வெறும் 4.99 லட்சத்துக்கு எலெக்ட்ரிக் கார்! ஒரு டைம் சார்ஜ் பண்ணீட்டா ஒரு வாரத்துக்கு மேல ஓட்டலாம்!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று எம்ஜி கோமெட் இவி (MG Comet EV). இதன் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 766 எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு முந்தைய மாதம், அதாவது கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,143 எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

MG Comet EV Interior

இந்த வகையில் பார்த்தால் 377 எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 32.98 சதவீத வீழ்ச்சி ஆகும். ஆனால் மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் வீழ்ச்சி என்றாலும் கூட, வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார், விற்பனையில் மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 173 எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 766 எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது 593 எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன.

MG Comet EV

இதன் மூலம் விற்பனையில் 342.77 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து, எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் அசத்தியுள்ளது. இது மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும்.

பாஸ் (BAAS - Battery As A Service) முறையில், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 4.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. ஆனால் ஒரு கிலோ மீட்டருக்கு நீங்கள் 3.1 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். பாஸ் முறையில் அல்லாமல், பேட்டரியுடன் சேர்த்து, அதாவது வழக்கமான முறையில் காரை முழுமையாக வாங்கினாலும் கூட, இதன் ஆரம்ப விலை 7.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

இவை அனைத்துமே எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். செயல்திறனை பொறுத்தவரையில், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில், 17.4 kWh லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 230 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிரைவிங் ரேஞ்ச் (Driving Range), நகர பயன்பாடுகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். அலுவலகம் சென்று வருவது போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் இந்த எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தினால், அடிக்கடி சார்ஜ் செய்து கொண்டே இருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படாது. ஒரு முறை சார்ஜ் செய்து விட்டால், ஒரு வார காலத்திற்கு கூட, இந்த எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தலாம். ஆனால் இது தேவைகளை பொறுத்து மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரிக்கு 8 வருடங்கள் அல்லது 1.2 லட்சம் கிலோ மீட்டர்கள் வாரண்டி வழங்கப்படுகிறது. தலா 10.25 இன்ச் அளவில் (26.04 செமீ) டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளை (Features), எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் கொண்டுள்ளது.

அத்துடன் 55க்கும் மேற்பட்ட கனெக்ட்டட் கார் வசதிகளை உள்ளடக்கிய ஐ-ஸ்மார்ட் தொழில்நுட்பம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ரியர் பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற வசதிகளும், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் நீளம் 2,974 மிமீ மட்டுமே. அதே நேரத்தில் இதன் அகலமும் கூட வெறும் 1,505 மிமீ ஆக மட்டுமே உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை மிகவும் எளிமையாக ஓட்ட முடியும். எனவே நகர பயன்பாடுகளுக்கு ஏற்ற, அதே நேரத்தில் மிகவும் விலை குறைவான ஒரு எலெக்ட்ரிக் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு எம்ஜி கோமெட் இவி ஏற்றது என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, February 19, 2026, 12:32 [IST]
English summary
Mg comet ev sales report january 2026 343 per cent growth
மேலும்... #mg motor #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+