ரூ.25.69 லட்சத்தில் எம்ஜி ஹெக்டர் தோமஹாக் ஹைப்ரிட் கார் அறிமுகம்: 1,100 கிமீ ரேஞ்ச் தரும் புதிய எஸ்யூவி!!

எம்ஜி மோட்டார் நிறுவனம் இன்று தோமஹாக் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வந்த கையோடு, அதன் ஹைப்ரிட் மாடலையும் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த கார் பெட்ரோல்- எலெக்ட்ரிக் மட்டுமின்றி, எலெக்ட்ரிக் மோடில் தனியாக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய காரு ரூ.25.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் 'மாஸ் மார்க்கெட்' பிரிவில் அறிமுகமாகும் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் வகை எஸ்யூவி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

ஹெக்டர் தோமஹாக் எலெக்ட்ரிக் மாடல் தவிர்த்து, பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்கும் பிளக் இன் ஹைப்ரிட் வகை ( PHEV) மாடலாக வந்துள்ளது. எலெக்ட்ரிக் கார் மாடல் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கும் நிலையில், இந்த தோமஹாக் PHEV மாடலானது 7 சீட்டர் வசதியுடன் மட்டுமே கிடைக்கும்.

MG Hector Hawk PHEV

பிளக் இன் ஹைப்ரிட் மாடல்

இந்த புதிய மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 20.5kWh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட தூரம் வரை பெட்ரோல் எஞ்சின் துணை இல்லாமல் மின் மோட்டாரில் மட்டுமே காரை ஓட்ட முடியும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 115 கிமீக்கும் அதிகமான ரேஞ்ச் கிடைக்கும் என எம்ஜி தெரிவித்துள்ளது. இதனால், தினசரி அலுவலகப் பயன்பாடு மற்றும் குறைந்த தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

Also Read

இதன் மற்றொரு முக்கிய அம்சமாக இந்த பிளக் இன் ஹைப்ரிட் மாடலானது பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து, பெட்ரோல் டேங்கையும் நிரப்பினால் 1,100 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என எம்ஜி கூறுகிறது.

MG Hector Hawk PHEV

விலை மற்றும் முன்பதிவு

எம்ஜி ஹெக்டர் தோமஹாக் PHEV காருக்கு ரூ.25.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பேட்டரி வாடகை அடிப்படையிலான BaaS திட்டத்திலும் இந்த காரை வாங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. BaaS முறையில் காரின் ஆரம்ப விலை ரூ.21.79 லட்சமாக இருக்கும். இதற்கு பேட்டரி பயன்பாட்டுக்கான தனி சந்தாக் கட்டணம் வசூலிக்கப்படும்.

நாடுமுழுவதும் உள்ள எம்ஜி மோட்டார் டீலர்களில் இந்த காருக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கான டெலிவரி பணிகள் வரும் நவம்பர் முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர பயணத்துக்கு பெட்ரோல் எஞ்ஜின் வசதியையும், அன்றாட பயன்பாட்டுக்கு எலெக்ட்ரிக் மோடில் வைத்து அதிக எரிபொருள் சிக்கனத்தையும் ஒரே காரில் வழங்குவது இதன் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.

Article Corrections

This article has been updated with more quality images of the car.
Article Published On: Wednesday, August 26, 2026, 13:30 [IST]
English summary
Mg hector tomahawk phev hybrid suv launched india 25 69 lakh 1100km range
மேலும்... #mg motor #mg hector #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out