517 கிமீ ரேஞ்ச்... அறிமுகமானது புதிய எம்ஜி ஹெக்டர் 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார்... விலை, சிறப்பம்சங்கள் விபரம்!!
பண்டிகை காலத்தில் புதிய எலெக்ட்ரிக் கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்திய எம்ஜி ஹெக்டர் தோமஹாக் எலெக்ட்ரிக் கார் சற்றுமுன் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அண்மையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த ADAPT என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்ட முதல் கார் மாடலாக இந்தியாவில் களமிறக்கப்பட்டு இருக்கிறது.
புதிய எம்ஜி ஹெக்டர் தோமஹாக் எலெக்ட்ரிக் கார் 4.7 மீட்டர் நீளமும், 1.8 மீட்டர் அகலமும், 1.75 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த கார் 2.8 மீட்டர் வீல்பேஸ் நீளம் பெற்றிருக்கிறது. இதனால், மூன்று இருக்கை வரிசையிலும் சிறப்பான இடவசதியை பெற முடியும்.

புதிய எம்ஜி ஹெக்டர் தோமஹாக் எலெக்ட்ரிக் கார் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கும். இதன் 5 சீட்டர் மாடலில் பூட்ரூம் 610 லிட்டர் என்றும் 7 சீட்டர் மாடலில் மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கினால் 528 லிட்டர் கொள்திறன் கொண்டதாக இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுனர் மற்றும் முன்இருக்கை பயணி இருக்கைகளுக்கு எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி இருப்பதுடன், ஓட்டுனர் இருக்கைக்கு மெமரி செய்து வைத்து பயன்படுத்தும் வசதியும் உள்ளது. இந்த காரில் 256 வண்ணங்களில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், 10 ஸ்பீக்கர்களுடன் இன்ஃபினிட்டி மியூசிக் சிஸ்டம், 15.9 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின்புற இருக்கைகளை சாய்த்துக் கொள்ளும் வசதி ஆகியவை உள்ளன. 8.7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமராவும் இடம்பெற்றுள்ளன. முதல்முறையாக 80க்கும் மேற்பட்ட கனெக்டெட் கார் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த காரில் 69.2kWh LFP பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது மிகவும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வெப்பத்தை தாங்கும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 517 கிமீ ரேஞ்ச் கொடுக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் மின் மோட்டார் 201பிஎச்பி பவரையும், 310 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த காரில் Vehicle To Load வசதியும் உள்ளது. இதனால், அவசர சமயங்களில் வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை இந்த காரின் பேட்டரியிலிருந்து பெற முடியும் என்பதும் முக்கிய விஷயமாக இருக்கிறது.

புதிய எம்ஜி ஹெக்டர் தோமஹாக் எலெக்ட்ரிக் கார் ரூ.19.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பேட்டரி சந்தா திட்டத்தின் கீழ் ரூ.13.99 லட்சத்தில் இந்த காரை வாங்க முடியும். நாடு முழுவதும் உள்ள அனைத்து எம்ஜி மோட்டார் ஷோரூம்களில் இன்றுமுதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். வரும் செப்டம்பர் முதல் டெஸ்ட் டிரைவ் வாய்ப்பும், டெலிவிரிப் பணிகளும் துவங்கப்பட உள்ளன.
This article has been updated with additional informations.


Click it and Unblock the Notifications
