக லுக்கைக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், தனித்துவமான நிறங்களையும் இந்த எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கிறது. இந்தக் காரில் 31.9 kWh மற்றும் 50.6 kWh பேட்டரி பேக் தேர்வுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சிறிய பேட்டரி பேக்கானது 333 கிமீ வரையிலான ரேஞ்சையும், பெரிய பேட்டரி பேக்கானது 500 கிமீ வரையிலான ரேஞ்சையும் கொண்டுள்ளது.

இந்தோனேஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு தெற்காசிய நாடுகளில் வுல்லிங் பிராண்டின் மூலமாக இந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் காமெட் EV மற்றும் விண்ட்ஸர் EV-க்கு இடைப்பட்டு 10 லட்சம் ரூபாயை ஒட்டி விலையில் இந்த எலெக்ட்ரிக் கார் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவிலேயே இந்த க்யூட்டான குட்டி எலெக்ட்ரிக் காரின் அறிமுகத்தை இந்தியாவில் நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 15 லட்சம் ரூபாய்க்கு மேலான எலெக்ட்ரிக் கார்கள் பிரிவிலேயே தற்போது போட்டி அதிகமாக இருந்து வருகிறது. 10 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு கீழான பிரிவில் போட்டி ரொம்ப ரொம்ப குறைவு. எம்ஜியின் காமெட் EV-யுடன் டாடாவின் பன்ச் EV மற்றும் டியா EV ஆகியவை மட்டுமே இருக்கின்றன. எனவே இந்தப் பிரிவில் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை மையப்படுத்துவது சாமர்த்தியமான முடிவாகவே இருக்கும்.

Article Published On: Wednesday, June 17, 2026, 9:57 [IST]
English summary
Mg binguo ev low price electric car to be launched in india soon
மேலும்... #mg motor #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out