500கிமீ ரேஞ்ச், 7 பேர் பயணிக்கலாம்... இதுதாங்க எம்ஜியின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி... எப்டி இருக்கு?!

பண்டிகை காலத்தில் 7 சீட்டர் கார் வாங்க இருப்போரின் கவனத்தை எம்ஜி நிறுவனத்தின் புதிய ஹெக்டர் ஹாக் எஸ்யூவி ஈர்த்துள்ளது. வரும் 26ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த கார் எப்படியிருக்கும் என்று எல்லோரின் எதிர்பார்ப்பையும் கிளப்பி வருகிறது. இந்த நிலையில், முதல்முறையாக இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கேமரா கண்களில் சிக்கி பொது பார்வைக்கு வந்துள்ளது.

தொலைக்காட்சி விளம்பரத்திற்காக எந்த மறைப்பும் இல்லாமல் படப்பிடிப்பு நடந்தபோது கேமராவில் இந்த புதிய கார் சிக்கியிருக்கிறது. இதுவரை ஸ்பை படங்கள் மூலமாக அனுமானித்து கூறப்பட்ட டிசைன் அம்சங்களை இப்போது நேரடியாக பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துள்ளது.

MG Hector Hawk

சீனாவின் வூலிங் ஸ்டார்லைட் 560 எஸ்யூவியின் அடிப்படையில் எம்ஜி நிறுவனத்தின் அடாப்ட் என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையின் கீழ் இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஹெக்டர் ஹாக் என்ற பெயரில் இந்த புதிய எஸ்யூவி குறிப்பிடப்பட்டாலும், ஏற்கனவே உள்ள ஹெக்டர்களுக்கும் இதற்கும் சம்பந்தமிருக்காது.

மேலும், இந்த புதிய எஸ்யூவி 4.7 மீட்டர் நீளமும், 2,810மிமீ வீல்பேஸ் நீளமும் கொண்டதாக மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் வருகிறது. இதனால், 7 பேர் தாராளமாக அமர்ந்து செல்ல முடியும். இந்த எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், டியூவல் டோன் அலாய் சக்கரங்கள் இடம்பெறுவது தெரிய வந்துள்ளது. பின்புறம் சற்றே சாய்ந்த கூரை அமைப்புடன் கவர்ச்சியான டிசைனில் வருகிறது. இன்டீரியர் தீம் குறித்த தகவல்கள், படங்கள் இல்லை.

MG Hector Hawk

இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 56.7kWh மற்றும் 69.2kWh பேட்டரி பேக்குகள் வழங்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு மின் மோட்டார் கொண்டதாக இருக்கும். இந்த எஸ்யூவியின் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 500கிமீ தூரத்திற்கும் அதிகமாக செல்லும் வாய்ப்பை வழங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், வரும் 26ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று தெரிகிறது. குறிப்பாக, எம்ஜி நிறுவனம் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் மிக வலுவான இடத்தை பெறும் நோக்கத்தில் இந்த புதிய மாடலை இறக்க உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்கள் வரும் 26ந் தேதி வெளியிடப்பட உள்ளது. ரூ.21,000 செலுத்தி எம்ஜி டீலர்களில் முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

Source: punekar__nikhil@Instagram

Article Published On: Monday, August 17, 2026, 13:28 [IST]
English summary
Mg hector hawk 7 seater electric suv spied without camouflage first time
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out