ரூ.5 லட்சம் வரை விலை உயர்த்தப்பட்ட எலெக்ட்ரிக் கார்கள்.. என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!

இந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாஸ் மார்க்கெட் கார் மாடல்களின் விலைகளை உயர்த்தியது எம்ஜி. இதில் மூன்று எரிபொருள் கார்களும், மூன்று எலெக்ட்ரிக் கார்களும் அடக்கம். இவற்றிலிருந்து தனியாக இரண்டு ப்ரீமியம் எஸ்யூவி கார்களையும் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. எம்ஜி செலக்ட் என்ற பிரத்தியேக டீலர்ஷிப்கள் மூலமாக M9 மற்றும் சைபர்ஸ்டர் ஆகிய இரண்டு ப்ரீமியம் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது இந்த ப்ரீமியம் எலெக்ட்ரிக் கார் மாடல்களின் விலைகளையும் உயர்த்தியிருக்கிறது எம்ஜி. அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை இவற்றின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. எம்ஜி மோட்டாரின் இந்த ப்ரீமியம் எலெக்ட்ரிக் கார்களின் விலை உயர்வு குறித்து விரிவாக இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

MG M9 MPV

மேற்கூறிய இரண்டு கார் மாடல்களில் அதிகபட்ச விலை உயர்வைச் சந்தித்திருப்பது M9 எம்பிவி தான். இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் ஒரேயொரு சொகுசு எலெக்ட்ரிக் எம்பிவி மாடல் இந்த M9 தான். நேரடியாக இத்துடன் போட்டியிடுவதற்கு எந்தவொரு எலெக்ட்ரிக் எம்பிவியும் விற்பனையில் இல்லை. எனவே எரிபொருள் சொகுசு எம்பிவி கார்களுக்குப் போட்டியாகவே இந்த எம்ஜி M9 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தக் சொகுசு எம்பிவியின் விலையை ரூ.5 லட்சம் வரை உயர்த்தியிருக்கிறது எம்ஜி மோட்டார். ப்ரெஸிடென்ஷியல் லிமௌஸின் என்ற ஒரே வேரியன்டாக மட்டுமே இந்த எலெக்ட்ரிக் எம்பிவி மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து இனி ரூ.75.90 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் எம்ஜி M9 எலெக்ட்ரிக் எம்பிவி விற்பனை செய்யப்படவுள்ளது.

MG Cyberster EV

கியா கார்னிவல், டொயோட்டா வெல்ஃபயர், மெர்சிடீஸ் பென்ஸ் V கிளாஸ் மற்றும் லெக்சஸ் LM ஆகிய சொகுசு எம்பிவி கார்களுக்குப் போட்டியாக எலெக்ட்ரிக் வடிவில் எம்ஜி M9 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலே கூறியது போல மேற்கூறிய அனைத்துமே எரிபொருள் எம்பிவி கார் மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக எம்ஜி சைபர்ஸ்டர். இதன் விலையை ரூ.2.5 லட்சம் வரை உயர்த்தியுள்ளது எம்ஜி மோட்டார். இந்த ரோட்ஸ்டர் வகை கன்வர்டிபிள் எலெக்ட்ரிக் கார் மாடலானது விலை உயர்வைத் தொடர்ந்து இனி ரூ.77.49 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளது.

மினி கூப்பர் கன்வர்டிபிள் கார் மாடலைத் தொடர்ந்து இந்தியாவில் குறைவான விலையைக் கொண்டிருக்கும் இரண்டாவது எலெக்ட்ரிக் கன்வர்டிபிள் கார் மாடல் இந்த சைபர்ஸ்டர் தான். ரோட்ஸ்டர் வகை பெர்ஃபாமன்ஸ் எலெக்ட்ரிக் காரான இது மணிக்கு 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.2 நொடிகளில் எட்டும் திறனைக் கொண்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காருக்குப் போட்டியாக தற்போது இந்தியாவில் வேறெந்தக் கார் மாடலும் விற்பனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்ஃபாமன்ஸுக்குப் பெயர் போன இந்த சைபர்ஸ்டர் எலெக்ட்ரிக் காரில் 77 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்குடன் 580 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொண்டுள்ளது இந்த எலெக்ட்ரிக் கார். எம்ஜி M9 மாடலானது 90 kWh பேட்டரி பேக்குடன், சிங்கிள் சார்ஜில் 548 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாஸ் மார்க்கெட் பிரிவில் தனித்துவமான வாடிக்கையாளர்கள் விரும்பக்கூடிய வகையிலான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் மற்ற எந்த நிறுவனங்களை விடவும் எம்ஜி மோட்டாரே முன்னணியில் இருக்கிறது. அதேபோல் சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் பிரிவிலும் மேலே கூறியது போல வேறெந்த நிறுவனமும் இல்லாத வகையிலான எலெக்ட்ரிக் கார்களை விற்பனையில் வைத்திருக்கிறது. விலை கூடினாலும் எம்ஜி கார்களுக்கென தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இருப்பார்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, April 20, 2026, 19:29 [IST]
English summary
Mg m9 mpv and cyberster electric cars price hiked in india
மேலும்... #mg motor #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+