கம்மி விலையில் புத்தம் புதிய எலெக்ட்ரிக் காரை வெளியிட்டுள்ள நிறுவனம்.. இந்த வசதிக்காகவே வாங்கலாம்!
இந்தியாவில் அதிகளவிலான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது எம்ஜி மோட்டார். இந்த நிறுவனத்தின் விண்ட்ஸர் EV தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக 'கம்யூட்' (Commute) என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.
என்னடா இது, எந்த அறிவிப்பும் இல்லாமல் புதிய எலெக்ட்ரிக் காரா என்று யோசிக்க வேண்டாம். விண்ட்ஸர் EV-யின் டாக்ஸி மாடலைத் தான் கம்யூட் என்ற பெயரில் புதிதாக வெளியிட்டுள்ளது. மாருதி நிறுவனம் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் தனிநபர் பயன்பாட்டு காரை, அடிப்படை வசதிகளுடன் வணிக ரீதியிலான பயன்பாட்டிற்காக சற்று குறைவான விலையில் வேறு பெயரில் வெளியிடும். ஹூண்டாயும் அது போல சில கார்களை விற்பனையில் வைத்திருக்கிறது.

எம்ஜி மோட்டார் நிறுவனமானது எலெக்ட்ரிக் கார்களில் அதனைச் செய்திருக்கிறது. ஸ்டாண்டர்டு விண்ட்ஸர் EV-யை விட சற்று குறைவான விலையை இந்த கம்யூட் கார் கொண்டிருக்கிறது. வணிகப் பயன்பாட்டிற்காக குறைவான விலை கொண்ட கார் என்பதனால் சில வசதிகளும் குறைவாகவே இருக்கும். ஆனால் எலெக்ட்ரிக் கார்களின் விலை அடிப்படையிலேயே அதிகம் என்பதால், பயன்பாடு சொகுசாகவே இருக்கும்.
ஸ்டாண்டர்டான விண்ட்ஸர் EV மாடலின் அடிப்படையான எக்ஸைட் வேரியன்ட் ரூ.14.10 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. இந்நிலையில் புதிய கம்யூட் டாக்ஸி மாடலை ரூ.13.50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது எம்ஜி மோட்டார். இது ரூ.60,000 வரை குறைவான விலையாகும்.

விண்ட்ஸர் EV மாடலின் அடிப்படையான எக்ஸைட் வேரியன்டின் பெரும்பாலான வசதிகள் கம்யூட் மாடலிலும் உள்ளன. LED முகப்பு விளக்குகள், LED ஃபாக் விளக்குகள், ஃப்ளஷ் ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், 17 இன்ச் ஸ்டீல் வீல்கள், ஒன் டச் டவுன் ஃபங்ஷனுடன் கூடிய பவர் விண்டோக்கள் ஆகிய வசதிகள் உள்ளன.
காரின் உட்புறம், ரெக்லைனிங் சீட், டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் ஸ்டீயரிங், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பின்பக்க AC வெண்ட்கள், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட், எலெக்ட்ரானிக் கயர் செலக்டார், 7 இன்ச் LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், க்ரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் கோ, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளை புதிய கம்யூட் கொண்டுள்ளது.
பாதுகாப்பிற்காக இந்த எலெக்ட்ரிக் காரில் நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஆறு ஏர்பேக்குகள், ஹில் டிஸண்டு கண்ட்ரோல், இன்டைரக்ட் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகிய வசதிகளை எம்ஜி மோட்டார் நிறுவனம் கொடுத்திருக்கிறது. இது வணிகப் பயன்பாட்டிற்கான கார் என்பதால் மணிக்கு 80 கிமீ வரையில் வேகத்தைக் கட்டுப்படுத்தும் ஸ்பீடு லிமிட்டரும் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஆகிய பவர்ட்ரெயின் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. விண்ட்ஸர் EV-யின் கொடுக்கப்பட்டிருக்கும் அதே 38 kWh பேட்டரி பேக் தான். இத்துடன் 135 hp பவர் மற்றும் 200 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பவர்ட்ரெயினுடன் 332 கிமீ வரையிலான தினசரி பயன்பாட்டு ரேஞ்சைப் பெற முடியும் என எம்ஜி மோட்டார் உறுதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வணிகப் பயன்பாட்டிற்கான சிறப்பான எலெக்ட்ரிக் காராக விண்ட்ஸர் EV இருக்கும். டாக்ஸியாகவும் பயன்படுத்துவதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டது. எனினும் டாக்ஸி பயனாளர்களுக்கு இது சற்று கூடுதல் விலை தான். BaaS அம்சங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அது வணிகப் பயன்பாட்டு வாடிக்கையாளர்களே மிகவும் உதவிகரமான ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








